முனிவர் |
முன்னொரு காலத்தில் அழகான ஒரு வனத்தில் ஒரு முனிவரும், அவருடைய சீடர்களும் வசித்து வந்தனர்.
அந்த முனிவர் தனது உயிருக்கும் மேலாக எண்ணி வாழ்ந்து வந்தார்.
அவருடைய சீடர்களும் குருவிற்கு ஏற்றாற்போல தர்மத்தை காத்து வாழ்ந்து வந்தனர்.
அந்த அழகிய வனத்தில் எண்ணற்ற வளங்கள் இருந்ததால், அவர்கள் எதையும் யாரிடமும் கேட்காமல் தங்களது வாழ்க்கையை கடவுளுக்கு அர்ப்பணித்து வாழ்ந்தனர்.
இப்படி இருக்க ஒரு சமயம் மழை பொய்த்து போனது. இதனால் காடானது தான் சேமித்து காத்து வைத்திருந்த பசுமை எனும் அழகை இழந்தது.
இதனால் அந்த முனிவரும், அவர்களது சீடர்களும் கவலையில் உறைந்து போயினர்.
காட்டை எப்படியாவது பசுமையாக்க வேண்டும் என எண்ணி கடவுளை எண்ணி முனிவர் தியானத்தில் உறைந்தார்.
அப்பொழுது கடவுள் அவருக்கு காட்சியளித்து, இந்த காடு, இந்த காலத்தில் இப்படி இருக்க வேண்டும் என்பது விதி.
வறண்ட காடு |
அது தானாக மாறிவிடும் கவலைக்கொள்ளாதீர்கள் என்றார்.
முனிவர், இந்த காட்டில் எண்ணற்ற விலங்குகள் உண்ண உணவின்றி தவித்து வருகிறது.
அதனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். அதற்கு எதாவது வழி சொல்லுங்கள் என்றார்.
அதற்கு கடவுள், இந்த நாட்டின் எல்லையில் பசுமை இன்னும் மாறாமல் உள்ளது. அங்கு செல்லுங்கள்.
உங்களுக்கு அங்கு உதவி கிடைக்கும். இந்த இடம் இப்பொழுது இருக்க தகுதியில்லாதது, காலம் மாறிய பின்னர் வாருங்கள் என்றார்.
முனிவர், கடவுள் சொன்ன படி, அந்த நாட்டின் எல்லைக்கு சென்றார்.
அவரை பின்தொடர்ந்து சீடர்களும், காட்டிலுள்ள அனைத்து விலங்குகளும் சென்றது.
அந்த காடு ஓரளவிற்கு பசுமை நிறைந்ததாக இருந்தாலும், சீடர்கள் பசியில் வாடினர்.
காரணம் எண்ணற்ற மக்கள் வறுமையால் முனிவரை பார்க்க வந்த வண்ணம் இருந்தனர்.
அவர்களை கண்ட முனிவர், கவலையுடன் ஆற்றிற்கு குளிக்க சென்றார்.
கடவுளை நினைத்து எப்படி நான் இவர்களுக்கு உதவுவது என்று கேக்க, அப்பொழுது அந்த ஆற்றில் ஒரு பாத்திரம் மிதந்து வருவதை கண்டு அதனை கையில் எடுத்தார்.
அட்சயபாத்திரம் |
அதில் ஒரு ஓலை சுவடியும் இருந்தது. அதில் இந்த பாத்திரம் மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு கிருஷ்ணன் கொடுத்த அட்சயபாத்திரம்.
யார் எதை கேட்டாலும் தரக்கூடியது என எழுதப்பட்டு இருந்தது.
இதனை கண்ட முனிவர், சந்தோஷத்தில் கடவுளுக்கு நன்றி கூறினார்.
பின்னர், ஆசிரமத்திற்கு சென்று அந்த பாத்திரத்தின் மூலமாக உணவை வரவழைத்து அனைவர்க்கும் அளித்தார்.
உணவின் ருசியானது அனைவரையும் மெய்மறந்து போகச் செய்தது.
இப்படியே நாட்கள் போக, அங்கு மக்கள் ஏராளமானோர் கூட ஆரம்பித்தனர்.
முனிவரும் வறுமையென வரும் அனைவருக்கும் உணவளித்தார். இந்த செய்தி அந்த நாட்டு மன்னன் அறிந்து அந்த பாத்திரத்தை எப்படியாவது அடைய வேண்டும் என நினைத்தான்.
முனிவரை காண நேரில் சென்று சந்தித்தார். மன்னரை கண்ட முனிவர் அந்த பாத்திரத்தின் உதவியால், உணவை வரவழைத்து அனைவருக்கும் அளித்தார்.
விருந்து |
அந்த உணவை உண்ட மன்னன் மெய்மறந்து போனான்.
மன்னன்! முனிவரை பார்த்து, முனிவரே எனக்கு நீங்கள் இந்த பாத்திரத்தை கொடுக்க வேண்டும். இல்லையேல் உங்களுக்கு தக்க தண்டணை அளிப்பேன் என்றான்.
இதனை கேட்ட முனிவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மன்னனை பார்த்து, மன்னா! இதற்கு என் கோபப்படுகிறீர்கள். தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.
இதனை கேட்ட மன்னன், சந்தோஷத்தில் முனிவர் கொடுத்த அந்த பாத்திரத்தை கையில் வைத்து உணவை வர வேண்டினான். ஆனால் வரவில்லை.
இதை கண்ட மன்னன், முனிவரே என்னை ஏமாற்றும் எண்ணம் கொண்டீரோ? என்றான்.
அதற்கு முனிவர், அப்படியொரு எண்ணம் துளியும் இல்லை மன்னா. எனக்கும் எதனால் இப்படி நடக்கிறது என புரியவில்லை என்றார்.
முனிவரின் பெருந்தன்மையான பேச்சை கண்ட மன்னன். முனிவரை பார்த்து, மன்னியுங்கள் முனிவரே! நான் உண்மையில் உங்களை அன்பின் காரணமாகவே சந்திக்க வந்தேன்.
காடு |
பின்னர், இந்த பாத்திரத்தின் அதிசயத்தை கண்டு இதன் மூலமாக நாட்டு மக்கள் அனைவரும் வறுமையில் இருந்து மீள வேண்டும் என எண்ணினேன்.
அதனால் தான் இவ்வாறு நடந்துக்கொண்டேன் என்றான்.
இதனை கேட்ட முனிவர், மன்னனின் நல்ல குணத்தை எண்ணி மகிழ்ச்சியடைந்தார்.
பின்னர், எதனால் மன்னனுக்கு பாத்திரம் பயனளிக்கவில்லை என யோசிக்க தொடங்கினர்.
அப்பொழுது, தனக்கு இந்த பாத்திரம் எவ்வாறு கிடைத்ததோ, அவ்வாறே மன்னனுக்கு கிடைக்க செய்யலாம் என எண்ணி ஆற்றில் விட்டு மன்னனை எடுக்க சொன்னனர்.
மன்னனும், அவ்வாறே அந்த பாத்திரத்தை பெற்றுக்கொள்ள பாத்திரமும், மன்னன் கேட்டதை கொடுத்தது. மன்னன் அதன் மூலமாக மக்களை வறுமையில் இருந்து மீட்டான்.
மழையும் பொழிந்தது, நாடும் செழிப்படைந்தது.
கதையின் நீதி!
தனக்கு மட்டும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என எண்ணுவது சுயநலம். நாடு முன்னேறினால் நாமும் முன்னேறலாம்.
0 Comments