Ticker

6/recent/ticker-posts

குங்குமப்பூவின் நன்மைகள் | ஆரோக்கியம்

குங்குமப்பூ
குங்குமப்பூ

Benefits of Saffron | Health

உலகிலேயே அதிக விலைமிக்க மலர்களில் ஒன்று. உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு தெரிந்த மலர்களில் ஒன்றான குங்குமப்பூவை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • குங்குமப்பூ
  • குங்குமப்பூவின் தமிழ்ப்பெயர்
  • குங்குமப்பூ விளையும் பகுதி
  • குங்குமப்பூவும், மூடநம்பிக்கையும்
  • குங்குமப்பூவில் உள்ள சத்துக்கள்
  • குங்குமப்பூவின் மருத்துவக்குணங்கள்

குங்குமப்பூ

இந்த குங்குமப்பூ பண்டைய காலம் முதல், இக்காலம் வரை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை பயன்கள் ஏராளம். அதனால் தான் என்னவோ விலையும் ஏராளமாக உள்ளது.

குங்குமப்பூ என்று இதை அழைத்தாலும், உண்மையில் நாம் பயன்படுத்துவது குங்குமப்பூவையல்ல. குங்குமப்பூவில் உள்ள ஒருசில பகுதிகளை தான்.

குங்குமப்பூ
குங்குமப்பூ

இந்த மலரானது வெளிரிய இளஊதா வண்ணத்தில் இருக்கும். ஆனால் இதை பயன்படுத்த மாட்டார்கள்.

இதன் மலர்களை அகற்றிவிட்டு, இதன் மையத்திலிருக்கும் இளம்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும் மகரந்தத்தையும், அதன் சூல்தண்டுகளையும் மட்டுமே பயன்படுத்துவார்கள்.

குங்குமப்பூவில் இருந்து கிடைப்பதால், இதை நாம் குங்குமப்பூ என்கிறோம். ஒரு கிலோ குங்குமப்பூவை பெற இலட்சக்கணக்கான மலர்கள் தேவைப்படும்.


குங்குமப்பூவின் தமிழ்ப்பெயர்

தமிழில் குங்குமப்பூவிற்கு மிக அழகான பெயருள்ளது. அந்த பெயர் "ஏழல் மலர்". இந்த பெயரானது சங்ககால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மலரை காஷ்மீர் கன்னி என்றும், காஷ்மீர் இராணி என்றும் அழைக்கின்றனர்.

குங்குமப்பூ
குங்குமப்பூ

குங்குமப்பூ விளையும் பகுதி

இந்த மலரானது உலகிலேயே ஸ்பெயின் நாட்டில் தான் மிக அதிகமாக விளைகிறது.

ஆனால் நமது நாட்டில் விளையும் குங்குமப்பூவிற்கு மற்ற நாடுகளில் தனி மதிப்பு கொண்டதாகவே இருந்து வருகிறது.

நம் நாட்டில் உள்ள காஷ்மீரில் தான் குங்குமப்பூவானது விளைகிறது.

இந்த குங்கமப்பூவானது அதிக அளவில் ஜீலம் நதிக்கரையில் அமைத்திருக்கும் பாம்போர் என்ற சிறுநகரத்தில் விளைகிறது.

இந்த மலரை சாகுபடி செய்ய நீண்ட காலங்கள் ஆகின்றன.

குங்குமப்பூ விளைவிப்பதிலும், அதை முறைப்படி பிரித்து பதப்படுத்துவதிலும் நுட்பமான முறைகள் பின்பற்றப்படுகின்றன.

குங்குமப்பூ
குங்குமப்பூ

குங்குமப்பூவும், மூடநம்பிக்கையும்

குங்குமப்பூவை பற்றி பலர் ஒரு தவறான தகவலை உண்மையென, பல காலங்களாக எண்ணிவருகின்றனர்.

அந்த தவறான தகவல் என்னவென்றால், பெண்கள் கர்ப்பக்காலங்களில் குங்குமப்பூவை சாப்பிடுவதால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது தான்.

இந்த நம்பிக்கையை சோதிக்க பல்வேறு நாட்டு ஆராச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டு, இறுதில் இந்த நம்பிக்கையானது பொய்யென நிரூபித்தனர்.

அதற்காக குங்குமப்பூவை சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை.

இந்த குங்குமப்பூ, அதை தவிர்த்து எண்ணற்ற பலன்களை தரக்கூடியது. இந்த குங்குமப்பூவைப் பற்றி ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கலாம் வாருங்கள்.

குங்குமப்பூ
குங்குமப்பூ

குங்குமப்பூவில் உள்ள சத்துக்கள்

குங்குமப்பூ ஆனது எண்ணிலடங்கா நோய்களை கட்டுப்படுத்தும் திறன் வாய்ந்தது. இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

      • ஆன்டி-ஆக்சிடென்டுகள்
      • கரோட்டின்,
      • வைட்டமின் சி, ஏ,
      • மாங்கனீசு,
      • பொட்டாசியம்,
      • கால்சியம்.

இதில் உள்ள கரோட்டின், வைட்டமின் சி, மாங்கனீசு மற்றும் பாலுணர்வை தூண்டக்கூடிய ஹார்மோன்கள் நிறைந்துள்ளன.


