சர்க்கரை |
Benefits of Jaggery | Health
அனைவருக்கும் இனிப்பு என்றதும் நினைவுக்கு வருவது சர்க்கரை தான். இனிப்பு சுவைக்காக நாம் பெரிதும் பயன்படுத்தும் சர்க்கரை / வெல்லத்தின் பற்றிய பல தகவல்களை தெரிந்துக்கொள்வோம்.
பொருளடக்கம்
- வெல்லம்
- வெல்லமும், அதன் வரலாறும்
- வெல்லம் தயாரிக்கும் முறை
- வெல்லத்தில் உள்ள சத்துக்கள்
- வெல்லத்தின் நன்மைகள்
வெல்லம்
அந்த காலத்தில், இன்று நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரையை (ஜீனி) யாரும் பயன்படுத்தவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?.
உண்மையை சொல்லவேண்டும் என்றால், அந்த காலத்தில் வெள்ளை சர்க்கரை என்பதே இல்லை.
நாகரீகம் வளர வளர அனைவரும் தங்களுடைய வாழ்க்கை முறையை பல்வேறு வழிகளில் மாற்றிக்கொண்டனர்.
அந்த வகையில் நாம் மாற்றிக்கொண்டதில் மிகவும் குறிப்பிடதக்க ஒன்று நமது உணவுமுறையை தான்.
பனங்கற்கண்டு |
மேற்கத்திய கலாச்சாரத்தினால், அந்நாடுகளின் தட்வெப்ப சூழ்நிலைகளில் சாப்பிடக்கூடிய உணவுகளை நாம் இங்கு சாப்பிட தொடங்கினோம்.
அதனால் நமது உடலில் பலவகையான நோய்களை விருந்தாளிகளாக சேர்த்துக்கொண்டோம்.
அந்த காலத்தில் இந்த வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி, பனைவெல்லம், நாட்டுச்சர்க்கரை மற்றும் வெல்லம் என பலவகையான உடலுக்கு சக்தியளிக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி வந்தோம்.
அன்று அதிகமாக பயன்படுத்தியும், இன்று குறைவாக பண்டிகை காலங்களில் மட்டும் பயன்படுத்தக்கூடிய பொருளாகவும் இருக்கக்கூடிய வெல்லத்தை பற்றியும், அதனுடைய நன்மைகளை பற்றியும் பார்க்கலாம்.
நாம் சாப்பிடும் வெள்ளை சர்க்கரையால் அதிகமான நோய்கள் வருவருவதும், உடலுக்கு கேடு என்பதும் அனைவருக்கும் தெரியும்.
அந்த சர்க்கரையை வெண்மை படுத்த பலவகையான வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதே, அதற்கு காரணம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
இந்த பதிவில் நமது பாரம்பரியத்தின் ஒன்றான வெல்லத்தை பற்றியும், அதனுடைய நற்பயன்கள் பற்றியும் பார்க்கலாம்.
வெல்லமும், அதன் வரலாறும்
இந்த வெல்லம், வெள்ளை சர்க்கரையை (ஜீனி) காட்டிலும், பலமடங்கு நன்மையளிக்க கூடியது என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள்.
இந்த வெல்லத்தை பாரம்பரியத்துடன் சேர்த்து சொல்கிறேன். மிகைப்படுத்துகிறேன் என்று என்ன வேண்டாம்.
நமது பாரதத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வெல்லத்தை பயன்படுத்தி வருகின்றனர் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
நமது பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் ஆகிய இரண்டிலும் வெல்லத்தை பயன்படுத்தி வருகின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?
வெல்லம் |
அந்தகாலம் முதல் இந்தகாலம் வரை தமிழர்கள் கொண்டாடப்படும் தைப்பொங்கலில், மிக முக்கியமாக பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று இந்த வெல்லம் தான்.
இந்த வெல்லம் தமிழர்கள் மற்றுமின்றி, நமது பாரதத்தில் கலாசாரத்தினால் கொண்டாடப்படும் பண்டிகைகள் அனைத்திலும், இந்த வெல்லம் குறிப்பிடதக்க ஒன்றாகவே உள்ளது.
நமது பாரதம் முழுவதிலும் இந்த வெல்லத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.
வெல்லம் தயாரிக்கும் முறை
சுவைமிக்க கரும்புகளில் இருந்து பெறப்படும் ஒரு இனிப்பான பொருள் வெல்லம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
இது கரும்பு சாறுகளில் மற்றுமின்றி பனைமரத்தில் இருந்து பெறப்படும் பதநீர் கொண்டும் உருவாக்கலாம்.
அவ்வாறு பெறப்படும் வெல்லம் பனைவெல்லம் என்று அழைக்கின்றனர்.
ஆனால் இந்த வெல்லத்தை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
கரும்புகளில் இருந்து பெறப்படும் சாற்றினை, ஒரு பெரிய கலனில் இட்டு, அதனை காய்ச்சி கொண்டே இருக்க அது கட்டியான பதத்திற்கு மாறும்.
கரும்பு சாறு |
அந்த கட்டியான பதத்தை உருண்டைகளாக மாற்றியும், இன்னும் பல்வேறு வடிவங்களாக மாற்றியும் நமக்கு வெல்லம் கிடைக்கிறது.
கைகளினால் உருண்டைகளாக பிடிக்கப்படும் வெல்லத்தை மண்டை வெல்லம் எனவும், அச்சுகளில் ஊற்றி பெறப்படும் வெல்லம் அச்சு வெல்லம் எனவும் அழைக்கின்றனர்.
