Ticker

6/recent/ticker-posts

மிளகின் பண்டைய வரலாறு | Milaku | History | Tamil

மிளகு
மிளகு

Ancient History of Pepper | Health

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மிளகை பற்றிய சுவாரசியமான பல தகவல்களை, இந்த பதிவின் மூலமாக தெரிந்துக்கொள்ளுங்கள். 

இந்த பதிவு கண்டிப்பாக நமது நாட்டையும், மிளகின் மகத்துவத்தையும் புரிய வைக்கும் என நம்புகிறேன்.

பொருளடக்கம்

  • பாரதநாடும், மிளகும்
  • மிளகு
  • மிளகின் வகைகள்
  • மிளகின் வேறுப்பெயர்கள்
  • வெளிநாட்டினவரின் தேடுதல்


பாரதநாடும் மிளகும்

நமது பாரதநாடு பழம்பெரும் பெருமை கொண்டது. அந்த காலத்திலிருந்து இந்தக்காலம் வரை மற்றநாடுகளுக்கு, நமது பாரதநாட்டின் மீதான மோகம் குறைந்தபாடில்லை.

நமது நாட்டில் இப்பொழுது பெரும்பாலும் பயன்படுத்த கூடிய மிளகாயை, ஒருகாலத்தில் நாம் சிறிதுகூட பயன்படுத்தவில்லை என்ற உண்மை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?.

ஒருகாலத்தில் தங்கத்தை விடவும் விலையுயர்ந்த உணவுப் பொருள் ஒன்று இருந்தது என்றால் நம்புவீர்களா? ஆம் உண்மைதான், அந்த உணவுப்பொருள் தான் மிளகு!.

இது தான் நமது பாரதநாட்டின் மீது மற்ற நாடுகள் படையெடுக்க அடிப்படியாக அமைந்தது. 

மிளகின் மகத்துவம் தெரிந்த நம் முன்னோர்கள் மிளகினை அடிப்படியாக வைத்தே உணவில் காரசுவையினை கொண்டுவந்தனர்.

இந்த மிளகானது அன்றும், இன்றும் நம்நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு பெருவாரியாக ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு பொருள்.

கருமிளகு
கருமிளகு

மிளகு

மிளகானது படர்ந்து வளரும், கொடி வகையை சார்ந்த தாவரமாகும். இது பூக்கள் பூத்து, பின்னர் காய் மற்றும் கனியாக மாறக்கூடியது.

மிளகானது நறுமணம், சுவையூட்டி மற்றும் மருத்துவம் என பலவகைகளில் பயன்படுத்த கூடிய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒன்றாகும்.


மிளகின் வகைகள்

மிளகின் வண்ணத்தை வைத்து பலவகைகள் உள்ளன. அனைத்திற்கும் சிறு வேறுபாடுகள் உண்டு. மிளகின் வேறுபெயர்கள்;

      • வெண்மிளகு,
      • கருமிளகு,
      • பச்சை மிளகு,
      • சிவப்பு மிளகு.

மிளகின் வேறுப்பெயர்கள்

மிளகை மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம் என பல பெயர்கள் இட்டு அழைக்கின்றனர். தமிழகத்தில் மிளகு என்றும், கேரளத்தில் குறுமிளகு என்றும், கர்நாடகத்தில் மேனசு என்றும், ஆந்திராவில் மிரியம் அல்லது மிரியாலு என்றும் அழைக்கின்றனர்.


வெளிநாட்டினவரின் தேடுதல்

உலகிலேயே அதிகப்படியான மிளகு, நமது நாட்டிலுள்ள கேரளாவில் தான் உற்பத்தியாகிறது.

அந்த காலத்தில், கேரளாவில் இருந்து தான் மிளகானது பெருவாரியாக அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியானது.

கேரளம்
கேரளம்

நம்மிடம் இருந்து பெறப்பட்ட மிளகை, அரேபியர்கள் ஐரோப்பியர்களுக்கு கொள்ளை இலாபத்திற்கு, விலை அதிகமாக வைத்து விற்பனை செய்து வந்தனர்.

ஐரோப்பியர்களுக்கு மிளகானது மிகவும் அத்தியாவசியமான பொருளாகவும், இன்றியமையாத பொருளாகவும் இருந்தது.

காரணம், பனியின் காரணமாக பெரும்பாலும் அவர்கள் இறைச்சியினையே உணவாக உட்கொண்டு வந்தனர்.

ஆனால் அந்த இறைச்சியின் சுவை அவர்களுக்கு பெரிதாக தோன்றவில்லை.

இந்த மிளகை அந்த இறைச்சியுடன் சேர்த்து, சமைத்து ருசித்த பின்னரே அவர்களுக்கு சுவையுணர்வு வந்தது.

அதுமட்டுமில்லாமல், இந்த மிளகானது நீண்ட நாட்களுக்கு இறைச்சியினை கெடாமலும், உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய பொருளாகவும் இருந்தது.

இதன் மகத்துவத்தினை தெரிந்து, நமது பாரத நாட்டினை அவர்கள் தேடியலைந்தனர்.

அவ்வாறு கண்டுபிடித்த பின்னர் தான், நமது நாட்டில் வியாபாரத்தினை தொடங்கி, பின்னர் நமது நாட்டினை பிடித்தனர்.

இறைச்சியும், மிளகும்
இறைச்சியும், மிளகும்

இவ்வளவு வரலாறு சிறப்புமிக்க பொருளான மிளகின் மகத்துவம் ஏராளம். அவற்றின் சிறப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.

மிளகு ஒரு கொடிவகையை சார்ந்த தாவரம். இதன் கனிகள் காய்ந்த பின்னரே, நறுமணமிக்க கூடிய மிளகு நமக்கு கிடைக்கின்றது.

"மசாலா பொருட்களின் மன்னன்" யாரென்றால் அது மிளகு தான். இந்த மிளகானது வணிகத்தில் மதிப்புமிக்க பொருளாக இருந்தது. எனவே தான் இதனை "கருப்பு தங்கம்" என்று அழைத்தனர்.

நமது சங்ககால இலக்கியங்களில் இந்த மிளகினை பற்றிய குறிப்புகள் ஏராளமாக கிடைக்கின்றன.

இதனை கருதியே நமது முன்னோர்கள் "பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்" என்ற பழமொழியினை கூறிவந்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள கொல்லிமலையில் பெரும்பாலும் மிளகை பயிர்செய்து வருகின்றனர்.

முடிவுரை

மிளகின் வரலாற்றினை கண்டு பிரமித்துப் போனீர்களா? அடுத்தடுத்த பதிவில் மிளகினை பற்றி இன்னும் பற்பல தகவல்களை மேலும் தெரிந்துக் கொள்ளலாம். காத்திருங்கள்!.

Post a Comment

0 Comments