Ticker

6/recent/ticker-posts

பேய்களும், இரு தோழிகளும் | நீதிக்கதைகள்

பேய்கள்
பேய்கள்

தமிழ்நாட்டில் பொன்வயல் என்ற ஒரு அழகான கிராமம் இருந்தது. அந்த கிராமம் எங்கு பார்த்தாலும் பசுமையாகவும், செழிப்பாகவும் இருந்தது.

அந்த பொன்வயலில் கமலா என்ற ஒரு பெண் இருந்தாள். அவளது கணவன் இறந்து போக, அவளுக்கென்று யாருமில்லை.

வீட்டில் விளக்கு ஏற்றுவது, சுத்தமாக வைத்திருப்பது என்று எந்த நல்ல பழக்கங்களும் இன்றி தனியே வசித்து வந்தாள்.

கமலா, தினந்தோறும் வேலைக்கு செல்வது, வாங்கும் சம்பளத்தில் அரிசியினை வாங்கி சமைத்து சாப்பிடுவது என்று இருந்தாள்.

தினமும் எவ்வளவு சமைத்து சாப்பிட்டாலும், அவளது பசி மட்டும் தீரவில்லை.

அன்றாடம் கிடைக்கும் வருமானத்தில் இரண்டு படிகள் அரிசியினை வாங்கி, முழுவதையும் சமைப்பாள், சாப்பிடுவாள்.

அரிசி
அரிசி

ஆனால் பசியானது எடுத்துக் கொண்டே இருக்கும். இதனால் அரை வயிற்றுடன் படுத்துக்கொள்ளுவாள்.

இவ்வாறே நாட்கள் போகபோக, உடலானது மெலிந்து போனாது. ஒருநாள் கமலாவின் தோழி, அவளை பார்க்க அவளது வீட்டிற்கு வந்தாள்.

அவளை பார்த்து கமலா மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றாள். கமலா உடைய தோழியின் பெயர் சங்கரி.

சங்கரி படித்தவள், அறிவிலும் சிறந்தவள். இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்தனர்.

கமலா மெலிர்த்து இருப்பதாய் பார்த்து சங்கரி துயரப்பட்டாள். மாலை பொழுதும் வந்தது. சங்கரிக்கும் இன்று சேர்த்து சமைக்க வேண்டும்.

ஆனால் நமக்கே வயிறு நிறைய சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது. நமக்கு எவ்வளவு பசியாக இருந்தாலும் சரி, தோழியை வயிறார சாப்பிட வைக்க வேண்டும் என நினைத்தாள்.

கமலா சமைக்க இருபடி அரிசியை எடுத்து சமைக்க தயாரானாள். இதனை பார்த்த சங்கரி, எதற்கு இருபடி அரிசி நாம் இருவர் தானே. அரை படி போதும் என்றாள்.

அதுமட்டும் இல்லாமல், இரவு ஆகியும் விளக்கு ஏற்றாமல் இருக்கிறாயே ஏன்? என்றும் கேட்டாள்.

தீபம்
தீபம்

அதற்கு கமலா சங்கரியை பார்த்து, தினமும் இரு படிகள் சமைத்து சாப்பிட்டும் எனக்கு போதவில்லை.

அதனால் எனக்கு விளக்கு ஏற்ற எண்ணெய் வாங்க காசு இல்லை என்று கூறினாள். இதனை கேட்ட சங்கரி அதிர்ச்சியடைந்தாள்.

கமலாவை பார்த்து, என்னால் நம்ப முடியவில்லை. இருபடி அரிசியினை சமைத்து சாப்பிடுகின்றாய்.

ஆனாலும் பசி போகவில்லை என்கிறாய், உடலும் மெலிந்து காணப்படுகிறாய் என்ன காரணம் என்பது எனக்கு புரியவில்லை என்றாள்.

கமலாவை பார்த்து, அரை படி அரிசியினை மட்டும் வைத்து சமையல் செய் என்று கூறினாள்.

அரை படி அரிசியினை கடைக்கு கொண்டு சென்று கொடுத்து விளக்கு ஏற்ற எண்ணெய் வாங்கி வந்தாள்.

கமலா சங்கரியை பார்த்து, தான் எவ்வளவு கூறியும், அரை படி அரிசியினை மட்டும் சமைக்க சொல்கிறாய்.

இன்று நாம் இருவரும் பசியுடன் தான் தூங்க வேண்டும் என்று கூறிக்கொண்டே சமையலும் செய்து முடித்தாள்.

உணவு
உணவு

இருவரும் விளக்கினை ஏற்றி சாப்பிட தொடங்கினர். சிறிது சாப்பிட்டவுடன், இருவருக்கும் பசியானது தீர்ந்து போனது.

அதுமட்டுமில்லாமல் சாதமும் மீதம் இருந்தது. கமலா ஆச்சரியத்துடன் சங்கரியை பார்த்தாள்.

நீ வந்ததால் தான் இவ்வாறு நடந்ததாக கூறினாள். சங்கரி அது ஒன்றும் இல்லை.

நீ விளக்கு ஏற்றாமல் சாப்பிட்டதால் தான் ஏதோ நடந்திருக்கிறது. நாளை என்ன காரணம் என்று கண்டு பிடிக்கலாம் என்று கூறி தூங்க தொடங்கினர்.

நள்ளிரவில் யாரோ பேசும் சப்தம் கேட்டு இருவரும் விழித்து கொண்டனர். குண்டக்க, சொல்லு மண்டக்க. இன்று இவள் வந்த நேரம் நாம் இருவரும் பசியுடன் இருக்கின்றோம்.

ஆமாம் மண்டக்க. தினமும் இருட்டில், நாம் நன்றாக கமலாவின் தட்டிலிருந்து உணவினை எடுத்து சாப்பிட்டோம்.

இன்று இவள் வந்து விளக்கினை ஏற்றியதால், நம்மால் சாப்பாட்டினை எடுத்து சாப்பிட முடியாமல் போனது என்றது குண்டக்க.

தீபம்
தீபம்

சங்கரி உடனே விளக்கினை ஏற்ற, அப்பொழுது தான் பேசிக்கொண்டிருந்த குண்டக்க மற்றும் மண்டக்க இரண்டும் பேயேனே தெரிந்தது.

இவர்கள் விளக்கினை ஏற்றியதும், குண்டக்க மற்றும் மண்டக்க இரண்டும் சங்கரியை திட்டிக்கொண்டே அங்கிருந்து ஓடி போயின.

அப்பொழுது தான் கமலாவிற்கு, இவ்வளவு நாளாக பேய்கள் தான் தன்னுடைய உணவினை சாப்பிட்டு கொண்டு வந்துள்ளது என்று புரிந்தது.

கமலா சங்கரியை பார்த்து, உன்னால் தான் இன்று எனக்கு இந்த உண்மை தெரிந்தது.

இனிமேல் நான் விளக்கினை ஏற்றாமல் சாப்பிட மாட்டேன் என்று கூறினாள்.

தன் தோழிக்கு தன்னால் நன்மை கிடைத்ததை எண்ணி சந்தோஷப்பட்டாள் சங்கரி.

கதையின் நீதி!

வீட்டினை சுத்தமாக வைப்பது, விளக்கு ஏற்றுவது, எல்லாம் நம்முடைய உடல்நலம் மற்றும் மனநலத்திற்காக தானே தவிர மற்றவர்கள் பார்த்து பாராட்டுவார்கள் என்பதற்காக அல்ல.

வீடு சுத்தமாக இருந்தால் நாமும் நலம் பெறுவோம், நாடும் நலம் பெறும்.

Post a Comment

0 Comments