Ticker

6/recent/ticker-posts

ஆருயிர் நண்பனும், இளவரசியின் காதலும் | பகுதி 8 | விக்ரமாதித்தன் கதைகள்

vikramathithan kathaikal
விக்ரமாதித்தன் கதைகள்

Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 8

வேதாளம் தனது மூன்றாவது கதையை விக்ரமாதித்யனிடம் கூற தொடங்கியது.

வசந்தபுரி என்னும் ஒரு அழகான ஊரை சந்திரசீலன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.

அந்த மன்னனுக்கு அழகிய ஒரு மகன் இருந்தான். அந்த இளவரசனும், மந்திரியின் மகனும் இணைபிரியாத நண்பர்கள்.

அவர்கள் ஒருவருக்கொருவர் எப்பொழுதும் ஒன்றாகவே பிரியாமல் இருந்தனர்.

அவர்களின் நட்பை கண்டு மன்னனும் மந்திரியும் வியந்துபோயினர்.

ஒருநாள், இருவரும் வேட்டையாட ஒரு காட்டிற்கு சென்றனர். அந்த அழகிய காட்டிற்கு நடுவில் அழகிய ஒரு குளம் இருந்தது.

அந்த குளத்தில் ஏராளமான தாமரை மலர்கள் மலர்ந்து, அந்த குளமே பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது.

அந்த குளத்தின் அழகை இருவரும் பார்த்து வியந்து கொண்டிருக்க, இளவரசன், அந்த குளத்தில் ஒரு பெண் குளிப்பதை கண்டான். அவன் அவளது அழகை கண்ட மயங்கிப்போனான்.

அந்த குளத்தில் குளித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணும், இளவரசனை கண்டு தனது மனதை பறிகொடுத்தாள்.

நீராடல்
நீராடல்

பின்னர், அவள் ஒரு தாமரை மலரை பறித்து கண்களில் ஒத்தி எடுத்து, பின்னர் அதை தனது பற்களால் மெல்ல கடித்தது காலில் போட்டுக்கொண்டாள்.

பின்னர் இன்னொரு மலரை பறித்து, முத்தமிட்டு, மார்பில் அனைத்து, பின்னர் தலையில் சூட்டிக்கொண்டாள்.

பின்னர் அவள் அங்கிருந்து செல்ல இளவரசன் தன்னையே பார்ப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றாள்.

அவள் அங்கிருந்து சென்ற பின்னர், சுயநினைவுக்கு வந்த இளவரசன் நடந்தவற்றை தனது நண்பனிடம் கூறினான். அவள் செய்த சைகைக்கு பதில் கேட்டான்.

மந்திரியின் மகனும், அவள் செய்த சைகைக்கு பதில் கூறினான். அவள் மலரை பறித்து தனது கண்ணில் ஒத்திக்கொண்டதற்கு அவள் இளவரசி என்று அர்த்தம்.

பற்களால் கடித்ததால் அவளது பெயர் பத்மாவதி என்றும், காலில் போட்டதற்கு அவளது தந்தை பெயர் காளிங்கராயன் ஆக இருக்க வேண்டும் என்று கூறினான்.

இளவரசன் அடுத்த சைகைக்கு என்ன அர்த்தம் என கேட்க, அவனது நண்பன் அதற்கும் பதிலளிக்க தொடங்கினான்.

ஒரு மலரை பறித்து முத்தமிட்டால் எனில் அவளுக்கு உன்னை மிகவும் பிடித்து இருக்கிறது என்று அர்த்தம்.

தாமரை மலர்
தாமரை மலர்

பின்னர் அதை தனது மார்புடன் அனைத்து, தனது தலையில் சூடிக்கொண்டாள் எனில் அவள் இரகசியமாக உன்னிடம் உறவுக்கொள்ள ஆசைக்கொள்கிறாள் என்று அர்த்தம் என்றான்.

இளவரசன், தனது நண்பனின் அறிவாற்றலை கண்டு வியந்து போனன்.

அவனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அவனை தனது தூக்கிக்கொண்டு சுற்றினான்.

பின்னர் இருவரும், பக்கத்துக்கு நாட்டிற்கு சென்றனர். அப்பொழுது அங்கிருந்த ஒரு பூவிற்கும் பாட்டியிடம் விசாரித்தனர்.

