மிளகு |
Medicinal uses of Pepper | Health
இந்த பதிவின் மூலமாக மிளகின் மருத்துவக்குணக்களை தெரிந்துக்கொள்ளலாம். ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் மிளகிற்கு என்று தனி இடம் எப்பொழுதும் உண்டு.
பொருளடக்கம்
- மிளகில் உள்ள சத்துக்கள்
- மிளகில் உள்ள மருத்துவக்குணங்கள்
- முன்னோரின் அறிவும், ஆற்றலும்
மிளகில் உள்ள சத்துக்கள் (Nutrients in pepper)
மிளகில் பல தரப்பட்ட உயிர்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. அவையாவன;
- மாங்கனீஸ்,
- இரும்பு,
- பொட்டாசியம்,
- வைட்டமின் 'சி',
- வைட்டமின் 'கே',
- நார்ச்சத்து.
மிளகில் உள்ள மருத்துவக்குணங்கள்
மிளகில் எண்ணற்ற பயன்கள் உள்ளன. அதை கருதியே, நமது முன்னோர்கள் மிளகுக்கென்று தனி இடத்தை அளித்து, அதை பயன்படுத்தி வந்தனர்.
அந்த வகையில் மிளகில் உள்ள மருத்துவக்குணங்களை இப்பொழுது தெரிந்துக்கொள்ளலாம்.
மிளகு |
தும்மல் மற்றும் மூக்குகளில் நீர் வடிதல்
மழைக்காலங்களில் பெரும்பாலான நபர்களுக்கு பொதுவாக தும்மல், கண்களை சுற்றிலும் அரிப்பு (itching) மற்றும் மூக்கில் நீர் வடிதல் (Runny nose) போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
அதுபோன்ற சமயங்களில் ஒரு தேக்கரண்டி மிளகை, ஒரு வெற்றிலையுடன் நீரில் போட்டு கொதிக்க வைத்து பருக, உடலில் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எளிதில் சரியாகும்.
இரத்தக்குழாய், கொழுப்பு குறைய
மிளகின் உள்ள காரத்தன்மைக்கு "காப்சாய்சசின்" என்ற வேதிப்பொருள் காரணமாக அமைகிறது. இந்த காரத்தன்மையானது, நமது உடலில் உள்ள கொழுப்பை (Fat) எளிதில் கரைக்கும் தன்மை கொண்டது.
நாம் அன்றாட உணவில் மிளகை எடுத்துக்கொள்ளும் பொழுது, மிளகில் உள்ள காரத்தன்மை இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிய அனுமதிப்பதில்லை. இதனால் இரத்த குழாய் தடிமனாகாமல் பாதுகாக்கிறது.
மிளகு |
ஒவ்வாமை, பூச்சிக்கடி சரியாக
மிளகானது ஒவ்வாமைக்கு மிகசிறந்த மருந்தாகும். ஒவ்வாமையால் (Allergies) ஏற்படக்கூடிய தொடர் தும்மலைக்கூட (sneeze), மிளகு எளிதில் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது.
நமது உடலில் ஒவ்வாமை அல்லது பூச்சிக்கடியால் ஏற்படக்கூடிய அரிப்பை சரிசெய்ய, மிளகு ஒரு சிறந்த மருந்தாகும்.
ஒரு தேக்கரண்டி மிளகை பொடிசெய்து, அதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு அருகம்புல்லை சேர்த்து, 200 மி.லி தண்ணீருடன் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
இதனால் ஜீரண சக்தி (Digestive power) அதிகரித்து, ஒவ்வாமையால் ஏற்படக்கூடிய அனைத்து தொல்லைகளையும் எளிதில் நீக்கும்.
இதற்கு மாற்றாக, ஒரு தேக்கரண்டி மிளகை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனுடன் தேன் கலந்தும் குடிக்கலாம்.
சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா சரியாக
ஒரு தேக்கரண்டி மிளகை இடித்து, 200 மி.லி தண்ணீரில் கொதிக்க வைத்து பனைவெல்லம் அல்லது தேன் கலந்து குடிப்பதனால் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களை எளிதில் சரிசெய்யும் தன்மை மிளகுக்கு உள்ளது.
தீராத சளி (Chronic cold), இருமல் (cough) மற்றும் ஆஸ்துமா (Asthma) போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை மருந்தாக பயன்படுத்தலாம்.
மிளகு |
தொண்டைக்கட்டு, தொண்டைவலி சரியாக
மிளகில் உள்ள "ஆன்டி ஆக்ஸிடண்ட்"-கள், நமது உடலில் உள்ள செல்களை பாதுகாக்கும் தன்மைக்கொண்டவை.
தொண்டைக் கட்டு, தொண்டை வலி மற்றும் குரல் கம்மல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள், ஒரு தேக்கரண்டி மிளகை நெய்யில் கருக வறுத்து பொடிச்செய்து சாப்பிட எளிதில் சரியாகும்.
