வல்லாரை |
Benefits of Vallarai | Health
நமது நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த, நல்ல நினைவாற்றலை தரக்கூடிய வல்லாரையின் பல்வேறு பயன்களை தெரிந்துகொள்வோம்.
பொருளடக்கம்
- வல்லாரை
- வல்லாரையின் சிறப்பு
- வல்லாரையை சாப்பிடும் முறை
- வல்லாரையில் உள்ள சத்துக்கள்
- வல்லாரையின் மருத்துவ குணங்கள்
- குழந்தை மருத்துவத்தில் வல்லாரையின் பங்கு
- வல்லாரையின் பொருட்கள்
வல்லாரை
வல்லாரை என்றால், இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கக்கூடும். காரணம், இதனுடைய சிறப்பே ஆகும்.
அதிக மதிப்பெண்களை பெற அதிக நியாபக சக்தி தேவை என்பது அனைவருக்கும் தெரியும்.
வல்லாரை பச்சை நிற இலைகளை கொண்ட படர்ந்து வளரக்கூடிய ஒரு தாவரம். இது ஈரமான இடங்களில் அடர்த்தியாக வளரும்.
இதன் சுவையானது கசப்பு கலந்த ஒருவித இனிப்பு சுவையை கொண்டது. இந்த தாவரத்தை மருத்துவத்திற்கு முழுமையாக பயன்படுத்தலாம்.
வல்லாரை |
வல்லாரையின் சிறப்பு
நல்ல கல்வி நியனத்தை பெற, நம்முடைய பெற்றோர்கள் சரஸ்வதி தேவி வணக்க சொல்லி பாத்திருக்கலாம்.
அத்தகைய சரஸ்வதி தாய் பெயரைக்கொண்ட, இந்த வல்லாரை அழைக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?.
ஆம். சரஸ்வதி தேவியின் பெயரை வைத்து அழைக்கப்பட்ட ஒரு கீரை வல்லாரை தான்.
இதன் மதிப்பை அறிந்தே நம் முன்னோர்கள் வல்லாரைக்கு, அந்த காலத்தில் "சரஸ்வதி" என பெயரினை வைத்து அழைத்தனர்.
"வல்லாரை வெல்ல வேண்டுமெனில், வல்லாரை உண்டு வா" என்பது பழமொழி. வல்லாரையின் சிறப்பை, இந்த பழமொழியில் இருந்தே தெரிந்துக்கொள்ளலாம்.
"வல்லாரையிலை மருவுகற்ப மாய்க் கொள்ள வெல்ல பிணிகளுமில்லாமையா மெய்யினில்". என ஒரு சித்தர் பாடலில் பாடப்பட்டிருக்கிறது.
இதற்கு அர்த்தம் யாதெனில், வல்லாரை என்பது ஒரு காயகற்ப மூலிகை. இதை மருந்தாக பயன்படுத்தும் பொழுது எல்லாப்பிணிகளும் நம் உடலை விட்டு அகலும் என்பதாகும்.
வல்லாரை |
வல்லாரையை சாப்பிடும் முறை
நாம் வல்லாரையின் முழுப்பலனையும் பெற வேண்டுமென்றால், அதற்கு சில முறைகளை பின்பற்ற வேண்டும்.
நமது பாரமப்பரிய மருத்துவமான, சித்த மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.
வல்லாரையை லேகியமாகவும், சூரணமாகவும், மாத்திரையாகவும் சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.
வல்லாரையை பச்சையாகவும், சமைத்தும் சாப்பிடலாம். வல்லாரையை சாப்பிடும் பொழுது மாமிசம், அகத்தி கீரை மற்றும் பாகற்காய் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.
அதுப்போல வல்லாரையை சாப்பிடும் பொழுது புளி மற்றும் காரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சாப்பிடலாம்.
வல்லாரை லேகியம், சூரணம் மற்றும் மாத்திரைகளை, தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும்.
வல்லாரையில் உள்ள சத்துக்கள்
வல்லாரையில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. அவையாவன;
- இரும்புச்சத்து,
- சுண்ணாம்பு சத்து,
- வைட்டமின் ஏ, மற்றும் சி,
- தாது உப்புகள்.
வல்லாரையின் மருத்துவ குணங்கள்
வல்லாரையின் பயன்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை கொடுத்துள்ளேன்.
வல்லாரை |
நினைவாற்றல் மேம்பட
பெரும்பாலான நபர்களுக்கு வல்லாரை என்றால், நினைவற்றை அதிகரிக்க செய்ய என்பது தெரிந்து இருக்கும். அது உண்மையா என்று கேட்டால், உண்மை தான்.
வல்லாரையை சாப்பிடுவதால், மூளையில் உள்ள நரம்புகள் வலுவடைகின்றன. இதனால் நினைவாற்றல் ஆனது அதிகரிக்க செய்கிறது.
மனஅமைதி பெற
வல்லாரையை சாப்பிடுவதால், நரம்புகள் அமைதிபெறுகின்றன. இதனால் பதற்றம் ஆனது குறைந்து, மனஅமைதி பெற வழிவகுக்கின்றது.
சருமம் மேம்பட
இந்த வல்லாரையை சாப்பிடுவதால், தோலின் பொலிவானது அதிகரிக்கிறது.
