கோவில் |
Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 4
மன்னர் போஜராஜன்! இன்று என்ன நடக்கப் போகின்றது என்ற யோசனையுடன் அரசவை நோக்கி புறப்பட்டான்.
மன்னனைப் போலவே, மக்களும் அரசவையில் கூடியிருந்தனர். போஜராஜன் சிம்மாசனத்தில் முதல் அடி வைத்தான். எந்த சப்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது.
இரண்டாவது படியில் அடி எடுத்து வைத்தான். அதிலிருந்த பதுமையும் அமைதியாக இருந்தது.
மூன்றாம் படியில் அடியெடுத்து வைக்க, அதிலிருந்த பதுமையோ சிரிக்க தொடங்கியது. இதை பார்த்த மன்னர். எதற்காக சிரிக்கின்றாய் என்றுக்கேட்டார்.
மூன்றாவது பதுமை பேசத் தொடங்கியது. முதலில் தனது பெயரினை கூறி, பின்னர் மன்னா, எம்மன்னனின் பாசமும், அவரின் கொடையும் உமக்கு தெரியுமா? எனக் கேட்டது.
அதற்கு மன்னர்! சொல் கேட்கின்றேன் என்றார்.
பதுமையும் சொல்லத் தொடங்கியது. எம்மன்னர், இந்திரலோகத்தில் இருந்து இந்த சிம்மாசனத்தை பெற்று வந்ததும், இந்த வையகம் முழுதும் புகழானது பரவியது.
சிம்மாசனத்தை பார்க்க பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வந்துக்கொண்டே இருந்தனர்.
வரைபடம் |
அப்பொழுது விக்ரமாதித்யன், தன் தம்பி பட்டியிடம் தான் பெற்ற வரத்தினை கூறினான்.
அண்ணன், ஆயிரம் ஆண்டுகள் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிவான் என்று தெரிந்ததும், எதுவும் பேசாமல் காளி கோவிலை நோக்கிப் புறப்பட்டான்.
விக்கிரமாதித்யன், பட்டி அமைதியாக செல்வதை கண்டு புரியாமல் குழம்பினான்.
பட்டியோ! காளிக் கோவிலுக்கு சென்று தான் பெற்ற வரத்தினால் அம்மனை அழைத்தான்.
காளி தேவியும் வந்தாள். அம்மனைப் பார்த்து தாயே! எமக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் வாழும் வரம் வேண்டும் எனக் கேட்டான்.
இதனை கேட்ட காளி, பட்டிக்கு ஒரு சோதனையை வைக்க எண்ணி, ஆயிரம் ஆண்டுகள் வாழும் வரம் பெற்ற ஒருவரை எனக்கு பலி தர, உமக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் வாழும் வரம் தருவோம் என்றாள்.
இதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த பட்டி, இன்றே உமக்கு அந்த பலியினை தந்து வரத்தினை பெறுகிறேன் என்று கூறி அரண்மனையை நோக்கிப் புறப்பட்டான்.
அரண்மனைக்கு வந்த பட்டி, அண்ணா என்னுடன் காளி தேவி கோவிலுக்கு வாருங்கள் என்றான்.
விக்ரமாதித்யனும், பட்டியுடன் காளி கோவிலுக்கு கிளம்பினான். அங்கு யாகம் செய்யத் தயராகினான்.
பின்னர், அண்ணா நான் உங்களை பலியிட வேண்டும் என்று கூறினான்.
விக்கிரமாதித்தன் பட்டியிடம் எதுவும் கேட்காமல், தன்னுடைய உடைவாளை எடுத்து பட்டியிடம் தந்து யாகத்தின் முன்பு தலை குனிந்தான்.
வாள் |
உடனே பட்டி, அந்த உடைவாளால் விக்ரமாதித்யன் தலையை ஒரே வெட்டில் தலையினை துண்டாக்கினான்.
அடுத்த நொடியே! தலையானது யாக குண்டத்தில் விழுந்த காளி தேவி தோன்றினாள்.
பட்டியினைப் பார்த்து சொன்னதை செய்து ஆச்சரியப்படுத்தி விட்டாய்.
நான் சொன்னதுப்போல் உமக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் வாழும் வரத்தினை தந்தோம் என்றாள்.
பட்டி, காளி தேவியைப் பார்த்து கலகலவெனச் சிரித்தான். இதனைப் பார்த்த அம்மன், ஏன் இவ்வாறு சிரிக்கின்றாய் எனக் கேட்டாள்.
அதற்கு பட்டியோ! காளி தேவியைப் பார்த்து கோடன கோடி தேவர்களின் தலைவன், அளித்த ஆயிரம் ஆண்டுகள் வாழும் வரமே இங்கு பொய்த்து போனது.
