நிலக்கடலை |
Benefits of Groundnut | Health
இந்த உலகத்தில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை அதிகமான நபர்களால் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப்பொருள் என்றால், அது நிலக்கடலை தான்.
அப்படிப்பட்ட நிலக்கடலையின் மகத்தான சிறப்புகளை இந்த பதிவின் மூலமாக நாம் பார்க்கலாம்.
பொருளடக்கம்
- நிலக்கடலை
- நிலக்கடலையும், வரலாறும்
- நிலக்கடலையும், புரட்டுகளும்
- நிலக்கடலையில் உள்ள சத்துக்கள்
- நிலக்கடலையின் நன்மைகள்
நிலக்கடலை
அந்த காலம் முதல் இந்த காலம் வரை, நம் நாட்டில் நமது மண்ணில் பயிரிடப்பட்டு வந்தாலும், இது தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டு வழியாகத் தான் நமது நாட்டிற்கு வந்தது என்று வரலாறு கூறுகிறது.
இந்த வேர்க்கடலை உற்பத்தியில் நமது இந்திய நாடு உலகிலேயே இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
![]() |
வேர்க்கடலை |
இந்த நிலக்கடலை பல்வேறு வடிவங்களாக, நாம் உண்ணக்கூடிய வகையில் கிடைக்கிறது என்பது அனைவரும் அறிந்தது தான்.
இந்த நிலக்கடலையை, வேர்க்கடலை என்றும், சில கிராமப்புறங்களில் மொலாட்டைப்பயறு என்றும் அழைப்பார்கள்.
நிலக்கடலையும், வரலாறும்
இந்த நிலக்கடலைக்கு ஒரு வரலாறு உண்டு. அதாவது நமது நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்சத்தின் பொழுது எண்ணற்ற இடங்களில் மக்களுக்கு இலவசமாக உணவினை வழங்க கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டன.
அந்த கஞ்சித்தொட்டிகளில் கஞ்சிகளோடு, ஒருபிடி வேர்க்கடலையும் தரப்பட்டதாக வரலாறு உண்டு.
அதன் அதீத சத்துக்களின் காரணமாகவே அதை தந்துள்ளனர்.
![]() |
வேர்க்கடலை |
நிலக்கடலையும், புரட்டுகளும்
நமது தாத்தா, பாட்டி காலத்தில் அதிகமாக பயன்படுத்த எண்ணெய் என்றால், இந்த நிலக்கடலையில் இருந்து பெறப்படும் கடலை எண்ணெய் தான்.
இந்த எண்ணெயை அதிகமாக பயன்படுத்திய அவர்கள் இன்றும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை நாம் பார்த்திருப்போம்.
இந்த எண்ணெய் சாப்பிடுவதால் நமது உடலுக்கு கெடுதல் வரும் எனக்கூறி ஆரோக்கியமற்ற எண்ணெய்களை நமது தலையில் கட்டிவிட்டனர் என்பது தான் கசப்பான உண்மை.
வேர்க்கடலையில் அதிகமான கொழுப்பு சத்துக்கள் உள்ளதால், அதை சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமனாகிவிடும்.
இரத்தழுத்தம் அதிகமாகி இதயநோய்கள் வரும் எனக்கூறி ஒரு தவறான தகவலை பரப்பிவிட்டனர்.
![]() |
வேர்க்கடலை |
இதுவரை நிலக்கடலை மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.
தற்பொழுது இந்த கடலை எண்ணையின் மகத்துவம் புரிந்து பெரும்பாலானோர் மாறிவருகின்றனர்.
உண்மையில், வேர்க்கடலையில் இருக்கும் 'ரெஸ்வரெட்ரால்' என்ற சத்து நமது இதய வால்வுகளை பாதுகாக்கும் தன்மைக்கொண்டது. இது இதயநோய் வராமல் காக்கும் சக்திக்கொண்டது.
நிலக்கடலையில் உள்ள சத்துக்கள்
நிலக்கடலையில் பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த நிலக்கடலை அல்லது இதில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடும் பொழுது, நமது ஆரோக்கியம் மேம்படும்.
- பாஸ்பரஸ்,
- இரும்புசத்து,
- புரதம்,
- பொட்டாசியம்,
- கால்சியம்,
- ஒமேகா-3,
- துத்தநாகம்,
- விட்டமின்கள்,
- போலிக் அமிலம்,
- குறுட்டாமிக் அமிலம்.
