டிராகன் பழம் |
Benefits of Dragon Fruit | Health
ஒரு காலத்தில் பலருக்கு அறிமுகம் இல்லாத, இன்று பழக்கடைகளில் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கின்ற ஒரு பழத்தை அனைவரும் பார்த்திருப்போம்.
அதுபோல பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறதே, இது என்ன பழமாக இருக்கும் என்றும் யோசித்திருப்போம்.
அப்படிப்பட்ட டிராகன் பழத்தை பற்றி சில நல்ல தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
பொருளடக்கம்
- டிராகன் பழம்
- டிராகன் பழத்தில் உள்ள சத்துக்கள்
- டிராகன் பழத்தின் மருத்துவக்குணங்கள்
டிராகன் பழம்
"டிராகன் பழம்" என அனைவராலும் அழைக்கக்கூடிய பார்ப்பதற்கு சப்பாத்தி கள்ளி பழத்தினை போல இருக்கும் ஒரு வகையான பழம்.
இது பார்ப்பதற்கு டிராகனை போன்ற உடலமைப்பை கொண்டிருப்பதால், இதை டிராகன் பழம் என அழைக்கின்றனர்.
இப்பொழுது அதிகமான பழக்கடைகளிலும், குளிர்பானங்கள் விற்கக்கூடிய கடைகளிலும் இந்த பழத்தை பார்த்து இருப்பீர்கள்.
இந்த பழம் கற்றாழை குடும்பத்தை சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம் ஆகும்.
டிராகன் பழம் |
டிராகன் பழத்தின் செடியானது பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி போன்றே இருக்கும்.
இந்த பழம் பார்ப்பதற்கு அடர் சிவப்பு நிறத்திலிருக்கும். அதன் மீது பச்சை நிறத்தில் பல செதில்களையும் கொண்டிருக்கும்.
இந்த பழத்தின் உள்ளே சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் இனிப்பான கூழ் மற்றும் கருப்பு வண்ணத்தில் சிறுசிறு விதைகளையும் கொண்டிருக்கும்.
இந்த டிராகன் பழமானது வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது.
ஒவ்வொரு பழமும் சராசரியாக 700 முதல் 800 கிராம் எடையை கொண்டிருக்கும்.
இந்த பழம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், மிகவும் நன்மை தரக்கூடிய பழமாகும்.
டிராகன் பழம் |
டிராகன் பழத்தில் உள்ள சத்துக்கள்
இந்த பழத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை சாப்பிடும் பொழுது, நமது உடல் ஆரோக்கியமானதாகவும், சீராகவும் செயல்பட உதவுகிறது.
- கால்சியம்,
- பாஸ்பரஸ்,
- வைட்டமின் பி, சி, ஈ,
- இரும்புச்சத்து,
- மெக்னீசியம்,
- நார்ச்சத்து,
- ஒமேகா -3 , 6.
டிராகன் பழத்தின் மருத்துவக்குணங்கள்
இந்த பழம் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், கரடுமுரடாக இருந்தாலும், உள்ளே மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
அதுமட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட.இந்த பழம் உடலுக்கு மிகுந்த குளிர்ச்சி தரக்கூடியது.
டிராகன் பழம் |
சருமம்
அதுமட்டுமில்லாமல், இந்த பழம் நமது உடலுக்கு மட்டுமின்றி நமது சருமத்திற்கும் மிகவும் நன்மை அளிக்கக்கூடியது.
டிராகன் பழத்தில் உள்ள சத்துக்கள், உடலில் உள்ள செல்களை புதுப்பிக்கும். அதுமட்டுமின்றி, உடலில் உள்ள காயங்கள், தீயினால் ஏற்பட்ட காயங்கள் என அனைத்தையும் சரிசெய்யும்.
புற்றுநோய்
இதில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடன்டுகளை கொண்டிருப்பதால், நமது உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயை உண்டாக்கும் செல்களை வராமல் தடுக்கும்.
டிராகன் பழம் |
கொழுப்பு
இந்த பழத்தில் வைட்டமின் பி3 இருப்பதால், நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து நல்ல உடலமைப்பை தருகிறது.
உடலில் உள்ள கெட்டக்கொழுப்பை குறைக்கும் தன்மைக்கொண்டதால், தினசரி டிராகன் பழத்தை சாப்பிடும் பொழுது உடல் எடை குறையும்.
இரத்தம்
இரத்தசோகை என்பது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்கள் அளவானது குறைவாக இருக்கும்.
டிராகன் பழத்தை சாப்பிடும் பொழுது, அதில் உள்ள இரும்புச்சத்தானது இரத்தசோகையை நீக்கும். ஹீமோகுளோபின்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்.
டிராகன் பழம் |
இதயம்
அதுமட்டுமின்றி இந்த பழம் உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் வல்லமை கொண்டது.
நமது இருதயத்தில் உள்ள இரத்த நாளங்களை நன்றாக செயல்பட வைக்கின்றது.
இதனால் நமது இதயம் மட்டுமில்லாமல் நமது முழு உடலும் ஆரோக்கியமாக செயல்படுகிறது.
எலும்புகள்
டிராகன் பழத்தில் அதிகமான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து இருப்பதால், நமது எலும்புகள் மிகுந்த வலிமை அடைகிறது.
அதுமட்டுமின்றி, டிராகன் பழத்தை சாப்பிட்டு வர, நமது பற்களும் வலிமையடையும்.
டிராகன் பழம் |
கண்
இந்த பழத்தை கண் பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் சாப்பிட அவர்களது பார்வை திறன் மேம்படும்.
கண்களை பாதிக்கும் நோயான கண் அழுத்த நோயை வராமல் தடுக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
டிராகன் பழம் சாப்பிடும் பொழுது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இதனால், நமக்கு நோய் எதுவும் வராமல் தடுக்கும்.
நீரிழிவு நோய்
டிராகன் பழமானது, நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மைக்கொண்டது.
டிராகன் பழம் |
வயிறு
டிராகன் பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள், நமது செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். இதனால் செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும் தன்மைக்கொண்டது.
முடிவுரை
இந்த பழத்தை இதுவரையில் ருசிக்கவில்லையெனில், இனி மறக்காமல் ருசித்து பாருங்கள். உடலையும், சருமத்தையும் மேம்பட வையுங்கள்.
0 Comments