குரங்குகள் |
அவனிடம் பல்வேறு வண்ணங்களில் பலவகையான தொப்பிகள் இருந்தன.
கண்களை கவரும் அந்த தொப்பிகளை தினமும் ஏராளமான நபர்கள் வாங்கிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.
செல்வத்திடம் ஒருவர், நீங்கள் உங்களிடம் உள்ள தொப்பிகளை பக்கத்து ஊரில் கொண்டு சென்று விற்றால் இலாபமானது அதிகமாக கிடைக்கும் என்று கூறினார்.
அவர் சொன்னதை கேட்ட செல்வம், சரியெனக் கருதி தன்னிடம் இருந்த பல்வேறு வகையான தொப்பிகளை ஒரு கூடையில் போட்டு கொண்டான்.
பின்னர், ஒரு அழகான தொப்பியினை தானும் அணிந்து பக்கத்து ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
நீண்ட நேரம் நடந்து சென்றதால், ஒரு கட்டத்தில் சோர்வாகி போனான்.
அதனால் ஒரு அழகிய மரத்தின் அடியில் தான் எடுத்து வந்த தொப்பிகள் அடங்கிய கூடையை வைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தான்.
அழகிய மரம் |
சிறிது நேரம் உறங்கி கண்விழித்தான். பின்னர் எழுந்து தான் கொண்டுவந்த கூடையை பார்த்து அதிர்ச்சியடைந்தான்.
அவன் தான் எடுத்து வந்த கூடையில் ஒரு தொப்பிக்கூட இல்லை. தொப்பியை காணாமல் போனதை கண்டு அதனை தேட ஆரம்பித்தான்.
சுற்றிலும் யாரும் இல்லாததால் என்ன நடந்தது என்று யோசித்து கொண்டு இருந்தான்.
ஏதோ சப்தம் கேட்க அவன் மரத்தின் மேல் பார்த்தான் அனைத்து குரங்குகளும் அவனது தொப்பியை அணிந்து இருந்தது.
குரங்குகளிடம் இருந்து தொப்பியை எப்படி வாங்குவது, என்ன செய்வது? என புரியாமல் தவித்தான்.
ஒரு கட்டத்தில் அவனுக்கு ஒரு நல்ல யோசனை வந்தது. குரங்குகளுக்கு வேடிக்கைகாட்ட ஆரம்பித்தான்.
தொப்பி |
அந்த குரங்குகளும் அவன் செய்வதையே திரும்பி செய்ய ஆரம்பித்தன. செல்வம் தான் அணிதிருந்த தொப்பியை தரையில் தூக்கிப்போட்டான்.
எல்லா குரங்குகளும் தொப்பியை கீழே தோக்கிப்போட்டது. செல்வம், உடனடியாக எல்லா தொப்பிகளையும் எடுத்துக்கொண்டான்.
குரங்குகள் ஏமாந்து போயின. பிறகு பக்கத்து ஊரில் அவனுடைய எல்லா தொப்பிகளையும் விற்று இலாபம் ஈட்டினான்.
வருடங்கள் ஓடின. செல்வம் தனது தொழிலை தனது மகனுக்கு கற்றுக்கொடுத்தான்.
அதனுடன் அவனுடைய அனுபவங்களையும் சொல்லிக்கொடுத்து வளர்த்தான்.
பின்னர், தனது தொழிலை தனது மகனிடம் ஒப்படைத்தான். மகனும் சிறப்பாக தொப்பி விற்க்கும் தொழிலை செய்து வந்தான்.
தந்தை, மகன் |
ஒரு நாள் பக்கத்து ஊருக்கு தொப்பி விற்க சென்றான். தனது தந்தை சொல்லியதை மறந்து, குரங்குகள் நிறைந்த அதே மரத்திற்க்கு அடியில் தொப்பிகளை வைத்துவிட்டு உறங்கினான்.
குரங்குகள் ஒவ்வொன்றும், ஒரு தொப்பிகளை எடுத்து அணிந்து கொண்டது.
செல்வத்தின் மகன் உறங்கி எழுந்ததும், தொப்பிகள் அனைத்தையும் குரங்குகள் வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.
பின்னர், தனது தந்தை சொன்னது நினைவிற்க்கு வர, தந்தை செய்ததைப் போல குரங்குகளுக்கு ஆட்டம் காட்டினான்.
அவன் செய்வதையே குரங்குகளும் செய்தன. சில நேரங்களித்து, தனது தலையில் இருந்த தொப்பியை கையில் எடுத்தான்.
குரங்குகளும் கையில் எடுத்தன. இவன் தனது கையில் இருந்த தொப்பியை தூர வீசினான்.
குரங்கு |
ஆனால், குரங்குகள் தொப்பியை வீசாமல், அவன் வீசியத் தொப்பியையும், எடுத்துக் கொண்டது.
அதிர்ச்சியடைந்த செல்வத்தின் மகன், ஏன் இவ்வாறு நடந்தது என புலம்பினான்.
அப்பொழுது, கூட்டத்தில் இருந்த குரங்கு ஒன்று அவனை பார்த்து பேசின.
உனக்கு எவ்வாறு எங்களை பற்றி உனது தந்தை சொன்னாரோ, அப்படி தான் எங்கள் தந்தையும் மனிதர்களைப் பற்றி சொல்லியுள்ளனர் என்றது.
இது கதை இதில் யார் வேண்டுமானாலும் பேசலாம், அதனால் குரங்கு எப்படி பேசும் என்று யோசிக்க வேண்டாம்.
இதை கேட்ட செல்வத்தின் மகன், குரங்குகளிடம் ஏமாந்து வீடு திரும்பினான்.
ஒருவர் இப்பொழுது ஏமாந்து போகலாம், ஆனால் எப்பொழுதும் ஏமாறுவார்கள் என்று எண்ணக்கூடாது.
0 Comments