Ticker

6/recent/ticker-posts

ஒரு பெண்ணின் சாம்பலும், காதலர்களும் | பகுதி 9 | விக்ரமாதித்தன் கதைகள்

vikramathithan vethalam kathaikal
விக்ரமாதித்தன் கதைகள்

Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 9

வேதாளம் தனது நான்காவது கதையை கூறத்தொடங்கியது.

விக்ரமபுரி என்ற ஒரு அழகான நாட்டில் கண்ணுக்கினியாள் என்ற ஒரு அழகிய பெண்ணொருத்தி இருந்தாள்.

அவள் பெயருக்கு ஏற்றாற்போல அழகே வடிவமாக இருந்தாள். அவளை பார்த்தவர்கள் அனைவரும் அவள்மீது மோகம் கொள்வார்கள்.

அவளுக்கு அப்படியொரு அழகு. அவளது குடும்பத்தில் அவளுடன் சேர்த்து தாய், தந்தை மற்றும் அண்ணன் என நான்கு நபர்கள் இருந்தனர்.

அவளுக்கு திருமணம் செய்யலாம் என குடும்பத்தில் பேசி முடிவு எடுக்கப்பட்டது.

கண்ணுக்கினியாள், தமக்கு திருமணம் ஆகவிருப்பதை எண்ணி மகிழ்ச்சியில் இருந்தாள்.

ஆனால் பாவம், திருமணம் ஆகாமல் தாம் இறந்து போகப்போகின்றோம் என அவளுக்கு தெரியாது.

அவளுடைய தாய், அருகிலுள்ள குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வரும் சமயம், அழகிய ஒரு வாலிபன் இடைமறித்து, மிகப்பணிவுடன் தங்களுடைய மகளை, தமக்கு திருமணம் செய்து வைக்கும்படி கோரினான்.

அவளுடைய தாயோ!, அவனது பணிவை பார்த்து, அவனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்துக்கொடுப்பதாக வாக்கு கொடுத்து மறுநாள் வரக்கூறினாள்.

திருமணம்
திருமணம்

இது அவளது குடும்பத்தினர் யாருக்கும் தெரியாது.

இப்படி இருக்கையில் மற்றொரு அழகிய வாலிபன், அவளது கணவனை பார்த்து தங்களுடைய மகளை தனக்கு திருமணம் செய்துவைக்கும் படி கேட்டுக்கொண்டான்.

அவனது செயலை பார்த்து மகிழ்ந்த அவனும் அவனுக்கு தன்னுடைய மகளை தருவதாக வாக்கு கொடுத்து மறுநாள் பார்க்க வரக்கூறினான்.

இது அவனது குடும்பத்தினர் யாருக்கும் தெரியாது.

இப்படி இருக்கையில் மற்றொரு அழகிய வாலிபன், அவனது மகனை பார்த்து தங்களுடைய தங்கையை தனக்கு திருமணம் செய்துவைக்கும் படி கேட்டுக்கொண்டான்.

அவனது செயலை பார்த்து மகிழ்ந்த அவனும் அவனுக்கு தன்னுடைய தங்கையை தருவதாக வாக்கு கொடுத்து மறுநாள் பார்க்க வரக்கூறினான்.

இது அவனது குடும்பத்தினர் யாருக்கும் தெரியாது.

மறுநாள் பொழுதும் புலர்ந்தது. கண்ணுக்கினியாள் வீட்டிற்கு மூவரும் வந்து சேர்த்தனர்.

மூவரும் வந்த பின்னர் தான், தாங்கள் தவறு செய்ததாக வருந்தினார்.

கண்ணுக்கினியாளை யாருக்கு திருமணம் செய்துக்கொடுப்பது எனத் தெரியாமல், கொடுத்த வாக்கை எவ்வாறு காப்பாற்றுவது என குழம்பிப்போயினர்.

ஆனால் வந்தவர்களும் சரி, குடும்பத்தினரும் சரி, கண்ணுக்கினியாளிடம் ஏதும் கேட்கவில்லை. இதனால் மனம் நொந்து போனாள்.

வருத்தம்
வருத்தம்

ஒரு வாரம் சென்று வருவதாகவும், அதற்குள் நல்ல முடிவு எடுத்து வையுங்கள் எனக்கூறி மூவரும் அங்கிருந்து கிளம்பிப்போயினர்.

அவர்கள் செல்லும் பொழுதுக் கூட யாரும் கண்ணுக்கினியாளை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

இதனால் கண்ணுக்கினியாள், மிகவும் மனம் நொந்துப்போனாள். அவர்கள் வருவதற்கு முன்பே, அந்த வருத்தத்திலேயே இறந்துப்போனாள்.

மூவரும் ஒருவாரம் கழித்து வந்து செய்திக்கேட்டு அதிர்ந்துப்போயினர்.

அப்பொழுது அதில் முதலாமானவன் அவளது சாம்பலை எடுத்துக்கொண்டு காசிக்கு செல்வதாக கூறிச்சென்றான்.

அதில் இரண்டாமானவன், அவளது சாம்பலை எடுத்துக்கொண்டு, அவளது நினைவிலேயே வாழ்வதாக கூறி புறப்பட்டு சென்றான்.

மூன்றாவதானவன் அவளது நினைவிலேயே பைத்தியம் பிடித்ததுப்போல பிச்சை எடுத்து சாப்பிட்டு அலைந்து தெரிந்துக்கொண்டு இருந்தான்.