வெல்லத்தில் உள்ள சத்துக்கள்
- ஆற்றல் 383 கலோரிகள்,
- ஈரப்பதம் 3.9 கிராம்,
- புரதம் 0.4 கிராம்,
- கொழுப்பு 0.1 கிராம்,
- தாதுக்கள் 0.6 கிராம்,
- மாவுச்சத்துக்கள் 9.5 கிராம்,
- சுண்ணாம்பு 80 மி.கிராம்,
- ஏரியம் 40 மி.கிராம்,
- இரும்பு 2.64 மி.கிராம்.
வெல்லத்தின் நன்மைகள்
இந்த வெல்லத்தை சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றை இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம்.
வெல்லம் |
உடல் எடை
வெல்லம், உடல் எடையை குறைக்க உதவும் மிக சிறந்த உணவுப்பொருளாகும்.
இதில் உள்ள பொட்டாசியமானது, நமது உடலில் நீர் தங்குவதை குறைத்து நமது உடல் எடையை குறைத்து சரியாக பராமரிக்க உதவுகிறது.
நமது உணவில் வெல்லத்தை சேர்ப்பதன் மூலமாக, இனிப்பை நாம் சாப்பிட்டாலும் உடல் எடையை கூடாமல் பார்த்துக்கொள்கிறது.
பனைவெல்லத்தை பயன்படுத்துவதன் மூலமாக மெலிந்த குழந்தைகளை தேற்றிட முடியும்.
உடல் ஆற்றல் மற்றும் சர்க்கரை
நாம் வெள்ளை சர்க்கரை சாப்பிடும் பொழுது, இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து சிறிதுநேரம் உடலுக்கு ஆற்றலை வழங்கும். ஆனால் வெல்லம் அப்படி செய்வதில்லை.
வெல்லத்தை நாம் உட்கொள்ளும் பொழுது சர்க்கரை இரத்தத்தில் உடனடியாக கலக்காமல் நீண்ட நேரம் சக்தியை தருகிறது. இதனால் சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை.
கரும்பு சாறு |
சளி, இருமல்
மழைக்காலம் மற்றுமின்றி அனைத்து காலங்களிலும், நமக்கு ஏற்படக்கூடிய ஒரு தொந்தரவு என்றால் சளி மற்றும் இருமல் தான்.
இந்த பிரச்சனைகளால் அவதிப்படுவோர்கள் இந்த வெல்லத்தை வெந்நீர் அல்லது தேநீரில் கலந்து குடிக்க சரியாகும்.
மலச்சிக்கல்
இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு பழக்கங்களால், ஏற்பட்ட ஒரு தொந்தரவு மலச்சிக்கல்.
இந்த பிரச்சனையால் பல்வேறு நபர்கள் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் இந்த வெல்லத்தை சாப்பிடுவதால், இதில் உள்ள ஊட்டச்சத்து செரிமான மண்டலத்தில் நொதித்தலை மேம்படுத்தி, செரிமான மண்டலதை மேம்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.
கரும்பு |
கல்லீரல்
நாம் பொதுவாக சாப்பிடக்கூடிய இனிப்பு மற்றும் கொழுப்பு பண்டங்களை போல் அல்லாமல் வெல்லம் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நமது கல்லீரலை வலுப்படுத்துகிறது.
நமது கல்லீரலை பலப்படுத்த வெல்லத்தை, அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மாதவிடாய்
இந்த வெல்லத்தை சாப்பிடுவதினால், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சிக்கல்களையும், அதனால் ஏற்படக்கூடிய வலிகளையும் சரிப்படுத்தும் தன்மை கொண்டது.
உடல் வெப்பம்
நமது உடலில் உள்ள வெப்பத்தை குறைக்க வெல்லம் ஒரு அருமருந்தாகும்.
இந்த வெல்லத்தை சாப்பிடுவதால் உடலின் வெப்பநிலையை பராமரித்து, வயிற்றை குளிர்ச்சியாக வைக்கிறது.
இதனால் உடல் வெப்பத்தினால் உண்டாகும் நோய்கள் வராமல் தடுக்கிறது.
கோடைகாலங்களுக்கு வெல்லம் ஒரு சிறந்த உணவுப்பொருளாகும்.
கரும்பு |
இரத்தம்
நமது உடலின் ஆற்றலுக்கு வெல்லமானது மிகவும் இன்றியமையாதது ஆகும்.
இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் நமக்கு ஆற்றலை அளிக்கிறது.
இந்த வெல்லம் ஆனது, இரத்தத்தில் தேவையான அளவு சிவப்பணுக்களை பராமரிக்க உதவுகிறது.
இதனால் உடல் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக இருக்கவும் செய்கிறது.
நாம் ஓரளவு வெல்லத்தை தொடர்ந்து உணவில் சேர்த்து வர, அது நமது இரத்தத்தை சுத்திகரிக்க உதவும்.
வெல்லத்தில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகளும், கனிமச்சத்துக்களும் இயற்க்கை எதிர்வினைக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது.
வெல்லத்தை சாப்பிடுவதினால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
வெல்லத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், உடலில் அமில அளவை சரிவரப் பராமரித்து இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
கரும்பு நாற்றுகள் |
புற்றுநோய்
வெல்லத்தில் நிறைந்து இருக்கும் அதிக அளவு மெக்னீசியம் உட்பொருளானது, தொண்டை புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களை வராமல் தடுக்கிறது.
முடிவுரை
இதுபோல எண்ணற்ற பயன்களை கொண்ட வெல்லத்தை பயன்படுத்தி ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள்.
0 Comments