பீட்ரூட் ஜூஸ் |
Benefits of Beetroot Juice | Health
எல்லோருக்கும் பிடித்தமான ஒரு பருவம் என்றால் அது குழந்தை பருவம் தான். அடுத்த பிடித்தமான பருவம் என்றால் அது இளமை பருவமே!.
இளமை பருவத்தை இரசிக்காதவர், இந்த அகிலத்தில் இல்லை என்பதே உண்மை. அழகும், ஆற்றலும் நிறைந்த பருவம் தான் அது.
பல ஆயிரம் அனுபவங்கள் கொண்டிருந்தாலும், பலருக்கு முதுமை என்றாலே வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் போய்விடும்.
முதுமையில் சோம்பல் தன்மை தானாகவே வந்து சேர்ந்துவிடும். இனி அதை நினைத்து கவலைப்பட வேண்டாம். அந்த கவலையை போக்க அருமையான ஒரு ஜூஸ் உள்ளது.
அப்படியென்ன ஜூஸ் என்று நினைக்கிறீர்களா? வேறொன்றும் இல்லை. பீட்ரூட் ஜூஸ் தான் அது.
பொருளடக்கம்
- பீட்ரூட்
- பீட்ருட்டில் உள்ள சத்துக்கள்
- பீட்ரூட் ஜூஸ் தயாரித்தல்
- பீட்ருட் ஜுஸில் உள்ள நன்மைகள்
- முதியோர்களின் கவனத்திற்கு
- பீட்ரூட் ஜூஸ் யார் பருக கூடாது
பீட்ரூட்
சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய பீட்ரூட்டில் பல்வேறு நன்மைகள் உண்டு.
பீட்ரூட் அனைவரையும் கவர காரணமாக அமைவது, அதன் இளஞ்சிவப்பு வண்ணமும், இனிப்பு சுவையுமே ஆகும்.
பீட்ரூட் மண்ணுக்குள் விளையும் காய்கறிகளில் ஒன்று. பீட்ரூட்டில் பல சத்துக்கள் நிறைந்து உள்ளது. இதை ஜூஸ் ஆக குடிக்கும் பொழுது பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
பீட்ரூட் |
பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள்
இனிப்பான பீட்ரூட்டில் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன.
- கால்சியம்,
- செலினியம்,
- இரும்பு சத்து,
- மக்னீசியம்,
- பாஸ்பரஸ்,
- சோடியம்,
- ஜிங்க்,
- காப்பர்,
- வைட்டமின் சி,
- பொட்டாசியம்.
பீட்ரூட் ஜூஸ் தயாரித்தல்
ஆரோக்கியமான பீட்ரூட் ஜூஸ் தயாரிப்பது மிகவும் எளிதானது. பீட்ரூட் ஜுஸில் சில ஆரோக்கியமான பொருட்களை சேர்ப்பதன் மூலமாக சுவையாகவும் இருக்கும்.
பீட்ரூட் |
பீட்ரூட் ஜூஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்
- பீட்ரூட் - 2,
- எலுமிச்சை பழம் - 1,
- இஞ்சி - சிறிதளவு (தேவைக்கேற்ப),
- புதினா - தேவையான அளவு,
- தேன் /நாட்டு சர்க்கரை - தேவையான அளவு,
தோலை நீக்கிய பீட்ரூட்டை சின்ன சின்ன பகுதிகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின்னர், ஜூசெரில் நறுக்கிய பீட்ரூட், இஞ்சி, புதினா மற்றும் எலுமிச்சை பழச்சாறு போட்டு ஜூஸ் ஆக பிழித்தெடுங்கள்.
பின்னர், அதை வடிகட்டி அதில் சுவைக்கேற்ப தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவு தான், ஆரோக்கியம் மிகுந்த பீட்ரூட் ஜூஸ் தயார்.
பீட்ருட் ஜுஸில் உள்ள நன்மைகள்
பீட்ரூட் ஜூஸ் பருகுவது அல்லது பீட்ரூட் சாப்பிடுவது இரண்டுமே ஆரோக்கியமானது. உடனடி ஆற்றல் பெற விரும்புபவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம்
பீட்ரூட் ஜூஸ் பருகுவதால் பல நன்மைகள் உண்டு. அவற்றை இப்பொழுது தெரிந்துக்கொள்ளலாம்.
பீட்ரூட் |
உயர் இரத்த அழுத்தம்
பெரும்பாலான நபர்களுக்கு தெரிந்த ஒன்று, பீட்ரூட் சாப்பிடுவதால் இரத்தம் அதிகரிக்கும் என்பது தான்.
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ், இரத்தத்தில் கலக்கும் பொழுது, அது நைட்ரிக் அமிலமாக மாறுகிறது.
இது இரத்த நாளங்களை அமைதியடைய செய்வது மட்டுமின்றி, இரத்தவோட்டத்தை சீராக்குகிறது.
தினம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை 8 அவுன்ஸ் அளவிற்கு பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம்.
உடல் எடை மற்றும் கொழுப்பு குறைக்க
பீட்ரூட்டில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இதில் கொழுப்பு இல்லை. ஆகையால், உடல் எடை அதிகரிக்கும் என்ற பயம் தேவையில்லை.
பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது. அதுமட்டுமின்றி, நல்ல கொழுப்பின் அளவும் அதிகரிக்கிறது.
பீட்ரூட் |
கல்லிரல்
புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற தவறான பழக்கத்தினால் கல்லிரல் பாதிப்படைகிறது. பீட்ரூட் ஜூஸ் கல்லிரலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். மேலும், கொழுப்பு படியாமல் பாதுக்காக்கும்.