அந்த நாட்டின் மன்னன் பெயர் காளிங்கராயன் என்பதும், அவளுக்கு பத்மாவதி என்ற ஒரு பெண் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

பின்னர், இளவரசன் அந்த பாட்டிக்கு ஏராளமான பொற்காசுகளை கொடுத்து இளவரசியிடம் தாம் வந்திருப்பதை கூற சொன்னான்.

அந்த பாட்டியும் பொற்காசுகள் கிடைத்த மகிழ்ச்சியில் இளவரசியை பார்க்க சென்றாள்.

அந்த பாட்டி அரண்மனைக்கு சென்று இளவரசியை சந்தித்து நடந்ததை கூறினாள்.

இதை கேட்ட மகிழ்ச்சியில், அந்த இளவரசி ஒரு சந்தனதில், தனது விரல்களை நனைத்து, அந்த பாட்டியின் இரு கன்னத்திலும் பத்துக்கோடுகள் போட்டு அனுப்பி வைத்தாள்.

பாட்டி வந்ததும், இளவரசன் அவளை பார்த்து, பின்னர் தனது நண்பனிடம் இதற்கான விளக்கத்தை கேட்டான்.

பாட்டி
பாட்டி

அவனும் பாட்டியின் கன்னத்தை பார்த்து, இன்னும் பத்து தினங்கள் காத்திருக்க வேண்டும் என சொன்னான்.

பின்னர் இளவரசன், பாட்டிக்கு பொற்காசுகள் வழங்கினான். பாட்டி, இளவரசனால் தனக்கு ஏராளமான செல்வம் கிடைப்பதை எண்ணி, அவர்களை அங்கேயே தாங்கிக்கொள்ள கூறினாள்.

அவர்களும் அங்கேயே தங்கிருந்தனர். இதனால் பாட்டிக்கு ஏராளமான செல்வங்கள் கிடைத்துக்கொண்டே இருந்தது.

இளவரசன், அடுத்து பத்து தினங்கள் முடிந்ததும், பாட்டியை மீண்டும் இளவரசியை பார்க்க அனுப்பினான்.

பாட்டியும், இளவரசியை பார்க்க, இளவரசி மீண்டும் சந்தனதில் கையை நனைத்து, பாட்டியின் கன்னத்தில் ஒரு வட்டமிட்டு, ஒரு கோடும் வரைந்தாள். மீண்டும் பாட்டி வீடு திரும்பினாள்.

இளவரசியின் செயலை, இளவரசன் அவனது நண்பனிடம் கேட்க, அவன் அதற்கு ஒரு இரகசிய வழி உள்ளது, அதன் வழியாக வரவேண்டும் என சொல்கிறாள் என்றான்.

இளவரசன் மகிழ்ச்சியில் பாட்டிக்கு செல்வத்தை கொடுத்தான். பின்னர் நண்பன் சொன்ன வழியில் சென்று, இளவரசியை அடைந்தான். இருவரும் நீண்ட காலங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

திடீரென ஒருநாள், தனது நண்பனை பிரிந்து வந்து பலநாட்கள் கடந்துவிட்டதே என எண்ணி கவலையில் மூழ்கினான்.

கவலை
கவலை

இளவரசி, இளவரசனின் முகத்தை பார்த்துக் கேட்க, இளவரசன் தனது நட்பை பற்றியும், தனது நண்பனை பற்றியும் கூறினான்.

அவனை பிரிந்து இருந்ததே இதுவே முதல் தடவை என்றும் கூறினான்.

பின்னர் அவனை பார்க்க செல்வதாக கிளம்பினான். இளவரசி, இளவரசனை தடுக்காமல், இளவரசனிடம் பலகாரங்கள் கொடுத்து, தங்களுடைய நண்பனுக்கு கொடுங்கள் என கொடுத்து அனுப்பினாள்.

இளவரசனும் பாட்டியின் வீட்டை அடைந்து, தனது நண்பனை பார்த்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததும் சந்தோசத்தில் மிதந்தனர்.

பின்னர் இளவரசன், இளவரசி கொடுத்த பலகாரத்தை நண்பனிடம் கொடுத்தான்.

அதை வாங்கிய நண்பன், அதை சாப்பிடும் முன்பு, ஒரு நாய்க்கு அதில் ஒன்றை போட்டான்.

