Ticker

6/recent/ticker-posts

ஆரோக்கியமாக வாழ சில அற்புதமான ஆலோசனைகள் | ஆரோக்கியம்

ஆரோக்கியமான வாழ்க்கை
ஆரோக்கியமான வாழ்க்கை

Some Wonderful Tips to Live Healthier | Health

இந்த பூமியில் பிறந்த அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசை எதுவெனக்கேட்டால், நோய் ஏதும் இல்லாமல் நீண்ட காலம் வாழவேண்டும் என்றே அதிகமான நபர்கள் கூறுவார்கள்.

உடல்நலக்குறைவால் அவதிப்படாமல், நீண்ட காலங்கள் ஆரோக்கியமாக வாழ சில அற்புதமான ஆலோசனைகளை இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம்.

இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் கண்டிப்பாக ஆரோக்கியமாக வாழ்வீர்கள் என்பதே மகத்தான உண்மை.

பொருளடக்கம்

  • இரத்தம்
  • இரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை
  • மனநலக்கோளாற
  • நோய் எதிர்ப்பு சக்தி
  • உடல்சூடு
  • மூலநோய்
  • கண்
  • கல்லீரல்


இரத்தம்

நமது உடலில் முக்கியமான பங்கு வகிப்பது இரத்தம் தான். இதன் மூலமாகவே சத்துக்கள் அனைத்து உறுப்புகளுக்கும் பரிமாறப்பெறுகின்றன.

இந்த இரத்தத்தில் முக்கிய பங்கு வகிப்பது இரத்த சிவப்பணுக்கள் தான்.

இந்த சிவப்பணுக்களை அதிகரிப்பதன் மூலமாக நான் ஆரோக்கியமாக வாழ முடியும்.

பச்சைநிற காய்கறிகள்
பச்சைநிற காய்கறிகள்

அதற்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்காய், அவரை, பச்சைநிறக் காய்கறிகள், உளுந்து, துவரை, கம்பு, கேழ்வரகு, சோளம், மற்றும் பசலைக்கீரை ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும்.

இதன் மூலமாக இரத்த சிவப்பணுக்கள் அதிகரித்து, உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும்.

இரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை

நமது உடலில் உண்டாகும் நச்சுக்களை நீக்கினால் போதும், எவ்வித நோய்களும் நமக்கு வராது.

அந்த வகையில்வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, மற்றும் எலுமிச்சை போன்றவற்றில், நமது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கக்கூடிய ஆற்றல் உள்ளது.

தினமும் ஒரு டம்ளர் அளவுக்கு மாதுளை பழச்சாறு குடித்து வர உடலில் இரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல்வேறுபட்ட பிரச்சனைகள் சரியாகும்.

ஆப்பிள்
ஆப்பிள்

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமில்லை எனக்கூறி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அதுபோல ஆப்பிள் பழத்தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் அதிகம் இருப்பதால், அதை தோலுடன் சாப்பிட வேண்டும்.

அப்படி சாப்பிட்டு வர, இந்த பெக்டின் ஆனது நமது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கக்கூடியது ஆகும்.

மனநலக்கோளாறு

மனநலக்கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் ஏதேனும் பாதிப்பு உள்ளவர்கள், தினசரி தர்ப்பூசணி பழத்தை சாப்பிட்டு வர வேண்டும்.

தர்ப்பூசணி
தர்ப்பூசணி

அப்படி சாப்பிட்டுவர, இந்த தர்ப்பூசணியில் அதிகம் உள்ள வைட்டமின் பி6 ஆனது மனஅழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

நோய் எதிர்ப்பு சக்தி

நமது உடலுக்கு நோய் வராமல் பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் அவசியமானது.

இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நமது இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகமாக இருக்கவேண்டும்.

இந்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை வைத்து தான், நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை குறிப்பிடுகின்றனர்.

பூண்டு
பூண்டு

இந்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, நாம் கட்டாயமாக பூண்டு சாப்பிட்டுவர வேண்டும்.

பூண்டு சாப்பிட்டுவர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக அதிகரிக்கிறது.

இதனால் வெள்ளையணுக்கள் உற்பத்தி அதிகரிப்பது மட்டுமின்றி, புற்றுநோயை உருவாக்கக்கூடிய செல்களையும் அழிக்கும் வல்லமை கொண்டது.

உடல் சூடு

நமது உடலுக்கு நோய்வர முக்கியமான காரணம், உடல் சூடும் ஒன்று.

இந்த உடல் சூட்டை முற்றிலுமாக தீர்ப்பதற்கு பச்சைப்பயறு, மோர், உளுத்த வடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம்பழம், நாவற்பழம், கோவைக்காய் மற்றும் இளநீர் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.

வெங்காயம்
வெங்காயம்

மூலநோய்

சில நபர்களுக்கு இருக்கக்கூடிய, தீராத தொல்லை தரக்கூடிய நோய் என்றால் அது மூலநோய் தான்.

இதற்கு பொன்னாங்கன்னி கீரையை துவையல் செய்து சாப்பிட்டுவர மூலநோய் முற்றிலும் தீரும்.

Peperomia flexicaulis
பொன்னாங்கன்னி

கண்

அதுபோல பொன்னாங்கன்னி கீரையில் இருந்து தயாரிக்கப்படும் தைலத்தை தலைக்கு தேய்த்துக் குளித்துவர கண் தொடர்பான நோய்கள் உங்களை நெருங்காது.

கல்லிரல்

நமது உடலில் உள்ள கல்லிரல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அதனை பலப்படுத்த இரண்டு வாரங்கள் தேனில் ஊறவைத்த அன்னாசி பழத்தின், சிறுதுண்டுகளாய் தினசரி சாப்பிட்டு வர வேண்டும்.

அன்னாசி
அன்னாசி

முடிவுரை

இப்பொழுது நீங்கள் படித்தவற்றை தவிர்க்காமல் கடைப்பிடித்து வாழ்வீர்கள் என்றால், நீங்கள் இனி எந்த காலத்திலும் மருத்துவமனையை நாடவேண்டிய அவசியமிருக்காது.

அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள், இதை கருதியே உணவே மருந்து என்றனர் என்பது தற்பொழுது புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

நமது முன்னோர்கள் பயன்படுத்திய உணவு பழக்கங்களை, தற்பொழுது உலகம் முழுவதும் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டனர். இனியாவது நீங்களும் கடைப்பிடித்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

Post a Comment

0 Comments