![]() |
ஏழை விவசாயி |
ஏழை விவசாயி ஆன அவன் விவசாயத்தை உயிருக்கும் மேலாக நேசித்து வந்தான்.
அவன் அவனுடைய நிலத்தில் தை மாதத்தில் புது நெல் விட மிகவும் ஆர்வமாக இருந்தான்.
அவனுடைய மாடுகளை அவனுடைய ஒரே ஏர் கலப்பையில் பூட்டி நிலத்தை உழ ஆரம்பித்தான்.
அப்படி உழது கொண்டிருந்த பொழுது, நிலத்துக்கு அடியில் இருந்த கல்லில் பட்டு அவனுடைய ஒரே ஏர் கலப்பை உடைத்து போனது.
என்ன செய்வது? என்று தெரியாமல் மனமுடைந்து போனான்.
பின்னர், மனதை தேற்றிக்கொண்டு ஏர்கலப்பையை சரிசெய்ய முடிவு செய்தான்.
![]() |
வயல் |
அதனால் ஏர்க்கலப்பையை சரி செய்யும் கண்ணப்பனை பார்க்க, அவனுடைய உடைந்த ஏர்கலப்பையுடன் சென்றான்.
அந்த கண்ணப்பன் ஏர் கலப்பையை சரிசெய்ய இருநாட்கள் ஆகும் என்றான்.
பின்னர் செல்லப்பனை, இரண்டு நாட்கள் பிறகு வந்து வாங்கி கொள் என்றான்.
அப்படி சரி செய்யும் பொழுது ஒருவர் செல்லப்பனின் ஏர்கலப்பையை அதிக விலைக்கு கேட்டார்.
இதைக்கேட்ட, பேராசை கொண்ட கண்ணப்பன் அவனுடைய ஏர்கலப்பையை அபகரிக்க திட்டம் திட்டினான்.
அந்த ஏர்கலப்பையை அதிக விலைக்கு அவருக்கே தர முடிவு செய்தான்.
இருநாட்களுக்கு பிறகு, கண்ணப்பனிடம், செல்லப்பன் தனது ஏர்கலப்பையை கேட்டு வந்தான்.
கண்ணப்பன், ஏர்கலப்பை இல்லை என்றான். அதிர்ந்து போன செல்லப்பன் எங்கே எனது ஏர்கலப்பை என்று கேட்டான்.
![]() |
எலி |
அதற்கு கண்ணப்பனோ உனது ஏர்கலப்பையை ஒரு எலி தின்று விட்டதாக கூறி சென்றான்.
செல்லப்பன் ஏழை விவசாயி என்பதால், அவனால் எதுவும் செய்ய இயலாமல் போனது.
இதற்கு என்றாவது பதில் சொல்ல வேண்டி வரும் என்று கண்ணப்பனிடம் சொல்லி சென்றான்.
ஒருநாள் கண்ணப்பனின் மகன் விளையாடி கொண்டிருப்பதை செல்லப்பன் பார்த்தான்.
அப்பொழுது, செல்லப்பனுக்கு ஒரு யோசனை வந்தது.
அவனது மகனை அவனுடைய அப்பா அழைப்பதாக கூறி ஒரு இடத்திற்கு அழைத்து சென்று மறைத்து விட்டான்.
மாலைப்பொழுதாகியும், தனது மகன் வீட்டிற்கு வராததை, கண்டு கண்ணப்பன் பயந்து, தனது மகனை தேடி அலைந்தான்.
அப்பொழுது செல்லப்பனை பார்த்து எனது மகனை பார்த்தாயா? என்றான். அதற்கு செல்லப்பனும், பார்த்தேன் என்றான்.
எங்கே இருக்கிறான் எனது மகன் என்று கேட்க, இவ்வளவு நேரம் இங்கே தான் விளையாடி கொண்டு இருந்தான்.
![]() |
ஏர்கலப்பை |
அப்பொழது எனது ஏர்கலப்பையை தின்ற எலி, இங்கே வந்து அவனை தின்று விட்டது என்று செல்லப்பன் கூறினான்.
இதனை கேட்டு அதிர்ந்து போன கண்ணப்பன் செய்வதறியாது தவித்தான்.
பின்னர், தன்னை போல தான் மற்றவரும் வேதனை படுவார் என்பதை உணர்ந்தான்.
பின்னர், தான் செய்த தவற்றை எண்ணி செல்லப்பனிடம், மன்னிப்பு கோரினான்.
பிறகு, செல்லப்பனிடம், ஏர்கலப்பையை கொடுத்து மகனை அழைத்து சென்றான்.
அதன் பிறகு, கண்ணப்பன் நேர்மையான மனிதனாக மாறினான்.
செல்லப்பன் தனது நிலத்தில், விவசாயம் செய்தான். அதிகமான விளைச்சலையும், பெற்று பெரிய பணக்காரனாக மாறினான்.
கதையின் நீதி!
"ஒருவரினை ஏமாற்றி இன்று மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், அதற்கான தண்டனையை இறைவன், எதிர்பார்க்காத சமயத்தில் தருவான்."
0 Comments