அந்த நாய், அதை சாப்பிட்ட அடுத்தகணம், துடிதுடித்து இறந்து போனது.

இதை கண்ட இளவரசன், இளவரசியின் செயலைக்கண்டு நொந்துப்போய், இளவரசியை மறக்கவும் முடியாமல், நண்பனை கொல்லத்துணித்தவளை ஏற்கவும் முடியாமல் தவித்தான்.

நண்பனிடம், என் இதுபோல இளவரசி செய்திருப்பாள் என கேட்க, அவனது நண்பன், அதை விடு, நான் சொல்வதை செய் என்று கூறி, மீண்டும் நீ இளவரசியை பார்க்க செல்.

பின்னர் அவளுக்கு தெரியாமல் அவளுடைய கழுத்தில் இருந்து விலைமதிப்பற்ற ஒரு ஆபரணத்தை எடுத்து வா!.

ஆபரணம்
ஆபரணம்

அதுமட்டுமில்லாமல் குறிப்பாக அவளது மார்பில் மூன்று நகக்கீறல்களையும் நீ போட வேண்டும். இது மிகவும் முக்கியம் என்று சொல்லியனுப்பினான்.

நண்பன் எது செய்தாலும், தனது நன்மைக்கு என்று எண்ணிய இளவரசன், எதற்காக என்று கேட்காமல் அவ்வாறே செய்தான்.

அவள் கழுத்தில் இருந்த வைரமாலையை எடுத்து வந்து நண்பனிடம் கொடுத்தான்.

இளவரசனின் நண்பன், மார்பில் நான் சொன்னதை போல நகக்கீறல் போட்டாயா? எனக்கேட்க, இளவரசனும் ஆம் என்றான்.

உடனே இளவரசனின் நண்பன், முனிவர் வேடம் தரித்து, இளவரசனை சீடன் வேடம் தரிக்க சொன்னான்.

பாட்டியிடம் நிறைய பொற்காசுகள் கொடுத்து சமைக்கச் சொல்லிவிட்டு, இளவரசனிடம் இந்த ஆபரணத்தை விற்பதற்கு நகருக்கு சென்று, யாராலும் வாங்க முடியாத விலைக்கு பேசு, இறுதியாக காவலர்கள் வருவார்கள்.

அவரிடம் இளவரசிக்கு பொருத்தமானது என்று கூறி மன்னனை பார்க்க அனுமதி வாங்கி எவ்வகையிலாவது மயானத்திற்கு அழைத்து வா, நான் அங்கு காத்திருக்கிறேன் என்றான்.

இளவரசனும் அநேக விலைப்பேசி, இறுதியாக காவலர்கள் மூலமாக மன்னனை சந்தித்து, ஆபரணத்தை காட்டினான்.

மன்னன் அதை பார்த்து வியந்து, அதை இளவரசிக்கு வாங்கலாம் என எண்ணி விலையை கேட்டான்.

இளவரசனோ, மன்னா! இதன் மதிப்பு எனது குருவிற்கு தான் தெரியும்.

குரு
குரு

அவர் இந்த ஊரின் எல்லையில் உள்ள மயானத்தில் இந்த ஊரின் நன்மைக்காக தவமிருக்கிறார் என கூறினான்.

மன்னர், நமது நாட்டின் நன்மைக்காக, முனிவர் தவமிருப்பதை எண்ணி, அங்கு அவரை சந்திக்க சென்றார். முனிவரை பார்த்து வணங்கினார் மன்னர்.

முனிவரின் வேடத்தில் இருந்த இளவரசனின் நண்பன், மன்னா! உனது நாட்டிற்க்காக தவமிருந்து கொண்டிருந்த சமயம், இரவில் ஒரு பேயானது இங்கிருக்கும் பிணங்களை தோண்டி தின்று கொண்டிருந்தது.

இது தொடர்ந்தால், உனது நாட்டிற்கு கேடு வரும் என எண்ணி, அதை எனது சூலத்தால் மார்பில் குத்திய நேரத்தில், அது எனது பெயர் பத்மாவதி என்றும், என்னை விட்டுவிடுங்கள் என்றும் கூறி தனது கழுத்தில் கிடந்த ஆபரணத்தை கொடுத்து சென்றது.

