Ticker

6/recent/ticker-posts

செவ்வாழையின் நன்மைகள் | ஆரோக்கியம்

செவ்வாழை
செவ்வாழை

Benefits of Red Plantain | Health

இந்திய பாரம்பரியத்தில் அனைவரலாலும் அறியக்கூடிய ஒரு தாவரம் என்றால் அது வாழை தான். வாழைமரம் அடி முதல் நுனி வரை பயனளிக்க வல்லது.

வாழை மரத்தின் சிறப்பையும், வாழைக்கனியின் சிறப்பையும் கருதியே, நமது முன்னோர்கள் வழைக்கனியை முக்கனிகளில் மூன்றாவதாக வைத்து சிறப்பித்துள்ளனர்.

வாழைமரமானது, அனைத்து காலநிலைகளிலும் பயனளிக்க வல்லது. ஒரு வாழையை, நம் இல்லத்தில் வைத்தால் போதும், அது நமது தலைமுறை தாண்டியும் பயனளிக்கும்.

அதனாலேயே! நம் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக என்று கூறுவதற்கு, வாழையடி வாழையாக என கூறி சிறப்பித்தனர்.

வாழை மரங்களில் பல வகைகள் உண்டு. அதில் செவ்வாழையின் சிறப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொருளடக்கம்

  • செவ்வாழ
  • செவ்வாழையில் உள்ள சத்துக்கள்
  • வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது
  • செவ்வாழை சாப்பிடுவதற்கான நேரம்
  • செவ்வாழையின் மருத்துவ குணங்கள்


செவ்வாழை

அனைத்து வாழைப்பழங்களிலும் ஏதேனும் ஒரு சத்துக்கள் நிறைந்திருக்கும். அந்த வகையில் செவ்வாழையிலும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

செவ்வாழையில் தண்டுப்பகுதி மற்றும் பழம் சற்று சிவப்பு நிறத்தில் காணப்படும்.

தமிழகத்தில் தென்பகுதியில் செவ்வாழையை அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது.

செவ்வாழை
செவ்வாழை

செவ்வாழையில் உள்ள சத்துக்கள்

மனித உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் தாது உப்புகள் நிறைந்த ஒரு உணவு என்றால் செவ்வாழை தான்.

காயகல்பம் மருத்துவத்தில், செவ்வாழையை பயன்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, வாழைப்பழம் அனைத்திலும் பல சத்துக்கள் நிறைந்திருக்கும். அதில் குறிப்பாக செவ்வாழையில் உள்ள சத்துக்களை தெரிந்துக்கொள்ளலாம்.

      • பொட்டாசியம்,
      • மக்னீசியம்,
      • இரும்புச்சத்து,
      • பாஸ்பரஸ்,
      • கால்சியம்,
      • தையமின்,
      • வைட்டமின் சி,
      • தாது உப்புகள்,
      • போலிக் அமிலம்,
      • பீட்டா கரோட்டின்.


வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது

பொதுவாக, வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல.

வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது, வாழைப்பழத்தில் உள்ள மக்னீசியம் உடலில் உள்ள மக்னீசியத்தின் அளவை அதிகரிக்க செய்யும். இது இதயத்தை பாதிப்படைய செய்யும்.

அதுமட்டுமல்லாமல், வாழைப்பழத்தில் உள்ள அமிலத்தன்மை, வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது குடலின் இயக்கத்தை பாதிப்படைய செய்யும்.

வாழைப்பழம் சாப்பிடும் பொழுது, அதிலுள்ள சர்க்கரை உடலுக்கு சக்தியை அளிக்கும்.

செவ்வாழை
செவ்வாழை

செவ்வாழை சாப்பிடுவதற்கான நேரம்

செவ்வாழையை சாப்பிடுவதற்கான சரியான நேரம் என்றால் காலை 6 மணி முதல் 7 மணிக்குள், அல்லது காலை 11 மணி, அல்லது மாலை 4 மணி.

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடாமல், காலை உணவை சாப்பிட்ட சிறிது நேரத்திற்கு பிறகு, சாப்பிடுவது மிக நல்லது. காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சாப்பிடுவது செரிமானத்தை அதிகரிக்கும்.


செவ்வாழையின் மருத்துவ குணங்கள்

செவ்வாழையில் உள்ள சத்துக்களால், நமது உடலில் ஏற்படும் ஆரோக்கியமான தன்மைகளை தெரிந்துக்கொள்ளலாம்.

