பிச்சைக்காரன் |
வதனபுரி என்னும் நாட்டை மகேந்திரவர்மன் என்னும் மன்னன் சீரும், சிறப்புமாக ஆண்டு வந்தான்.
மிகுந்த நல்லவனாக இருந்த மகேந்திரவர்மன், மக்களை பெரிதும் நேசித்து வந்தான்.
மக்களுக்கு எவ்வித குறைகளும் இல்லாமல் நாட்டை ஆண்டு வந்தான்.
ஆனால் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளியும் இல்லை.
இப்படியிருக்க ஒரு சமயம் மக்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என பார்ப்பதற்காக அமைச்சரும், அவனும் மாறுவேடம் தரித்து நகர்வலம் சென்றனர்.
இருவரும் ஒவ்வொரு இடமாக பார்த்து கொண்டு செல்லும் பொழுது, இரு பிச்சைக்காரர்களை பார்த்தனர்.
அதில் ஒரு பிச்சைக்காரன் கடவுள் பெயரை கூறி பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தான்.
சிவபெருமான் |
மற்றொரு பிச்சைக்காரன் மன்னன் பெயரைக் கூறி பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தான்.
இதை கண்ட மன்னன் அமைச்சரை பார்த்து, அமைச்சரே! இந்த இரு பிச்சைக்காரர்களில் யார் புத்திசாலி என்று நினைக்கிறீர்கள் என கேட்டார்.
அதற்கு அமைச்சர், இதில் என்ன சந்தேகம் மன்னா! கடவுளின் பெயரை கூறி பிச்சை எடுப்பவன் தான் என்றார்.
அதிர்ச்சியடைந்த மன்னர், எப்படி அவ்வாறு சொல்கிறீர்கள் என்றான்.
அதற்கு அமைச்சர், மன்னா! தங்களின் பெயரை கூறி எடுப்பது நீங்கள் அறிந்தால் தான் பயன்.
ஆனால் கடவுள் அனைத்தையும் அறிந்தவர் அவரால் அவனது நிலைமை மாறிவிடும் என்றார்.
மன்னன் இதை ஏற்க மறுத்து, இரு பிச்சைக்காரரையும் அழைத்து, எதற்காக இவ்வாறு கூறி பிச்சை எடுக்க காரணம் யாது என தனித்தனியாக கேட்டார்.
அதற்கு அந்த முதல் பிச்சைக்காரன், கடவுளின் பெயரை கூறிக் கேட்டால் என்றாவது ஒரு நாள் என்னுடைய நிலைமை மாறும் என்றான்.
இரண்டாவது பிச்சைக்காரன், மன்னன் இல்லையேல் இந்த நாடு இவ்வளவு வளமாக இருக்காது.
பிச்சைக்காரன் |
அதனால் மன்னனால் என்றாவது ஒரு நாள், நான் செல்வந்தனாக வருவேன் என்றான்.
இதை கேட்ட மன்னன், அரண்மனைக்கு சென்று அடுத்த வாரம் நடக்கவிருக்கும் கோவில் திருவிழாவில் நாட்டில் உள்ள அனைவருக்கும் பரிசளிக்க போவதாக அறிக்கையை ஒன்றை வெளியிட்டான்.
நாட்கள் ஓடின. கோவில் திருவிழாவும் வந்தது. நாட்டில் உள்ள அனைவரும் பரிசை வாங்க ஒன்று கூடினார். அந்த இரு பிச்சைக்காரர்களும் வந்து இருந்தனர்.
மன்னன், புத்திசாலித்தனமாக மன்னன் பெயரைக் கூறி பிச்சை எடுத்தவனுக்கு, துணியுடன், பூசணிக்காய் உள்ளே தங்கமும், வைரமும் வைத்து பரிசளித்தான்.
பூசணி |
கடவுள் பெயரைக் கூறி பிச்சையெடுத்தவனுக்கு மற்றவர்களை போல துணியுடன், பூசணிக்காய் வைத்து பரிசளித்தான்.
நாட்கள் ஓடின. மன்னன், அமைச்சரை அழைத்து வாருங்கள், நகர்வலம் சென்று, அந்த இரு பிச்சைக்காரர்களையும் பார்த்து வரலாம் என்றார்.
அமைச்சர், மன்னன் எதோ நமக்கு உணர்த்துவதற்காக அழைக்கிறார் என எண்ணி மன்னனுடன் சென்றார்.
சிறிது தூரம் சென்றதும், மன்னன் பெயரைக் கூறி பிச்சை எடுப்பவன், அதே இடத்தில் பிச்சையெடுத்து கொண்டு இருந்தான்.
மன்னன் அதிர்ச்சியடைந்து, அவனிடம் சென்று நான் கொடுத்த பூசணிக்காயை என்ன செய்தாய், ஏன் இன்னும் பிச்சை எடுக்கிறாய் என்று கேட்டான்.
அதற்கு பிச்சைக்காரன், அந்த பூசணிக்காயை வைத்து நான் என்ன செய்ய போகிறேன் மன்னா! அதை ஐந்து காசுக்களுக்கு விற்றுவிட்டேன் என்றான்.
இதை கேட்ட மன்னன், மிகுந்த கோபத்துடன், அடே முட்டாளே! உனக்கு நான் அளித்த பூசணிக்காய் உள்ளே தங்கமும் வைரமும் வைத்து கொடுத்தேன் என கூறி திட்டிவிட்டு சென்றார்.
தங்கம் |
அமைச்சர், நடப்பது அனைத்தையும், பேசாமல் கவனித்துக்கொண்டே வந்தார்.
சிறிது தூரம் சென்றதும் மன்னன் அதிர்ச்சியடைந்தான்.
அதற்கு காரணம், கடவுளின் பெயரைக் கூறி பிச்சையெடுப்பவன் மிகப்பெரிய செல்வந்தனாக மாறியிருந்தான்.
மன்னன், அவனை அழைத்து எவ்வாறு செல்வந்தனாக மாறினாய் எனக்கேட்டார்.
அதற்கு அந்த பிச்சைக்காரன், மன்னா! நான் வருடந்தோறும் எனது தந்தைக்கு அவரது நினைவு நாளில் பூசணிக்காய் சமைத்து தானமாக வழங்குவேன்.
அப்படி இந்த வருடம் நான் ஐந்து காசுகள் கொடுத்து வாங்கிய பூசணிக்காயில் ஏராளமான தங்கம் மற்றும் வைரங்கள் இருந்தன.
தங்கமும், வைரமும் |
அதனால் தான் நான் முன்னேறினேன். எல்லாம் அந்த கடவுளின் கருணை எனக்கூறி சென்றான்.
அப்பொழுது பேசிய அமைச்சர், மன்னா! இறைவன் யாருக்கு என்ன தரவேண்டும் என நினைக்கிறானோ, அது தான் நடக்கும்.
இவனை செல்வந்தனாக மாற்றவே, இவர்களை நீங்கள் பார்க்கும்படி செய்தான். நினைத்தததை நடத்தியும் விட்டான் என்றார்.
இதைக்கேட்ட மன்னன், உண்மை தான் அமைச்சரே! உணர்த்தேன்.
அனைவருக்கும் மேலாக கடவுள் ஒருவன் இருக்கிறான். அவன் நினைப்பதே நடக்கும் எனக்கூறினான். அன்று முதல் மன்னன் கடவுள் பக்தனாக மாறினான்.
0 Comments