Ticker

6/recent/ticker-posts

பாகற்காயின் நன்மைகள் | Pavakkai in Tamil | ஆரோக்கியம்

பாகற்காய்
பாகற்காய்

Pavakkai benefits in Tamil | Health

அனைவருக்கும் கசப்பு என்றாலே, முதலில் நினைவிற்கு வருவது பாகற்காய் தான். சுவையில் கசப்பு என்றாலும், அதன் நன்மைகள் பல உண்டு.

சிலர் பாகற்காய் என்றதும் முகத்திதை சுலிக்க செய்வார்கள். காரணம், அவ்வளவு கசப்பு தன்மை நிறைந்தது பாகற்காய்.

இதனால் பலர் இதை வாங்கி சமைக்கவும் தயங்குகின்றனர். ஆனால் பாகற்காய் நன்மைகளை கேட்டால் அனைவரும் வியந்து போவீர்கள். இந்த பதிவில் பாகற்காயின் நன்மைகளை தெரிந்துக்கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • பாகற்காய்
  • பாகற்காயில் உள்ள சத்துக்கள்
  • பாகற்காயின் நன்மைகள்

பாகற்காய்

இது கொடி வகையைச் சேர்ந்தது. இதனுடைய மலர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூக்களுடன் உள்ள பிஞ்சுக்கள் தான் காய்கின்றன.

மற்ற பூக்கள் பூத்து உதிர்ந்துவிடுகின்றன. இந்த பாகற்காய் பல வகைகள் காணப்படுகிறது.

பாகற்காய்
பாகற்காய்

இன்றளவும் பெரும்பாலானோர் நன்கு அறிந்த, உடலுக்கு நன்மை தரக்கூடிய ஒரு காய் என்றால் அது பாகற்காய் தான்.

தங்களின் உடல் நலத்தின் மீது அக்கறை உள்ள அனைவரும் கட்டாயமாக சாப்பிட வேண்டிய மிகவும் முக்கியமான காய்களில் ஒன்று என்றாலும், அது பாகற்காய் தான்.


பாகற்காயில் உள்ள சத்துக்கள்

மகத்தான மகத்துவங்கள் நிறைந்த பாகற்காயில் உள்ள சத்துக்களை முதலில் காணலாம்.

        • கால்சியம்,
        • பாஸ்பரஸ்,
        • புரதம்,
        • கொழுப்புசத்து,
        • இரும்புசத்து,
        • தாது உப்புகள்,
        • B காம்ப்ளெக்ஸ்,
        • நார்ச்சத்து,
        • மாவுச்சத்து,
        • சிறிதளவு வைட்டமின் சி.

பாகற்காயின் நன்மைகள்

நமது உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளை பாகற்காய் கொண்டுள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், சரிசெய்யவும் பெரிதும் உதவுகிறது.

பாகற்காய்
பாகற்காய்

நீரிழிவு நோய்

இன்றைய காலத்தில் நீரிழிவு அல்லது சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. தினந்தோறும் மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டாலும், விரும்பியதை சாப்பிட முடியாத சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் பாகற்காய் சாப்பிடுவதால், பாகற்காயில் உள்ள இன்சுலின், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

ஆகையால், சர்க்கரை நோயாளிகள் பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்ல முன்னேற்றத்தை தரும்.

செரிமானம்

நமது உடலில் நடக்கும் மிகப்பெரிய செயல் என்றால், அது செரிமானம் தான். நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து சத்துக்களை உறிஞ்சி, அதை இரத்தத்தில் கலந்து, ஆரோக்கியமாக வாழ வைக்கிறது.

செரிமானத்தில் ஏற்படும் பிரச்சனையால், சரியாக சத்துக்கள் உறிஞ்சப்படுவதில்லை. இதனால், ஆரோக்கியமான உணவை எடுத்டுக்கொண்டாலும், ஆரோக்கியமாக இருக்க இயலாது.

பாகற்காய்
பாகற்காய்

பாகற்காயை சாப்பிடும் பொழுது, செரிமானத்தை மேம்படுத்துகிறது. செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது. இதனால் அனைத்து சத்துக்களும் உறிஞ்சப்படுகிறது.

பாகற்காயில் அதிகமான நார்ச்சத்துக்கள் இருப்பதால் செரிமானம் மேம்படும். மலச்சிக்கல் பிரச்னையும் வராது. இதனால் நமது ஆரோக்கியம் ஆனது மேம்படுகிறது.

சருமம்

நமது முகத்தில் தோன்றும் பருக்களால் முகமானது பொலிவை இழக்கிறது.

தினந்தோறும் பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் பருக்கள், தழும்புகள் என அனைத்தையும் நீக்கும்.

அதுமட்டுமின்றி உடலில் தோன்றும் ஆழமான சருமத்தொற்றுகளையும் எளிதில் சரிசெய்யும் தன்மைக்கொண்டது.

பாகற்காய்
பாகற்காய்

ஆஸ்துமா, சளி, இருமல்

நாள்பட்ட சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் பாகற்காய் சாப்பிடுவதால் விரைவில் குணமாகும்.

பாகற்காய் மற்றும் இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் குடித்துவர நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் எந்தவொரு நோயும் உங்களை அண்டாது.

கல்லிரல்

பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக கல்லிரல் வலுவடையும்.

அதுமட்டுமில்லாமல், தினமும் பாகற்காயின் சாறை தினமும் குடித்துவர ஈரல் சம்பந்தப்பட்ட நோய்களும் அண்டாது.

சிறுநீர் கற்கள்

சிறுநீரக கற்களால் அவதிப்படும் நபர்கள், அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக சிறுநீரக கற்கள் நீங்கும். மேலும் சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்கும்.

பாகற்காய்
பாகற்காய்

இதயம்

அன்றாட உணவில் பாகற்காயை உணவில் சேர்ப்பதால், இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பானது குறையும். இதனால், இதயம் பலப்படும்.

மேலும், இருதயம் சார்ந்த நோய்கள் வராமல் காக்கும்.

புற்றுநோய்

பாகற்காய் சாப்பிடுவதால், புற்றுநோய் வராமல் காக்கும். மேலும், புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழித்து, மேலும் பெருக்கவிடாமல் தடுக்கும்.

மாதவிடாய்

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் ஒழுங்கின்மை பிரச்சனையை சரிசெய்யும் ஆற்றல் பாகற்காயிற்க்கு உண்டு.

பாகற்காய்
பாகற்காய்

காலரா

பாகற்காய் இலையுடன், நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர காலரா சரியாகும்.

முடிவுரை

இந்த பதிவின் மூலமாக பாகற்காய் பற்றிய பல்வேறு தகவல்களை தெரிந்துக்கொண்டு இருப்பீர்கள் என நம்புகின்றேன். 

பல்வேறு நன்மைகளை கொண்ட பாகற்காயை உணவில் சேர்த்து ஆரோக்கியமாக, நோய்களின்றி வாழுங்கள்.

Post a Comment

0 Comments