சிறுநீரக கற்கள்

பெரும்பாலானோர், இன்றைய சூழலில் சிறுநீரக கற்களால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

செவ்வாழையில் உள்ள உயர்தர பொட்டாசியம், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தவிர்க்கலாம்.

அதுமட்டுமல்லாமல், சிறுநீரகத்தின் செயல்திறனும் அதிகரிக்கும்.

செவ்வாழை
செவ்வாழை

உடல் எடை

உடல் எடையினை குறைக்க ஆசைப்படுவோர், தினமும் காலை உணவுடன், செவ்வாழையினை சாப்பிட்டு வர பசியானது கட்டுக்குள் வரும்.

இதில் உள்ள கலோரிகளின் அளவு மிக குறைவு. இதன் காரணமாக, உடல் எடையும் குறையும்.

கண் பார்வை

செவ்வாழையில் உள்ள வைட்டமின் சி காரணத்தினால் கண்ணின் பார்வை திறன் மேம்படும்.

மாலைக்கண்நோயால் அவதிப்படுபவர்கள் இரவு உணவிற்கு பிறகு தொடர்ந்து நாற்பது நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வர மாலைக்கண் நோயானது முற்றிலும் குணமாகும்.

உங்களுக்கு கண்பார்வை குறைவதாக தோன்றினால் கவலை கொள்ளாதீர்கள்.

தினமும் ஒரு செவ்வாழை என எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பார்வையில் தெளிவு வரும்.

இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண் சம்மந்தப்பட்ட நோய்களை குணமாக்கும்.

செவ்வாழை
செவ்வாழை

சருமம்

நமது சருமத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், செவ்வாழையை தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வர பிரச்சனை தீரும்.

அதுப்போல, சொறி, சிரங்கு போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் விரைவில் குணமாகும்.

நரம்பு தளர்ச்சி

உடலில் உள்ள நரம்புகள் தளர்வதால், உடலின் பலம் குறையும். இதன் காரணமாக, ஆண்மை குறைவும் ஏற்படும்.

நரம்பு தளர்ச்சி பிரச்சனைகள் உள்ளவர்கள், தினசரி 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர, நரம்பு தளர்ச்சி சரியாகும். ஆண்மை அதிகரிக்கும்.

மலச்சிக்கல்

இன்றைய காலக்கட்டத்தில் மலச்சிக்கல் பிரச்சனையால் சிலர் அவதிப்பட்டு கொண்டுயிருப்பார்கள். அவர்கள், தினமும் தூங்க செல்லும் முன்பு ஒரு செவ்வாழை எடுத்துக்கொள்வது மிக நல்லது.

பொதுவாக, எந்த வாழைப்பழம் எடுத்துக்கொண்டாலும், அது நல்லது. செவ்வாழை எடுத்துக்கொள்வது கூடுதல் நன்மை அளிக்கும்.

செவ்வாழை
செவ்வாழை

இரத்தவோட்டம், மற்றும் உற்பத்தி

செவ்வாழையை தொடர்ந்து சாப்பிடும் பொழுது, நமது உடலில் இரத்தத்தின் உற்பத்தி அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், இரத்தவோட்டமும் சீராகும்.

இதனால் இதயம் மற்றும் கல்லிரலின் செயல்திறனும் அதிகரிக்கும்.

பல்வலி மற்றும் பல்லசைவு

செவ்வாழையை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர, பல்வலி, பல்லசைவு போன்ற பிரச்சனைகள் தீரும்.

அதுமட்டுமல்லாமல், பல்லசைவு பிரச்சனைகள் உள்ள பற்கள் கூட கெட்டிப்படும்.

புற்றுநோய், வயிற்றெரிச்சல்

செவ்வாழையை தொடர்ந்து சாப்பிட்டு வர, புற்றுநோய் உண்டாக்கும் செல்களை அழித்து, புற்றுநோய் வராமல் தடுக்கும்.

வயிற்றில் அமிலத்தன்மை காரணமாக ஏற்படும் பிரச்சனைகள், செவ்வாழை சாப்பிடுவதால் சரியாகும்.

முடிவுரை

இதுப்போன்ற எண்ணற்ற பயன்களை கொண்ட செவ்வாழையை தொடர்ந்து சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வையுங்கள்.

Post a Comment

0 Comments