துளசி (Thulasi) |
Benefits of Thulasi | Health
இந்த பதிவின் மூலம், நமது பாரத நாட்டில் அனைவராலும் அறியக்கூடிய ஒரு மூலிகை தாவரமான துளசியை பற்றியும், அதனுடைய மகத்துவங்கள் பற்றியும் அறிந்துக்கொள்ளலாம்.
பொருளடக்கம்
- துளசியை பற்றிய தகவல்கள்
- துளசியின் மருத்துவ குணங்கள்
துளசியை பற்றிய தகவல்கள்:
மூலிகை தாவரமான துளசி, மூலிகைகளின் இராணி என அழைக்கப்படுகின்றது. அதிகப்படியான மணத்தினை கொண்ட இது மூளைக்கு புத்துணர்ச்சியை அளிக்க கூடியது.
இந்த துளசிமருத்துவர் செய்யக்கூடிய மகத்தான வேலைகளைக் செய்யக்கூடியது. நம் உடலில் ஏற்படும் துயரங்களை துடைக்கும் துளசி தனி சிறப்பு வாய்ந்தது. இது பெரும்பாலும் இந்தியா மற்றும் இலங்கையில் வளரக்கூடியது.
இதில் பல்வேறு வகைகள் உள்ளன. எல்லா வகைகளுமேமருத்துவ குணம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. சிறு தாவரமாக இருந்தாலும், இதில் எண்ணற்ற சிறப்புகள் உள்ளன.
துளசி |
இதனை கருதியே நம் முன்னோர்கள் துளசியை தெய்வ மூலிகையாக வணங்கி வந்தனர். ஆயிரம் மலர்கள் நிறைந்த ஒரு வனத்தில் ஒரு துளசி இல்லையெனில், அது காடாகவே கருதப்படும்.
அதுவே துளசி மட்டுமே நிறைந்த காடானது நந்தவனம் என்றே அழைக்கப்படும்.
இது அதிகப்படியான ஆக்ஸிஜனை வெளியிடும் என்பதாலேயே காலை வேளையில் நம் முன்னோர்கள் இதனை சுற்றி வந்தனர். நம் வீட்டில் வளர்க்கவும் செய்தனர்.
காலை வேளையில் ஆக்ஸிஜனை அதிகமாக சுவாசிப்பதால், நமது மூளை, இரத்தம் மற்றும் சுவாசத்தில் புத்துணர்ச்சியும், எண்ணற்ற பயன்களும் கிடைக்கின்றன.
இதன் நன்மையை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் இதனை கோவில்களில் பிரசாதங்களாக தருகின்றனர். இது பெரும்பாலும் விஷ்ணு கோவில்களில் பிரசாதமாகவும் தரப்படுகிறது.
துளசி மலர் |
துளசியின் பயன்கள்:
இதில் உள்ள இலைகள் மட்டுமல்லாது பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன.
இதன் மருத்துவ குணத்தால் இதனை ஆயுர்வேத மருந்துகளில் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.
துளசி தனியாகவோ அல்லது தேன் மற்றும் இஞ்சி போன்றவற்றோடு எடுத்து கொண்டாலும் பலனை அளிக்கக்கூடியது.
காய்ச்சல் மற்றும் தலைவலி நீங்க
அந்த காலத்தில் துளசி ஒரு கைகண்ட மருத்துவ மூலிகையாக விளங்கியது.
காய்ச்சல் ஏற்பட்டால் துளசி இலைகள் இரண்டை வாயில் போட்டு மென்றால் காய்ச்சல் காணாமல் போய்விடும். உடலில் ஏற்படும் அதிகமான வெப்பத்தையும் குறைக்கும்.
துளசி இலையை பொடியாக்கி, அதனுடன் சந்தன பொடியையும் சேர்த்து தலையில் பற்றுப்போட்டால் தலைவலி விலகும்
துளசி |
சளி மற்றும் இருமல் நீங்க
கடுமையான சளி மற்றும் இருமல் இருந்தால் இந்த இலையை நன்றாக மென்று, அதனுடைய சாற்றை விழுங்கினால் இருந்த இடம் தெரியாமல் சளி மற்றும் இருமல் காணாமல் போய்விடும்.
வாயில் ஏற்படும் பிரச்சனை
வாயில் துர்நாற்றம் வீசினாலோ, ஈறுகளில் ஏதேனும் வலி இருந்தாலோ துளசியை உலர வைத்து பொடிச் செய்து கொள்ளவேண்டும்.
அதனுடன் கடுகு எண்ணெய் சேர்த்து பசைபோல செய்து ஈறுகளில் தேய்த்தால் போதும். வாய் பிரச்னை என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போய்விடும்.
நீரிழிவு நோய்
இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் துளசியை உண்டு சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு துளசியை சுவைக்காக பயன்படுத்தலாம்.
துளசி |
இதயநோய்
இன்றைய காலத்தில் பலருக்கு இதயம் தொடர்பான நோய்களால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கு துளசி அருமருந்தாகும்.
தினந்தோறும் துளசியினை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறைகிறது. இதனால் இதயநோய் வராமல் தவிர்க்கலாம்.
சிறுநீரக கற்கள்
இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களில் பெரும்பாலும் சிறுநீரக கற்களால் அவதிப்படுகின்றனர்.
துளசி சாற்றுடன், சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரகம் சார்ந்து வரும் நோய்கள் குணமாகும்.
கண் சார்ந்த நோய்கள் மற்றும் தொண்டைப்புண் நீங்க
கண்களில் ஏதேனும் காயங்கள், அரிப்பு மற்றும் எரிச்சல் இருந்தால், சிறிதளவு துளசி சாற்றினை ஊற்றினால் சரியாகும்.
துளசியினை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வாயினை கொப்பளித்து, குடித்து வர தொண்டைப்புண் சரியாகும்.
துளசி |
மனஅழுத்தம்
இன்றைய சூழ்நிலையில் தேவையில்லாத பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளால் அனைத்து வயதினரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகிவருகின்றனர்.
துளசி இலையினை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் துளசியில் உள்ள ஒரு வேதிப்பொருள் மனஅழுத்தத்தினை குறைக்கும்.
முடிவுரை
பல்வேறு நன்மைகளை தன்னகத்துள் கொண்ட துளசியை சாப்பிட்டு, உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வையுங்கள்.
0 Comments