அதுமற்றுமின்றி வயதாகுவதல், தோலில் ஏற்படும் சுருகங்களை குறைக்கவும், கண்ணுக்கு அடியில் மற்றும் முகத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகளையும் நீங்கவும் செய்கிறது.
இந்த வல்லாரை இலைகளை அரைத்து பூசுவதினால் காயத்தால் ஏற்பட்ட தழும்புகள், தீயினால் ஏற்பட்ட தழும்புகள் என அனைத்தையும் போக்கும் தன்மை கொண்டது.
பிரசவத்திற்கு பிறகு பெண்களின் வயிற்றில் ஏற்படும் தழும்புகள் முதல் அனைத்து விதனமான தழும்புகளையும் நீக்கவல்லது.
நமது தோலில் எவ்விதமான நோய்த்தொற்றையும் இந்த வல்லாரை கீரை அனுமதிப்பதில்லை.
வல்லாரை |
இரத்தநாளங்கள் மேம்பட
பெரும்பான நபர்களுக்கு "வெரிகோஸ் வெயின்" அல்லது 'வெரிகோஸ்' எனப்படும் நரம்புகளின் புடைப்புநோய் பெரும்தொல்லையாக இருக்கும்.
இந்த நோயானது, நீண்ட நேரத்திற்கு நின்றுக்கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கு வரக்கூடிய மிக முக்கியமான நோயாகும்.
நமது உடலில் இரத்தவோட்டம் பாதிப்படையும் காரணத்தால் நாளங்கள் புடைத்து, தனது விரைப்பு தன்மையை இழந்து தளர்ந்து விடுவதால், இரத்தமானது நாளங்களில் தேங்கி புடைத்துக்கொள்கின்றன.
இந்த வல்லாரையில் உள்ள 'டிரைபெர்பைன்' என்ற வேதிப்பொருள் 'கொலாஜன்' மற்றும் 'எலாஸ்டின்' என்ற இணைப்பு திசுக்களை உற்பத்தி செய்து நாளங்களை உறுதிப்படுத்த உதவுகின்றன.
இந்த வல்லாரையை சாப்பிடுவதனால், நமது உடலில் இரத்தவோட்டம் சீராகி, நாளடைவில் புடைப்புகள் சரியாகின்றன. அதுமட்டுமில்லாமல் நமது இரத்தத்தையும் தூய்மையாக்குகிறது.
பெண்களுக்கு தொடைப்பகுதிகளில் இரத்தவோட்ட பாதிப்பினால் சிலந்தி வலைகளை போல, சிறு இரத்த குழாய்கள் தோலுக்கு அடியில் வரும்.
இவர்களும் வல்லாரை கீரையை சாப்பிட, இரத்தவோட்டம் அதிகரித்து விரைவில் சரியாகும்.
சில நபர்களுக்கு மூலநோய் காரணமாகவும், நாளங்கள் புடைத்து இரத்தவோட்டம் தடைப்படும். இந்த பிரச்சினைக்கும் வல்லாரை சிறந்த மருந்தாக உள்ளது.
கண்களில் இரத்த குழாய் பாதிப்பான 'ரெட்டினோபதி' என்ற நோய்க்கும் அருமருந்தாக உள்ளது.
வல்லாரை |
வாய் மற்றும் தொண்டைப்புண் சரியாக
இந்த வல்லாரை சாப்பிடுவதால் வாய்ப்புண், தொண்டைப்புண் மற்றும் வயிற்றுப்புண் என அனைத்து விதமான புண்களையும் சரிசெய்யும்.
அதிகமாக பேசவும், பாடவும் செய்பவர்கள், இந்த வல்லாரையை பயன்படுத்தி தேநீர் செய்து வாரம் இருமுறை குடிக்க வேண்டும்.
அவ்வாறு குடித்துவர, அவர்களுடைய தொண்டைப்புண் மற்றும் உடல் சூட்டின் காரணமாக ஏற்படும் தொண்டை வலியை சரிசெய்யும்.
உடல்சூடு, யானைக்கால் நோய் சரியாக
நமது உடலில் உண்டாகும் அதிகப்படியான வெப்பத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
இந்த வல்லாரை கலந்த மாத்திரைகளை யானைக்கால் நோய் உள்ளவர்கள் சாப்பிட காலின் வீக்கமானது குறையும்.
குழந்தை மருத்துவத்தில் வல்லாரையின் பங்கு
வல்லாரை குழந்தை மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.
வல்லாரையை பயன்படுத்தி தயார் செய்யப்படும் வல்லாரை எண்ணெய், மற்றும் வல்லாரை நெய் மூலமாக குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய கணைய மாந்தம், சீதக்கழிச்சல், உடல் சூடு மற்றும் தோலில் ஏற்படக்கூடிய நோய்களை சரிசெய்யலாம்.
வல்லாரையின் பொருட்கள்
வல்லாரையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கூந்தல் தைலங்கள், குளியல் தைலங்கள் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க செய்யும் மாத்திரைகள் மிகுந்த பயனளிக்க கூடியவைகளாகும்.
முடிவுரை
இந்த பதிவின் மூலமாக வல்லாரை கீரையின் நன்மைகளை தெரிந்துக்கொண்டு இருப்பீர்கள். வல்லாரையை வீட்டில் ஒரு சிறிய தொட்டியில் வளர்த்து பயன்படுத்துங்கள்.
0 Comments