அதுமற்றுமின்றி, கல்லிரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். கல்லிரல் அழுத்தத்தை சரி செய்யும் ஆற்றலும் உண்டு.
இதற்கு பீட்ரூட்டில் உள்ள பீட்டைன் தான் காரணமாக இருக்கின்றது.
ஆரோக்கியமான குழந்தை
பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி -யில் போலேட் அதிகம். இது முதுதுகெலும்பு மற்றும் நரம்பு குழாய் குறைபாட்டுகளை சரிசெய்யவும், தடுக்கவும் உதவும்.
இந்த குறைபாட்டுடன் குழந்தைகள் பிறப்பதையும் தவிர்க்க செய்யும். இவற்றை 600mg அளவிற்கு எடுத்துக்கொள்வது குழந்தை வளர்ச்சிக்கு நல்லது.
பீட்ரூட் |
சோர்வு நீங்க
உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவதால் சோர்வு, பலவீனம், தசைப்பிடிப்பு மற்றும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்ற பிரச்சனைகள் வரலாம்.
பீட்ரூட்டில் உள்ள பொட்டாசியம் ஒரு எலெக்ட்ரோலைட் ஆகும். பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் சோர்வு, பலவீனம், தசைப்பிடிப்பு மற்றும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்றவற்றை சரிசெய்து ஆரோக்கியமாக வாழ வைக்கும்.
மூளை
வயதாகுவதால் ஏற்படக்கூடிய நினைவாற்றல் குறைப்பாட்டை சரிசெய்யும் ஆற்றல் பீட்ரூட் ஜூஸ்க்கு உண்டு.
வயதாகும் பொழுது, மூளைக்கு தேவையான இரத்தவோட்டம் சரியாக கிடைப்பதில்லை. அக்கரணத்தால் தான் நினைவாற்றல் குறைபாடு ஏற்படுகிறது.
பீட்ரூட் ஜூஸ் குடிக்கும் பொழுது மூளைக்கு சீராக இரத்தம் பாயவும், மூளையின் செயல்திறன் அதிகரிக்கவும் செய்கிறது.
பீட்ரூட் |
இதயம்
பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் இதயத்தசைகள் வலிமை பெறவும், அதேசமயம் இதயத்தை சீராகவும் செயல்பட வைக்கிறது.
பீட்ரூட் ஜூஸ் குடிக்கும் பொழுது இதயம் செயலிழப்பு ஏற்பட்ட நபர்களுக்குக்கூட இரண்டு மணி நேரத்தில் 13 சதவீதம் இதய தசைகள் வலிமை பெறுகின்றன என ஆய்வுகள் கூறுகிறது.
உடல் ஆற்றல்
பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் அளவு குறைகிறது. அதுமட்டுமின்றி, இரத்தத்தில் நைட்ரேட் கலக்கப்படுவதால், உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
பீட்ரூட் ஜூஸ் |
புற்றுநோய்
பீட்ரூட்டில் உள்ள பீட்லைன் என்ற நிறமியே, பீட்ரூட்டிற்கு வண்ணத்தை தருகிறது. இந்த நிறமியானது ஒரு ஆன்டி-ஆக்சிடன்ட் ஆகும்.
இது உடலில் உள்ள நிலையற்ற மற்றும் தேவையற்ற செல்களை நீக்கக்கூடியது. இதனால் புற்றுநோய் வராமல் நம்மை காக்கும் ஆற்றலும் பீட்ரூட் ஜூஸ்க்கு உண்டு.
முதியோரின் கவனத்திற்கு
முதுமையில் இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க என்ன செய்யவேண்டும் என பிரிட்டன் எக்ஸ்டர் பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வின் முடிவில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் முதுமையிலும் சுறுசுறுப்பாக இருக்கலாம் என கண்டறிந்தனர்.
காரணம், பீட்ரூட்டில் இருக்கும் அதிகப்படியான நைட்ரேட் சத்து, சராசரியாக நமது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் அளவினை குறைக்கிறது.
முதுமையில் நமது உடலில் உள்ள இரத்தநாளங்கள் ஆனது சுருங்கிவிடும். இதனால் இரத்தத்தின் மூலமாக கிடைக்க கூடிய ஆக்சிஜன் சரிவர நமது உடலில் உள்ள திசுக்களுக்கு கிடைக்காமல் போய்விடும்.
பீட்ரூட் ஜூஸ் |
இதன் காரணமாகவே, முதியோர்கள் எளிதில் சோர்வடைவார்கள். அவர்கள், பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் இந்த பிரச்சனைகளிலிருந்து மீளலாம்.
தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால், அவர்களுடைய உடலில் உள்ள இரத்தநாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டமும் சீராகின்றது.
பீட்ரூட் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக செயல்படக்கூடியது. முதியவர்கள் இந்த பீட்ரூட் ஜூஸினை பருகும் முன்பு மருத்துவர்களின் ஆலோசனையினை கட்டாயமாக பெற வேண்டும்.
பீட்ரூட் ஜூஸ் யார் பருக கூடாது
பீட்ரூட்டில் இயற்கையாவே சிறுநீரக கற்களை உண்டாக்கும் ஆக்சலேட்டுகள் உள்ளன. ஆக, சிறுநீரக கற்கள் உள்ளவர்கள், ஆக்சலேட் பிரச்சனை உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.
முடிவுரை
பீட்ரூட் பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்தது. இரத்தத்தை அதிகரிக்க உதவும், சருமத்தை பொலிவுடன் வைக்கவும் உதவும். ஆகையால், தவிர்க்காமல் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
0 Comments