மண்ணுக்குள் விளையும் காய்கறிகள் |
Soil Growing Vegetables and Its Benefits | Health
இந்த பூமியானது நமக்கு எண்ணற்ற பயன்களை தருகின்றது. இந்த பூமியை நாம் அன்னையாகவே கருதுகிறோம்.
ஒரு தாயானவள் தன் பிள்ளைகளை எப்படி அரவணைப்பாலோ, அதுபோல பூமியும் நம்மை அரவணைத்து காத்துவருகிறது.
இந்த பூமியில் இருந்து எண்ணற்ற செல்வங்கள் நமக்கு கிடைக்கிறது. இந்த செல்வங்களே நம்மை செல்வந்தர்களாக மாற்றுகிறது.
அந்த வகையில் நமது உடலை எந்த நோய்களும் இன்றி செல்வந்தர்களாக மாற்றுவதற்கும், உடலுக்கு சக்தியினை அளிப்பதற்கும் பூமியே பேருதவியாக இருக்கிறது.
பூமிக்கு மேல் விளையும் காய்கறிகளும், பழங்களும் நமக்கு பலவகையில் சத்துக்களை தருகின்றன.
அதுபோல பூமிக்குள்ளே விளையும் ஒவ்வொரு காய்கறிகளும் நமக்கு பலவகைகளில் சக்தி அளிக்கின்றன.
ஒருசிலர் பூமிக்குள்ளே விளையும் காய்கறிகளை உண்ணாமல் தவிர்த்து வருவார்கள். ஆனால் அது நல்லதல்ல.
வேளாண்மை |
பூமிக்கு மேல் விளையும் காய்கறிகளை போலவே, பூமிக்குள்ளே விளையும் காய்கறிகளும் நமது உடலுக்கு பலவகைகளில் சக்தியினை அளிக்கிறது.
அந்த வகைகளில் இந்த பதிவின் மூலமாக நிலத்துக்கு அடியில் விளையும் சில காய்கறிகளையும், அதன் பயன்களையும் பற்றி பார்ப்போம்.
பொருளடக்கம்
- உருளைக்கிழங்க
- கருணைக்கிழங்கு
- முள்ளங்கி
- இஞ்சிு
- பீட்ரூட்
- கேரட்
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகம் உள்ளதால், அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் ஏற்படும் வீக்கத்தையும், அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணமாக்குகிறது.
இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால், உடலுக்கு தேவையான வெப்பத்தினை இது உண்டாக்குகிறது.
மேலும், இதில் அதிகமான கலோரிகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார் சத்துக்கள் நிறைந்துள்ளன.
உருளைக்கிழங்கு |
கருணைக்கிழங்கு
கருணைக்கிழங்கை உண்பதால் கபம், வாதம், மூலம் போன்றவற்றில் இருந்து குணம் பெறலாம்.
மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்குப் பலம் சேர்க்கும்.
உடல் எடையினை குறைக்க வல்லது. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோயினை போக்கவல்லது.
கருணைக்கிழங்கைச் சமைக்கும் பொழுது சிறிது புளி சேர்த்து சமைக்க அரிப்பு தன்மை நீங்கும்.
கருணைக்கிழங்கு |
முள்ளங்கி
முள்ளங்கியின் வாசம் காரணமாக சிலர் அதை சாப்பிட விரும்புவது இல்லை. ஆனால் முள்ளங்கியானது மிகுந்த சத்துக்களை கொண்டது.
முள்ளங்கியினை சாப்பிடுவதால் தொண்டை சம்மந்தமான நோய்களை குணப்படுத்துவதோடு குரலையும் தெளிவாக்கும். பசியினை தூண்டும்.
சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் முள்ளங்கியினை சாப்பிட சிறுநீரக கற்கள் கரையும்.
அது மட்டுமில்லாமல் அதிகமான நோய் எதிர்ப்புச்சத்தியை உருவாக்கும் தன்மைக் கொண்டது.
இதில் நமது உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் நிறைந்துள்ளன.
முள்ளங்கி |
இஞ்சி
நமது அன்றாட சமையலில் இஞ்சி மிக முக்கியமானது. இது வயிறு சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒரு அருமருந்தாக இருக்கிறது.
நமது சமையலில் இஞ்சியினை சேர்ப்பதால் இரைப்பையானது பலம் பெறுகிறது.
இஞ்சி பசியினை தூண்டவும், கபத்தினை போக்கவும், அஜீரணத்தை குணமாக்கவும் பெரும்பாலும் பயன்படுகிறது.
அஜீரணத்தால் ஏற்படக்கூடிய வயிற்று வலியையும் சரி செய்யும் தன்மைக்கொண்டது.
இஞ்சி |
பீட்ரூட்
நிலத்தடியில் விளையும் கிழங்கான இது சிறிது இனிப்பு சுவையை கொண்டதாக இருக்கும்.
இதனை நம் உணவில் சேர்ப்பதால் மலச்சிக்கல் ஆனது குணமாகிறது.
இது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். இதனை சாப்பிடுவதால் இரத்த அழுத்தமானது குறைகிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
பீட்ரூட் சாப்பிடுவதால் கெட்டக் கொழுப்பானது குறைகிறது. உடலுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும். உடலுக்கு அழகினை கூட்டும்.
பீட்ரூட் |
கேரட்
கேரட் ஆனது வைட்டமின் 'ஏ', 'கே', 'பி1', 'பி2', 'பி6', பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற பல்வேறு சத்துக்களை தன்னகத்துள் கொண்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல், இதில் புற்றுநோய் எதிர்ப்புச்சக்தி இருப்பதால் புற்றுநோயிலிருந்து நம்மை காக்கிறது.
தினமும் ஒரு கேரட் என நாம் எடுத்துக்கொண்டால் மார்பகம், கல்லிரல், குடல் புற்றுநோய் மற்றும் மாலைக்கண் நோய் வருவதை தடுக்கலாம்.
கேரட் |
முடிவுரை
இதுபோல எண்ணற்ற பயன்களை நிலத்திற்கடியில் விளையும் காய்கறிகள் கொண்டுள்ளன.
இதன் தன்மையினை உணர்ந்து சாப்பிட்டு உடல்நலத்தை ஆரோக்கியமாக வையுங்கள்.
0 Comments