Ticker

6/recent/ticker-posts

கொத்தமல்லித்தழையின் நன்மைகள் | ஆரோக்கியம்

கொத்தமல்லித்தழை
கொத்தமல்லித்தழை

Benefits of Coriander Leaf | Health

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் தனியாவைப்போல, தனியாவின் இலைகளான கொத்தமல்லி தழையிலும் பல்வேறு நன்மைகள் உள்ளன.

இந்த பதிவில் கொத்தமல்லி தழையில் உள்ள நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • கொத்தமல்லி தழை
  • கொத்தமல்லி தழையில் உள்ள சத்துக்கள்
  • கொத்தமல்லி தழையின் மருத்துவக்குணங்கள்

கொத்தமல்லித்தழை

கொத்தமல்லி (Coriander) என்றதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது தனியா தான்.

கொத்தமல்லியின் விதைகளை தான் நாம் தனியா (Coriander) என்று அழைக்கிறோம். இந்த கொத்தமல்லி ஒரு மூலிகை தாவரமும் கூட.

தனியாவுக்கு என்று பல சிறப்புகள் இருந்தாலும், அதன் தழைகளுக்கு, அதாவது கொத்தமல்லி தழைக்கும் பல்வேறு சிறப்புகள் உள்ளன.

இந்த கொத்தமல்லித்தழை இல்லாவிடில் கறி குழம்பானாலும், இரசமானாலும் சரி, அதன் மணமும், சுவையும் திருப்தியாக இருக்காது.

இஸ்ரேலில் கிடைத்த கொத்தமல்லி விதைகள் சுமார் 8000 ஆண்டுகள் பழமை ஆனது என நம்பப்படுகிறது.

நமது உணவுகளில் அவ்வளவு முக்கியத்துவம் கொண்டதாக இதை பயன்படுத்தி வருகின்றனர்.

பெரும்பாலும், இந்த கொத்தமல்லி தழையை (Coriander Leaf) அசைவ மற்றும் சைவ உணவுகளில் வாசனைக்கு என்று மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த கொத்தமல்லியில் வாசனை மட்டும் அல்லது பல நல்ல விஷயங்களும் தன்னகத்துள் கொண்டுள்ளது.

இந்த கொத்தமல்லித்தழையை வாசனைக்கு மட்டுமின்றி தனியாக துவையல், சட்னி என செய்தும் சாப்பிடலாம். இதனால் இதனது பயனானது பல மடங்குக்கூடுகிறது.

கொத்தமல்லித்தழை
கொத்தமல்லித்தழை

கொத்தமல்லி தழையில் உள்ள சத்துக்கள்

நாம் அன்றாட உணவில் மணத்துக்காகவும், சுவைக்காகவும் பயன்படுத்தும், கொத்தமல்லி தழையில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

      • வைட்டமின் ஏ, சி, கே,
      • நார்ச்சத்துக்கள்,
      • இரும்பு சத்து,
      • மாங்கனீசு,
      • கால்சியம்,
      • பாஸ்பரஸ்.


கொத்தமல்லி தழையின் மருத்துவக்குணங்கள்

உண்மையில் கொத்தமல்லி தழையில் உள்ள மருத்துவக்குணங்களை தெரிந்துக்கொள்ளாமலே, அன்றாடம் பயன்படுத்தி வருகின்றோம்.

இனிமேல் கொத்தமல்லி தழையில் உள்ள மருத்துவக்குணங்களை தெரிந்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

கொத்தமல்லித்தழை
கொத்தமல்லித்தழை

இரத்தம்

மல்லித்தழையை, தனியாகவோ அல்லது வேறு ஏதாவது உணவுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது நமக்கு பலவகைகளில் பயனளிக்கிறது.

அந்த வகையில் மிக முக்கியமாக நமது இரத்தத்தை சுத்திகரிக்க இது பயன்படுகிறது.

இதனை உணவுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது, நமது இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களை சுத்திகரித்து, இரத்தத்தை மேம்படச்செய்கிறது.

சருமம் மேம்பட

கொத்தமல்லி தழையில் உள்ள சத்துக்கள் சருமத்தை பாதுக்காக்க பெரிதும் உதவுகிறது.

கொத்தமல்லி தழையிலிருக்கும் எண்ணெயானது சருமத்தை குளிர்விக்கவும், பூஞ்சை தொற்றை நீக்கவும் பயன்படுகிறது.

கொத்தமல்லித்தழை
கொத்தமல்லித்தழை

கண்

மல்லித்தழையை சிறு வயதில் இருந்து சாப்பிட்டு வந்தால், கண் பார்வைக்குறைபாடு வராமல் தடுக்கிறது.

அதுமட்டுமில்லாமல் மாலைக்கண் நோயுடையவர்கள், இந்த மலைத்தழையை சாதத்துடனோ அல்லது வேறு எதாவது வழிகளில் உட்கொண்டு வந்தால் நாளடைவில் சரியாகும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண், வயிற்றுவலி

கொத்தமல்லித்தழை மற்றும் தேங்காய் வைத்து துவையல் செய்து சாப்பிட்டுவர வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் வயிற்றுவலி என அனைத்தையும் குணமாக்கும் சக்தி கொண்டது.

கொத்தமல்லித்தழை
கொத்தமல்லித்தழை

உடம்பு வலி, மலச்சிக்கல்

தீராத உடம்புவலி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு கொத்தமல்லி தழை சிறந்த மருந்தாகும்.

கொத்தமல்லித்தழையுடன், வெற்றிலையை சேர்த்து அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவிற்கு சாப்பிட உடம்பு வலி, மலச்சிக்கல் சரியாகும்.

கொழுப்பு

நமது உடலில் உள்ள கெட்டக்கொழுப்பை குறைக்கும் ஆற்றல் கொத்தமல்லி தழைக்கு உண்டு.

கொத்தமல்லி தழையை உணவில் சேர்ப்பதன் மூலமாக உடலில் கெட்டக்கொழுப்பு சேர்வது குறையும். உடலும் ஆரோக்கியமாகும்.

கொத்தமல்லித்தழை
கொத்தமல்லித்தழை

எலும்பு

கொத்தமல்லி தழையில் உள்ள கால்சியம் நமது எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது.

அதுமட்டுமின்றி, இதில் உள்ள இதர சத்துக்கள் மூட்டு வலியில் இருந்தும் காக்கிறது.

குடல் ஆரோக்கியம்

கொத்தமல்லி தழையில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் குடலின் இயக்கத்தை மேம்படுத்தும். இதனால் செரிமானம் சீராகும்.

செரிமான பிரச்சனைகள் ஆன வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குடல் பிடிப்பு போன்றவை சரியாகும்.

கொத்தமல்லித்தழை
கொத்தமல்லித்தழை

முடிவுரை

இது போல எண்ணற்ற பயன்கள் கொண்ட கொத்தமல்லியை சாப்பாட்டில் இருந்து நீக்காமல், சாப்பிடுங்கள் உடலை ஆரோக்கியமாக வையுங்கள்.

Post a Comment

0 Comments