இப்படி இருக்க மாதங்கள் ஓடின. அப்பொழுது பிச்சை எடுத்து உண்பவன், ஒரு வீட்டிற்கு சென்று பிச்சை கேட்க, அந்த வீட்டில் இருந்த பெண் அவனுக்கு பிச்சைப்போட எழுந்தாள்.

அப்பொழுது குழந்தை அழுவதை தாங்கிக்கொள்ளாமல் நெல் அவிக்கும் நெருப்பில் போட்டு குழந்தையை கொன்றாள்.

அழும் குழந்தை (Crying Baby)
அழும் குழந்தை (Crying Baby)

பின்னர், அவள் பிச்சை போட வரவும், இதையெல்லாம் பார்த்த அவன், அவளை தடுத்து தயவுசெய்து உன் கையால் எனக்கு பிச்சை இடாதே, நீ செய்த பாவம் என்னை பற்றிக்கொள்ளும் என்றான்.

அவள், இவனை பார்த்து, சற்றுப்பொறு எனக்கூறி தண்ணீர் எடுத்து, எதோ சில மந்திரங்கள் கூறி, அந்த அடுப்பில் இருந்த சாம்பலில் தெளிக்க குழந்தை மீண்டும் உயிருடன் வந்தது.

இதை பார்த்து அதிர்ந்த அவன், தனது கதையை அவளிடம் கூறி, தனக்கும் அந்த மந்திரம் கற்றுத்தருமாறு கூறினான்.

அதற்கு, அந்த பெண்ணும் சரி என்றுக்கூறி கற்று கொடுத்தாள்.

பின்னர், அவனை பார்த்து அவள் உயிருடன் வர வேண்டுமென்றால், அவளது சாம்பலில் மந்திரம் கூறிய பின்னர், அந்த தண்ணீரை தெளிக்க வேண்டும் எனக்கூறினாள்.

அவனும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டு, கண்ணுக்கினியாள் வீட்டை அடைந்து நடந்ததை கூற, அனைவரும் மகிழ்ந்தனர்.

ஆனால் அவர்களிடம் சாம்பல் இல்லாததை கண்டு ஏமாற்றம் அடைந்தான்.

பின்னர் மற்ற இருவரில் யாரிடமாவது சாம்பல் கிடைக்கலாம் என எண்ணி கண்டுபிடிக்க தேடியலைந்தான்.

ஒரு வழியாக காசிக்கு சென்றவனை அடைந்து சாம்பல் கேட்க, அதை காசியில் கரைத்து விட்டு இப்போழுது தான் வீடு திரும்பியதாக கூறினான்.

சாம்பல்
சாம்பல்

மறுபடியும் ஏமாற்றத்துடன், மூன்றாமானவனை கண்டறிய இருவரும் தேடியலைந்து ஒருவழியாக கண்டும் பிடித்தனர்.

பின்னர் கண்ணுக்கினியாள் வீட்டிற்கு சென்று, அதன் பின்னர் மந்திரம் கூறி, சாம்பலில் தண்ணீர் தெளிக்க, கண்ணுக்கினியாள் உயிருடன் வந்தாள்.

மறுபடியும், மூவரையும் பார்க்க உயிர்பெற்ற சந்தோசத்தை பெறாமல், கவலையாக இருந்தாள்.

அதற்கு காரணம் யாரை திருமணம் செய்வது என்று தெரியாமல் தான் என்று வேதாளம் கதையை கூறி முடித்தது.

பின்னர் வேதாளம், விக்ரமாதித்யனை பார்த்து, மன்னா! இக்கதையில் யாரை கண்ணுக்கினியாள் திருமணம் செய்துக்கொள்வாள்? என கேட்டது.

பதிலை சொல், இல்லையேல் உனது தலையை கடித்து தின்று விடுவேன் எனக்கூற, விக்ரமாதித்யன் பதில் சொல்ல தொடங்கினான்.

அதற்கு மன்னர் விக்ரமாதித்யன், கண்ணுக்கினியாள் சாம்பலை தன்னுடனே வைத்துக்கொண்டு வாழ்ந்து வந்த இரண்டாம் வாலிபனை மணந்துக்கொள்வாள் என்றான்.

வேதாளம் காரணம் கேட்க, விக்ரமாதித்யன் காரணத்தை கூற தொடங்கினான்.

ஒருவர் இறந்தப்பின்பு அவருடைய அஸ்தியை அவர்களது வாரிசுகளே காசிக்கு கொண்டு சென்று கரைக்க வேண்டும்.

ஆக, முதல் வாலிபன் செய்த செயலால் அவன் கண்ணுக்கினியாளுக்கு மகனாவான்.

குழந்தை
குழந்தை

மூன்றாவது வாலிபன் கண்ணுக்கினியாளுக்கு உயிர் அளித்ததால், அவன் தந்தை ஸ்தானத்தை பெற்றான்.

ஆகவே இரண்டாம் வாலிபனே! அவளை மணந்து கொள்ள வேண்டும் என்றான்.

வேதாளம், அருமை மன்னா! சரியான பதிலை கூறிவிட்டாய் என்று சொல்லி கட்டிலிருந்து விடுபட்டு மீண்டும் முருங்கை மரம் ஏறிக்கொண்டது.

விக்ரமாதித்யன், வேதாளத்தை மறுபடியும் பிடித்து கட்டி தோளில் சுமந்து செல்ல தொடங்கினான்.


Post a Comment

0 Comments