பல்வேறு வகைகளான ஊட்டச்சத்துக்களை கொண்ட காரணத்தால், நிலக்கடலையை சமசீர் உணவாக கருதுகின்றோம்.
![]() |
வேர்க்கடலை |
நிலக்கடலையின் நன்மைகள்
நிலக்கடலையில் உள்ள பல்வேறு சத்துக்கள், பல்வேறு நன்மைகளை நமது உடலுக்கு அளித்து, நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இளமை
நமது உடலுக்கு நோய்கள் ஏற்படும் பொழுது, செல்கள் பாதிக்கப்பட்டு பொலிவை இழக்கிறது.
நிலக்கடலையை சாப்பிடும் பொழுது நிலக்கடலையில் உள்ள 'பாலிபினால்' என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட், நோய் வருவதை தடுத்து இளமையுடன் திகழ உதவும்.
மனஅழுத்தம்
மனஅழுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளவர்கள் நிலக்கடலையை எடுத்து கொள்வதன் மூலமாக மனஅழுத்தம் சரியாகும்.
நிலக்கடலையில் உள்ள வைட்டமின் 'பி' மற்றும் வைட்டமின் 'ஈ' போன்றவை, நமது மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, மனஅழுத்தத்தை நீக்கும்.
![]() |
வேர்க்கடலை |
நோய் எதிர்ப்பு சக்தி
நிலக்கடலையில் உள்ள கொழுப்பானது நமது உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு ஆகும்.
ஆகையால் இதை சாப்பிடும் பொழுது இதில் உள்ள ஒமேகா-3 சத்து, கேட்ட கொழுப்புக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இரத்த அழுத்தம், சர்க்கரை
இந்த வேர்க்கடலையில் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிக குறைவாகவே உள்ளது.
அதனால் இதை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் அதிகரிப்பது இல்லை.
அதுபோல, இந்த வேர்க்கடலை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் அதிகரிப்பதில்லை.
அதனால் சர்க்கரை நோயாளிகளும் கூட இந்த வேர்க்கடலையை, தினந்தோறும் ஒரு கைப்பிடி அளவிற்கு சாப்பிடலாம்.
![]() |
வேர்க்கடலை |
புரதச்சத்து
இது குழந்தைகளுக்கு மிக முக்கியமான உணவுப்பொருள். இதில் உள்ள புரதச்சத்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
சாதாரணமாக முட்டையில் இருப்பதை விட, இதில் இரண்டரை மடங்கு அதிகமான புரதச்சத்து இருக்கின்றது.
கருப்பை, கருப்பை கட்டிகள்
இந்த வேர்க்கடலை பெண்களுக்கு மிகவும் பயளிக்கவல்லது. இதில் உள்ள 'போலிக் ஆசிட்' பெண்களின் கருப்பையை சீராக செயல்பட வைக்கும் ஆற்றல் கொண்டது.
அதுமட்டுமில்லாமல், கருப்பையில் கட்டிகள் உருவாகுவதையும் தடுக்கும் சக்தி கொண்டது.
எலும்பு
நமது எலும்புகளுக்கு இந்த வேர்க்கடலை மிகவும் நன்மை அளிக்கவல்லது.
இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு சிதைவு நோயில் இருந்து நம்மை காப்பதோடு, நமது எலும்பினை வலுவடைய செய்யும்.
![]() |
வேர்க்கடலை |
முடிவுரை
நமக்கு இந்த வேர்க்கடலை எண்ணற்ற பலவகைகளில் உணவுப்பொருளாக கிடைக்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே!.
"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்பதை போல, இதை நாம் அதிகமாக சாப்பிட்டால், நமது உடலில் பித்தம் அதிகரிக்கும்.
ஆகையால் தினமும் ஒரு கைப்பிடி அளவிற்கு சாப்பிட்டு வந்தால் எவ்விதமான பாதிப்பும் வராது.
இப்படி சாப்பிடுவதால், நமது உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆகையால் தவறாது தினமும் இந்த நிலக்கடலையை சாப்பிடுங்கள், உடலை ஆரோக்கியமாக வையுங்கள்.
0 Comments