![]() |
புலி |
உடனே அந்த புலி, அந்த எருமையின் பக்கம் சென்றது. பின்னர் எருமையை பார்த்து, ஏய் எருமையே! எனக்கொரு சந்தேகம்.
நீ உருவத்தில் பார்க்கவும் பெரியதாய் இருக்கின்றாய் ரொம்ப பலசாலியாகவும் இருக்கிறாய்.
ஆனால் உன்னைவிட உருவத்திலும், பலத்திலும் குறைவாக உள்ள மனிதன் உன்னை என்னவெல்லாம் பாடாய் படுத்துகிறான்.
அப்படி அந்த மனிதனிடம் என்ன சக்தி இருக்கிறது? என கேட்டது.
அதற்கு அந்த எருமை, ஓ அதுவா! அவர் என்னுடைய எஜமான். அவரிடம் என்ன சக்தி இருக்கிறது என்றாய் கேக்கின்றாய்.
அவரிடம் அறிவு இருக்கிறது என்று பதில் சொன்னது.
அறிவா? அப்படியென்றால் என்ன என்று கேட்டது புலி. அதற்கு அந்த எருமை, அதுவா! அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
ஆனால் என்னுடைய நண்பர்கள் அனைவரும் சொன்னார்கள்.
எல்லா விதமான, எப்படிப்பட்ட விலங்குகளாக இருந்தாலும் சரி. அந்த விலங்கை ஆட்டிப்படைக்கும் திறமை.
![]() |
எருமை |
அதாவது அந்த அறிவு மனிதர்களிடம் இருக்கிறது என்று சொன்னார்கள் என்றது .
அந்த எருமை சொன்ன பதிலை கேட்டு ஆச்சரியப்பட்ட அந்த புலி, அப்படியென்றால் எனக்கும் அந்த அறிவு கிடைக்குமா? என்றது.
அதற்கு அந்த எருமை! அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அதைப்பற்றி ஏன் எஜமானை தான் கேட்கவேண்டும் என்று சொன்னது.
நல்லவேளை! என்னுடைய எஜமானர் அங்கு வந்து கொண்டு இருக்கிறார். அவரிடமே கேட்டு தெரிந்துக்கொள் என்றது.
அப்பொழுது அங்கு வந்துகொண்டு இருந்த, அந்த எருமையின் எஜமானர் அந்த புலியை பார்த்து நடுங்கினான்.
ஒருவேளை திரும்பி ஓடினால் புலி தன்னை கொன்றுவிடும் என எண்ணி நடப்பது நடக்கட்டும் என்று அங்கேயே நின்றுவிட்டார்.
அந்த புலி! அந்த எருமையின் எஜமானரிடம் சென்று நானும், உன்னுடைய அந்த எருமையும் அறிவை பற்றி தான் பேசிக்கொண்டு இருந்தோம்.
நீயே வந்துவிட்டாய்! அறிவு என்றால் என்ன? எனக்கு கொஞ்சம் கிடைக்குமா என்று கேட்டது.
![]() |
எஜமானர் |
இதை கேட்ட பிறகு தான் அந்த எஜமானாரருக்கு நிம்மதியாக இருந்தது.
இனிமேல் இந்த புலியால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லையென்று அந்த எஜமான் நினைத்தான்.
அந்த எஜமான்! அந்த புலியை பார்த்து புலியாரே! நான் அறிவை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன்.
இப்பொழுது நான் வீட்டுக்கு சென்று என்னுடைய அறிவை எடுத்துக் கொண்டு வந்து உனக்கு தருகிறேன்.
அதுவரை இங்கிருந்து எங்கேயும் போய்விடாதே என்று சொன்னார்.
எஜமானர் சொன்னதை கேட்டு, அந்த புலி! நமக்கு எப்படியும் அறிவு கிடைத்துவிடும்.
அறிவு கிடைத்ததும் காட்டில் உள்ள அனைத்து விலங்குகளையும், நாம் நினைப்பது போல ஆட்டி வைக்கலாம் என எண்ணி, நீ வரும்வரை நான் எங்கேயும் போகமாட்டேன்.
நீ போயிட்டு சீக்கிரமா அறிவை எடுத்து வா என்றது.
![]() |
புலி |
அந்த எஜமான்! அந்த புலியை பார்த்து, நான் போன பிறகு என்னுடைய எருமையை நீ கொன்றுவிட மாட்டாயே என்று கேட்டார்.
அதற்கு அந்த புலி! ச்சே! ச்சே! நான் கண்டிப்பா ஏதும் செய்யமாட்டேன். நீ சீக்கிரமா போய்ட்டு அறிவை எடுத்து வா என்றது.
அந்த எஜமானன் அந்த புலியிடம் நான் உன்னை கட்டிப்போட்டு விட்டு சென்றால் ஏதும் நினைக்க மாட்டாயே? என்றான்.
ம்! உம்! தப்பவே நினைக்க மாட்டேன் என்றது புலி. உடனே அந்த எஜமானன் ஒரு கயிற்றை எடுத்து அந்த புலியை அருகில் இருந்த மரத்தில் இறுக்கமாக கட்டிப்போட்டான்.
பிறகு அந்த புலியிடம் நீ கயிற்றை அவிழ்த்துவிட்டு சென்றால் நான் பொறுப்பல்ல என்றான்.
அந்த புலியோ! சரி சரி என்றது.
அந்த எஜமானன், அந்த புலியிடம் ஓ! மறந்தே போயிட்டேன்.
அறிவை என்னுள்ளே வைத்துக்கொண்டே வீட்டில் வைத்து வந்து விட்டேன் என்று சொல்லிவிட்டேன் என்றான்.
அந்த புலி ஓ! அப்படியா! அப்பொழுது அந்த அறிவை எனக்கும் கொஞ்சம் தா என்றது.
![]() |
புலி |
இதோ தருகிறேன் என்று அந்த எஜமானன் அருகில் கிடந்த ஒரு மரக்கட்டையை எடுத்து அந்த புலியை கண்முடித்தனமாக அடித்தான்.
அந்த புலியோ வலி தாங்கமுடியாமல் துடித்தது.
அந்த புலி, ஏய் முட்டாள் எஜமானே! நிறுத்து. எதற்காக என்னை இப்படி அடிக்கிறாய் என்று கேட்டது என்றது.
அதற்கு அந்த எஜமானன், அறிவை தானே கேட்டாய், அந்த அறிவால் தான் உன்னை இப்படி செய்தேன்.
இனியும், என் வயல்வெளி பக்கம் வந்தால் உன்னை கொன்று விடுவேன் என்று எச்சரித்து விடுவித்து சென்றான்.
புலியோ வலி பொறுக்க முடியாமல் அங்கிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பிச்சென்றது.
புலிக்கு விழுந்த அந்த அடிகளால் ஏற்பட்ட காயங்கள், பிற்காலத்தில் கோடுகளாக மாறியது.
"புலிகள் மீது கோடுகள் வர காரணம் இது தான் என்று கிராம புறங்களில் சொல்லுவார்கள்."
0 Comments