அதுப்போல தொண்டை வலி உள்ளவர்கள் கொஞ்சம் மிளகு, ஓமம் மற்றும் உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டுமென்றால் தொண்டை வலி படிப்படியாக குறையும்.
பொடுகுத்தொல்லை, புழுவெட்டு நீங்க
தலையில் பொடுகு தொல்லை இருந்தால், மிளகை அரைத்து பாலில் கலந்து கொதிக்கவைத்து, ஆறவைத்து பின்னர் தலையில் தேய்த்து சிறிது நேரம் விட்டு குளிக்க பொடுகானது நீங்கும்.
தலையில் புழுவெட்டு உள்ளவர்கள், மிளகுடன், உப்பு மற்றும் வெங்காயத்தை சேர்த்து அரைத்து பாதித்த இடத்தில் பூசிவர முடியானது மீண்டும் வளரும்.
மிளகு |
பசியின்மை, உப்புசம் நீங்க
பசி குறைவாக உள்ள சமயங்களில், ஒரு தேக்கரண்டி மிளகினை பொடிச்செய்து நாட்டுசர்க்கரையுடன் கலந்து சாப்பிட பசியானது எடுக்கும்.
ஒரு தேக்கரண்டி மிளகை பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்து சூடாக்கி, அதனுடன் தேன் கலந்து சாப்பிட வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே சரியாகும்.
மூலநோய் சரியாக
மூலநோய் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி மிளகுபொடியுடன், ஒரு தேக்கரண்டி சீரகப்பொடியினை சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டு வர சரியாகும்.
பல்சொத்தை மற்றும் பல்கூச்சம் நீங்க
பல்சொத்தை மற்றும் பல்கூச்சம் உள்ளவர்கள் மிளகுபொடியுடன், உப்புக்கலந்து பல் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக நாளடைவில் பல்சொத்தை மற்றும் பல்கூச்சம் சரியாகும்.
மிளகு |
தொடர் காய்ச்சல் நீங்க
சிலசமயங்களில் ஏற்படும் தொடர் காய்ச்சல் அல்லது விட்டுவிட்டு வரும் காய்ச்சலால் அவதிப்பட்டு இருப்பீர்கள். அதுபோன்ற சமயங்களில் மிளகை கஷாயம் வைத்து குடிக்க சரியாகும்.
தீராத தலைவலி நீங்க
பெரும்பாலான நபர்கள் தீராத தலைவலியால் அவதிப்பட்டு இருப்பீர்கள். அதுபோன்ற சமயங்களில் மிளகை சுட்டு அந்த புகையினை நுகர தலைவலி குணமாகும்.
அதுமட்டுமின்றி, மிளகை இடித்து தலையில் பற்று போட்டாலும் தலைவலி எளிதில் சரியாகும்.
முன்னோரின் அறிவும், ஆற்றலும்
இதுபோல மிளகின் பயன்கள் ஏராளம். இத்தனை பயன்கள் கொண்ட மிளகை, நாம் இன்று மிளகின் விலை காரணமாக குறைவாகவே பயன்படுத்தி வருகின்றோம்.
ஒரு காலத்தில் நமது முன்னோர்கள் மிளகை வைத்தே அனைத்து உணவுப்பண்டங்களிலும், காரசுவையினை கொண்டு வந்தனர்.
மிளகு |
இன்றளவும் ஐரோப்பியர்கள் பெரும்பாலும் மிளகையே அதிகமாக பயன்படுத்துகின்றனர். நாம் அவர்கள் கொடுத்த மிளகாயை அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம்.
ஐரோப்பியர்கள் நம்மை அவர்களுக்கு அடிமைப்படுத்தியதில் இருந்து மீண்டு விட்டோம்.
ஆனால் அவர்களுடைய உணவு, மொழி, மதம், கலாச்சாரம், என அனைத்திற்கும் இன்றளவும் அடிமையாகவே உள்ளோம்.
நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் நமக்கு ஏராளமான பொக்கிஷங்களை அளித்துவிட்டு தான் சென்றுள்ளனர்.
நம்மில் பலர், அதை அறியாமல் முட்டாளாக வாழ்ந்து வருகின்றோம்.
முடிவுரை
இயற்கை வைத்தியங்கள் நோயினை சரிப்படுத்த அதிகமான நேரத்தினை எடுத்துக்கொண்டாலும், முழுமையாக சரிசெய்து விடும்.
ஆனால் செயற்கை வைத்தியங்கள் உடனடியாக சரிசெய்தது போல இருந்தாலும், அது சரியாகாது. கட்டுப்படுத்தும் தன்மை மட்டுமே இருக்கும்.
எந்த மருத்துவம் ஆனாலும், அது நன்மையே பயக்கும். சிறுசிறு விஷயங்களுக்கு எப்படி சரிசெய்வது என நீங்களே முடிவெடுங்கள்
0 Comments