அதை கண்டுபிடியுங்கள். இல்லையெனில் நாட்டிற்கு கேடு வரும் எனக்கூறி, இந்த ஆபரணத்தை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்? நீங்கள் இளவரசிக்கு கொடுங்கள் என்றான்.

மன்னன், முனிவர் சொன்னதை கேட்டு கவலையில் ஆழ்ந்தார். காரணம் இளவரசியின் பெயரும், பேயின் பெயரும் ஒன்றாக இருக்கிறதே என்று தான்.

சரி சோதித்து பார்க்கலாம் என எண்ணி, இளவரசியிடம் ஆபரணத்தை காட்டி, இது உன்னுடையது தானே, என கேட்க, கூனிக்குறுகி ஆம் என்றாள்.

மன்னன், மார்பில் இருக்கும் நகக்கீறலை கண்டு தனது மகள் பேயென கருதினார்.

இளவரசி இளவரசனை பற்றிக் கூறாமல், இளவரசன் ஏன் இவ்வாறு செய்தான் என யோசித்துக் கொண்டிருந்தாள்.

இளவரசி
இளவரசி

மன்னன், மந்திரியிடம் நடந்ததை கூறி, என்ன செய்வது எனக்கேட்டான்.

மந்திரி, மன்னா! அப்பொழுது பேயான இளவரசியை, எல்லையில் இருக்கும் மயானத்தில் விட்டுவிடலாம். முனிவர் அழித்துவிடுவார் எனக்கூறி, அவ்வாறே செய்தனர்.

இளவரசனின் நண்பன் வேடத்தை கலைத்து, இளவரசனையும் கலைய செய்து இளவரசே! சற்று நேரத்தில் இளவரசி வந்துவிடுவார் எனக்கூறினான்.

அவ்வாறே காவலர்கள், இளவரசியை அங்கு வந்து இறக்கிவிட்டு சென்றனர்.

இளவரசி, அங்கு நிற்கும் இளவரசியை கண்டது, ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள்.

பின்னர் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆனால், மகளை பிரிந்த கவலையில் மன்னர் சிலதினங்களில் இறந்துப்போனார்.

மன்னரே விக்ரமாதித்யா! இந்த கதையில் மன்னன் இறக்க காரணமாக இருந்தது யார்? சொல்லும், இல்லையெனில் உனது தலையை கடித்து தின்றுவிடுவேன் என்றது வேதாளம்.

அதற்கு சற்றும் தாமதிக்காமல் விக்ரமாதித்யன், இளவரசி, இளவரசன் நண்பனை கொல்ல நினைத்தது, இளவரசன் மீதுள்ள காதலால் ஆகும்.

இளவரசனின் நண்பன், இளவரசியை பேயாக சித்தரித்தது, இளவரசன் மேலுள்ள நட்பின் மீதுள்ள அன்பால் ஆகும்.

இளவரசி
இளவரசி

அதனால் இருவரும் செய்தது சரியே!. அதனால், மன்னன் இறப்பிற்கு இருவரும் காரணம் ஆக முடியாது.

அப்பொழுது மன்னன் இறக்க யார் காரணம்? என மறுபடியும் வேதாளம் கேட்க, அதில் என்ன சந்தேகம்.

அந்த மன்னனின் அமைச்சர் தான் காரணம் என்றான். ஒரு அமைச்சர் மன்னனுக்கு ஆலோசனை வழங்கும் முன்பு, அதை தீர விசாரிக்க வேண்டும்.

பின்னர் மன்னரிடம், தாம் எடுத்த முடிவு சரியா? அல்லது தவறா? என ஆலோசிக்க வேண்டும்.

பின்னர் தான் முடிவெடுக்க வேண்டும். இதை எதையும் செய்யாத அமைச்சரே, மன்னன் இறக்க காரணம் என்றான்.

வேதாளம், விக்ரமாதித்யன் சொன்ன சரியான பதிலை கேட்டு, காட்டிலிருந்து விடுபட்டு மீண்டும் முருங்கை மரம் சென்று தலைகீழாக தொங்க தொடங்கியது.

விக்ரமாதித்யன், வேதாளத்தை மறுபடியும் பிடித்து கட்டி தோளில் சுமந்து செல்ல தொடங்கினான்.

Post a Comment

0 Comments