நீயோ எனக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் வரமாக அளித்துள்ளாய். இது நிலைக்குமா? என்று சந்தேகமாக கேட்டான்.
சந்தேகம் |
அதற்கு காளி தேவி, எனது வரத்தின் மீது சந்தேகம் கொள்ளாதே! உனக்கு மரணமானது இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னர் தான் நிகழும் என்றாள்.
அப்படியானல், தேவர்கள் அளித்த வரத்தின் படி, என் அண்ணனோ ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும்.
அது இங்கு பொய்யாகிப் போனது, இப்பொழுது நீ கொடுத்த வரமும் பொய்யாகப் போகின்றது என்று தனது உயிரை விட துணிந்தான்.
இதனைக் கண்ட காளிதேவி, அவனை தடுத்து நிறுத்தி, எனது வரமானது பொய்யாக கூடாது என்றாள்.
அப்படி பொய்யாக கூடாது என்றாள், தேவர்கள் கொடுத்த வரமும் பொய்யாக கூடாது.
அதற்கு எனது அண்ணன் உயிருடன் வர வேண்டும். இல்லையெனில், எனது உயிரினை மாய்த்துக் கொள்வேன் என்றான்.
இதனைக் கேட்ட காளி தேவி, உன்னை பரிச்சிக்கும் நோக்கில் நான் இவ்வாறு செய்தேன். ஆனால் நீ உனது அறிவால் என்னை வென்று விட்டாய்.
விக்கிரமாதித்யன் உயிர் பெற்று எழுவாய் என காளி தேவி கூற, அடுத்த நொடியே! இரு துண்டுகளாக இருந்த விக்கிரமாதித்யனின் உடல் ஒன்று சேர்ந்து உயிர்ப் பெற்று எழுந்தான்.
பட்டியும், விக்கிரமாதித்தனும் காளி தேவியை வணங்கி நின்றனர்.
காளியம்மன் |
காளி தேவி, இப்பொழுது யாம் கொடுத்த வரமும் பொய்யாகவில்லை, தேவர்கள் கொடுத்த வரமும் பொய்யாகவில்லை. உங்களுடைய சகோதர பாசமானது அளப்பறியது.
நீங்கள் இருவரும் இரு உடல்கள் ஆனாலும் ஓர் உடலாகத் தான் வாழ்கிறீர்கள்.
உங்களுடைய அன்பானது காலம் உள்ளவரை நிலைத்து இருக்கட்டும் என்று கூறி மறைந்தாள்.
என்ன நடந்து என்று விக்கிரமாதித்யன் கேட்க, நடந்ததை பட்டி கூறினான். இப்பொழுது விக்கிரமாதித்யனின் முகத்தில் கவலை தென்பட்டது.
இதனை கண்டப் பட்டி, விக்ரமாதித்யனைப் பார்த்து அண்ணா! எதற்காக கவலையாக உள்ளீர்கள் எனக் கேட்டான்.
அதற்கு விக்கிரமாதித்யன், தம்பி எனக்கோ ஆயிரம் ஆண்டுகள், உனக்கோ இரண்டாயிரம் ஆண்டுகள்.
அப்படி என்றால் ஆயிரம் ஆண்டுகளில் உன்னை பிரிந்து விடுவேனா? என்று கேட்டான்.
அண்ணா! உங்களுக்கு தேவர்கள் அளித்த வரத்தில் ஆயிரம் ஆண்டுகள் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிவாய் என்று தானே! கூறினார்கள்.
அப்படியானல், நீங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரியும் காலங்கள் மட்டுமே கணக்கில் வரும்.
அதனால் நாம் நாடாறு காலம், காடாறு காலம் என வாழ்ந்தால், உங்களுக்கும் இராயிரம் காலங்கள் கிடைக்கும் என்றான்.
நகரம் |
நாட்டினில் இருந்து ஆளும் பொழுது மட்டும் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரியுங்கள். அப்படி என்றால் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிடும் என்றான்.
பட்டியின் அறிவினைக் கண்டு விக்கிரமாதித்யன் உள்ளம் மகிழ்ந்தான். பின்னர் தனது நாட்டினை முன்பைவிட சிறப்பாக ஆண்டனர் என்று கூறி முடித்தது பதுமை.
பின்னர் மன்னா! எம்மன்னரையும், அவரது சகோதரரையும் பற்றி என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்டது.
போஜராஜன்! பட்டியின் அறிவினையும், விக்கிரமாதித்யனின் அன்பினையும் கண்டு வியந்து போகின்றேன்.
இந்த அகிலத்தில் இனி இவர்களைப் போல மனிதர்களை கண்பது அரிது என்றான்.
இன்றும், மாலைப்பொழுதாகியதால் போஜராஜன் அரண்மனைக்கு திரும்பினான்.
0 Comments