குங்குமப்பூவின் மருத்துவக்குணங்கள்

இந்த குங்குமப்பூ ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது. இது நம்நாடு மற்றுமின்றி பல்வேறு நாடுகளில் அவரவர்கள் பாரம்பரிய வைத்தியங்களில் இதை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

குங்குமப்பூ
குங்குமப்பூ

பெண்களின் கர்ப்பக்காலத்தில் குங்குமப்பூ

குங்குமப்பூவை கர்ப்பக்காலத்தில் பெண்கள் சாப்பிடுவதால், இரத்தவோட்டம் அதிகரிப்பது மட்டுமில்லாமல், அவர்களது இரத்தத்தினையும் சுத்திகரிக்கிறது.

இதனால் குழந்தை எவ்விதமான குறைபாடுகளும் இல்லாமல் முழுவளர்ச்சியுடன், ஆரோக்கியமாக பிறக்கிறது.

இந்த குங்குமப்பூவை பெண்களுக்கு கர்ப்பக்காலங்களில் 3 முதல் 5 மாதங்கள் வரை கொடுக்கலாம்.

அதுபோல அதிகமான பெண்களுக்கு இருக்கக்கூடிய குறைபாடு இரத்தசோகை, இந்த குறைபாட்டையும் எளிதில் சரி செய்யும் வல்லமை குங்குமப்பூவிற்கு உண்டு.

இதனை மனதில் கருதியே பெரியோர்கள், இதை கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு கொடுக்க கூறி வந்தனர்.

கண் பார்வை குறைபாடு

பார்வை குறைபாடு உள்ளவர்கள் இந்த குங்குமப்பூவை சிறிது சாப்பிட்டு அவர்களுக்கு கண்பார்வை திறனானது விரைவில் அதிகரிக்கும்.

அதுமட்டுமில்லாமல், இதை முதியோர்கள் சாப்பிட்டு வர அவர்களுடைய கண்பார்வை மேம்படும். இது குங்குமப்பூ மாத்திரை வடிவிலும் கிடைக்கின்றது.

குங்குமப்பூ
குங்குமப்பூ

பாலுணர்ச்சியை தூண்டும் குங்குமப்பூ

இந்த குங்குமப்பூவை ஆண்கள் சாப்பிடுவதால், புகைப்பழத்தினால் பாதிக்கப்பட்ட நரம்பு மண்டலமானது விரைவில் சரியாகும்.

அதுமட்டுமில்லாமல், இதில் உள்ள செக்ஸ் ஹார்மோன்கள் அவர்களது இல்லற நேரத்தை அதிகரித்து வாழ்க்கையில் கணவன் மனைவி இடையிலான நெருக்கத்தை மேம்படுத்தும்.

ஆஸ்துமா

சுவாச நோய்களில் மிகவும் கஷ்டத்தை கொடுக்க கூடியது என்றால் அது ஆஸ்துமா தான்.

குங்குமப்பூவில் உள்ள மாங்கனீசு, ஆஸ்துமா நோயை சரிசெய்ய இன்றியமையாத பொருளாக உள்ளது.

நமது பாரம்பரிய மருத்துவத்திலும் இந்த குங்குமப்பூவை பயன்படுத்தி வருகின்றனர்.

குங்குமப்பூ
குங்குமப்பூ

புண்களை குணப்படுத்தும் குங்குமப்பூ

குங்குமப்பூவில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள் தீக்காயங்களை குணப்படுத்தி, நமது சருமத்தை பழைய நிலைக்கு கொண்டுவரும் தன்மை கொண்டது.

அதுமட்டுமின்றி வயிற்றுப்புண்ணையும் சரிசெய்யும் தன்மை கொண்டது.

நமது செரிமான மண்டலத்தை மேம்படுத்தும் தன்மையும் கொண்டது.

உணவில் குங்குமப்பூவின் பங்கு

ஒருவகையில் குங்குமப்பூ மசாலா பொருளும் கூட. இதை நாம் சமைக்கும் சமையலில் சேர்ப்பதால், நல்ல மணத்தையும் கொடுக்கும் முக்கியப் பொருளாக அமைகிறது.

நாம் சமைத்த உணவில், இறுதியில் சிறிதளவு குங்குமப்பூ சேர்ப்பதால் நல்லசுவை மற்றும் மணம் கிடைக்கிறது.

குங்குமப்பூ
குங்குமப்பூ

அழகு

பெரும்பாலான அழகு சாதனப்பொருள்களில் இந்த குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது.

குங்குமப்பூவுடன் சிறிதளவு சந்தனம் மற்றும் பாலை சேர்த்து, நமது முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால் முகமானது பொலிவுடன் இருக்கும்.

முடிவுரை

இந்த குங்குமப்பூ விலை அதிகமாக இருந்தாலும், இதை நாம் சாப்பிடுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களை நமக்கு வராமல் தடுக்கிறது.

ஆகையால், வாய்ப்பு கிடைக்கும் பொழுது தவறாமல் சாப்பிடுங்கள். இனி இந்த குங்குமப்பூவை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வையுங்கள்.

Post a Comment

0 Comments