சப்போட்டா |
Benefits of sapodilla fruit | Health
எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய, விலை குறைந்த, ஆரோக்கியத்தை அள்ளி தரும், அதிக சத்துக்கள் நிறைந்த பழத்தில் ஒன்று தான் சப்போட்டா பழம்.
இந்த பதிவில் சப்போட்டா பழத்தில் உள்ள சத்துக்களையும், அதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளையும் தெரிந்துக்கொள்ளலாம்.
பொருளடக்கம்
- சப்போட்டா பழம்
- சப்போட்டா பழத்தில் உள்ள சத்துக்கள்
- சப்போட்டா பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்
சப்போட்டா பழம்
சப்போட்டா பழம், எளிதில் திகட்டாத நல்ல இனிப்பு சுவைக்கொண்ட, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய, நல்ல மணம் கொண்ட பழமாகும்.
சப்போட்டா பழமானது குளிர்காலத்தில் காய்க்கும் பழமாகும். இது பழுப்பு நிறத்தில் இருக்கும்.
இந்த பழத்தின் மணத்தை சிலர் விரும்புவதில்லை. விலை மலிவாக கிடைப்பது என்பதால், இதை சிலர் வாங்குவதையும் தவிர்க்கின்றனர்.
சப்போட்டா |
இந்த பழத்தில் உண்மையில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதை, அவர்கள் அறிய தவறுகின்றனர்.
இந்த பழத்தின் மணம் மற்றும் சுவையின் காரணமாக பல கடைகளில் மில்க் ஷேக் ஆக விற்பனை செய்தும் வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, இந்த பழத்தை பயன்படுத்தி ஜூஸ் மற்றும் ஜாம் ஆகவும் விற்பனை செய்கின்றனர்.
சப்போட்டாவில் உள்ள சத்துக்கள்
சப்போட்டாவில் உள்ள நன்மைகளை அறியும் முன்பு, அதிலுள்ள ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சத்துக்களை தெரிந்துக்கொள்வோம்.
- கால்சியம்,
- நார்ச்சத்து,
- இரும்புச்சத்து,
- மாங்கனீசு,
- துத்தநாகம்,
- தாமிரம்,
- பாஸ்பரஸ்,
- மெக்னீசியம்,
- பொட்டாசியம்,
- வைட்டமின் ஏ, பி, சி,
- கார்போஹைடிரேட்,
- குளுக்கோஸ்.
சப்போட்டா பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்
சப்போட்டா பழத்தில் உள்ள சத்துக்களின் காரணமாக, அதில் நமது உடலுக்கு ஆரோக்கியமாக கூடிய பல மருத்துவக்குணங்கள் உள்ளது.
சப்போட்டா |
குடல் ஆரோக்கியம்
சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானத்தை சீராக்கி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல், குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.
பெருங்குடலில் உள்ள நச்சுக்களை போக்கி, பெருங்குடலை சீராக இயக்க உதவுகிறது.
இதனால், மூலநோய் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபட செய்கிறது. பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்றை சரிசெய்யவும் உதவுகிறது.
சப்போட்டா பழத்தில் டானின் உள்ளதால், அது குடல் அழற்சி, இரைப்பை வீக்கம், குடல் எரிச்சல் மற்றும் வயிற்று வலி என அனைத்திற்கும் மருந்தாக அமைகிறது.
சப்போட்டா பழம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
கர்ப்பிணி பெண்கள்
சப்போட்டா பழத்தில் எலக்ட்ரோலைட்டுகள், கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின் ஏ உள்ளதால், இதை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் பொழுது தலைசுற்றல் மற்றும் வாந்தி போன்றவற்றை குறைக்க செய்யும்.
சப்போட்டா பழத்தில் உள்ள கொலாஜன், பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் ஏற்படும் தழும்புகளை குறைக்க செய்யும் தன்மை கொண்டது.
சப்போட்டா |
சருமம் மேம்பட
சப்போட்டா பழத்தில் உள்ள கொலாஜன் சருமங்களில் ஆழமான சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கிறது. சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைக்கவும் உதவுகிறது.
சப்போட்டா மரத்தில் உள்ள பால் மருக்களை போக்கும் தன்மை கொண்டது.
இதனால் சருமம் ஆனது மிருதுவாகவும், அழகாகவும் இருக்கும். நமது தோல்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றை சரிசெய்யும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு.
சப்போட்டா பழம் கூந்தலை மேம்படுத்தவும், ஈரப்பதத்துடன் வைக்கவும் உதவும்.
புற்றுநோய்
சப்போட்டா பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளதால் திசு அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.
அதுமட்டுமின்றி, குடல் மற்றும் வாய்வழி சில புற்றுநோய்களை வராமல் தடுக்கவும் உதவுகிறது.
சப்போட்டா |
இதயம் மேம்பட
சப்போட்டா பழத்தில் வைட்டமின் சி உள்ளதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
உடலில் உள்ள ப்ரி-ரேட்டிக்கல்களை அழித்து, இதயக்கோளாறுகள் ஏற்படாமல் காக்கிறது.
இரத்தவோட்டம்
சப்போட்டா பழத்தில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளதால், இரத்த அழுத்தம் மற்றும் சுழற்சியை கட்டுக்குள் வைக்க உதவிக்கிறது.
அதுமட்டுமின்றி, இரத்த நாளங்களை சீராக செயல்படவும் உதவுகிறது. இதில் உள்ள இருப்புச்சத்து, இரத்தசோகை வராமல் காக்கிறது.
இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது.
சப்போட்டா பழம் விபத்தினாலோ, அல்லது வேறு சில காரணங்களால் ஏற்படும் காயங்களில் இருந்து வரும் இரத்தப்போக்கை கட்டுப்படுத்த செய்யும் தன்மை கொண்டது.
சப்போட்டா |
எலும்புகள் மேம்பட
சப்போட்டா பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் எலும்புகளை வலுவாக்கவும், மாங்கனீசு, தாமிரம் மற்றும் துத்தநாகம் எலும்பு இணைப்பு திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால், தசை மற்றும் எலும்பு பலவீனம் சரியாகும்.
சப்போட்டா பழம் பல் சொத்தை மற்றும் பற்குழிகளை அடைக்கவும் செய்யும்.
பெண்கள் சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் எலும்பு தேய்மான பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
உடல் ஆற்றல்
சப்போட்டா பழத்தில் குளுக்கோஸ் மூலப்பொருட்கள் ஆன சுக்ரோஸ் மற்றும் ப்ரக்டோஸ் உள்ளது.
சப்போட்டா பழம் சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்க உதவுகிறது.
இதனால் சப்போட்டா பழத்தை சாப்பிடும் பொழுது உடலுக்கு தேவையான ஆற்றல் உடனடியாக கிடைக்கும். இதனால் அன்றைய நாளானது, சோர்வில்லாமல் இருக்கும்.
சப்போட்டா பழம் சாப்பிடுவதால் தூக்கம் வராமல் அவதிப்படுவோர் எளிதாக தூங்கலாம்.
சப்போட்டா |
சளி, கபம், நாள்பட்ட இருமல்
சப்போட்டா பழம் சாப்பிடுவதால், நாள்பட்ட இருமல், சளி மற்றும் கபம் போன்ற பிரச்சனைகள் தீரும். அதுமட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் செய்யும்.
முடிவுரை
பல்வேறு சத்துக்களை தன்னகத்தில் கொண்ட, விலைமலிவான சப்போட்டா பழத்தை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.
0 Comments