Ticker

6/recent/ticker-posts

கருவேப்பிலையின் நன்மைகள் | ஆரோக்கியம்

கறிவேப்பிலை
கறிவேப்பிலை

Benefits of Curry leaves | Health

அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை, நாமும் நமது முன்னோர்களும் பயன்படுத்தும் ஒரு மணமூட்டும் ஒரு பொருள் என்றால், அது இந்த கறிவேப்பிலை தான்.

பல்வேறு மருத்துவக்குணங்களை கொண்ட கறிவேப்பிலையின் நன்மைகளை, இந்த பதிவின் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • கறிவேப்பிலை
  • கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள்
  • கறிவேப்பிலையின் மருத்துவக்குணங்கள்


கறிவேப்பிலை

இந்த கறிவேப்பிலையை ஆரம்பத்தில், "கறிவேம்பு இலை" என்றே அழைத்து வந்தனர். பிற்காலத்தில் இந்த பெயரானது மருவி, "கறிவேப்பிலை" ஆனது.

இந்த கறிவேப்பிலை சைவ மற்றும் அசைவ என எந்த உணவானாலும் சரி கட்டாயம் இடம்பெற்றுவிடும்.

இந்த கறிவேப்பிலை உணவிற்கு நல்ல மணத்தினை அளிக்கவல்லது.

கறிவேப்பிலையானது ஒரு குறுமரம் ஆகும். இதன் மலர்கள் வெள்ளை நிறத்திலும், பழங்கள் கருப்பு வண்ணத்திலும் இருக்கும்.

கறிவேப்பிலை
கறிவேப்பிலை

நாம் பெரும்பாலும் கறிவேப்பிலையில் உள்ள நுனியிலையை பயன்படுத்துவதால் மரமாக வளருவதில்லை.

இந்த கறிவேப்பிலை பழமானது, இனிப்பு மற்றும் கசப்பு கலந்த ஒரு வித்தியாசமான சுவையை கொண்டிருக்கும்.

கறிவேப்பிலையை போலவே, இதன் பழத்திலும் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது.

அனைவரின் இல்லத்திலும் இந்த கறிவேப்பிலை ஆனது கட்டாயம் இடம் பெற்றிருக்கும் என்பது யாவரும் அறிந்ததே.

ஒருமுறை வைத்து தண்ணீர் இல்லாத சமயங்களில் தண்ணீர் ஊற்றினால் போதும், வேறு ஏதும் செய்யவேண்டிய அவசியமில்லை.

கறிவேப்பிலை தானாகவே வளர ஆரம்பித்து, அதன் பழங்கள் பழுத்து கீழே விழுவதன் மூலமாக அதிகமான கறிவேப்பிலை செடிகளை வளர்க்கலாம்.

ஆனால் பெரும்பாலும் வாங்கி வைக்கும் கறிவேப்பிலை செடியானது வளருவதில்லை.

இதனால் கிராமப்புறங்களில் ஒன்று கூறுவார்கள். இந்த கறிவேப்பிலை செடியை, தெரியாமல் திருடி எடுத்து சென்று வைத்து வளர்க்க நன்கு வளரும் என்றும், கேட்டு வாங்கி எடுத்துச்சென்றால் வளராது என்றும் கூறுவார்கள்.

இந்த கறிவேப்பிலையை, நமது நாட்டில் ஏராளமாக பயிர் செய்கின்றனர்.

கருவேப்பிலை
கருவேப்பிலை

இந்த கறிவேப்பிலை ஆனது மணத்திற்கு மட்டுமல்லாது, நமது ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்துகின்றனர்.

இந்த கறிவேப்பிலை இரு வகைகளாக கிடைக்கின்றன. ஒன்று நாட்டு கறிவேப்பிலை, மற்றொன்று காட்டு கறிவேப்பிலை.

நாட்டு கறிவேப்பிலை ஆனது வீட்டிற்கும், காட்டு கறிவேப்பிலை ஆனது மருத்துவத்திற்கும் பயன்படுத்துகின்றனர்.

நமது ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவங்களில், இந்த கறிவேப்பிலை ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்துள்ளது என்றே கூற வேண்டும்.

இந்த கறிவேப்பிலை பச்சையாக இருக்கும் பொழுதே நல்ல மணத்தை கொண்டிருக்கும். இதன் சுவையானது சிறிது காரம் கலந்த, கசப்பு சுவையாகும்.

இன்றைய தலைமுறையினர், இந்த கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் தெரியாமல், வெறும் மணத்திற்காக என எண்ணி, இதை சாப்பிடாமல் தூக்கி எறிகின்றனர்.

அவர்களுக்கு இந்த பதிவு கட்டாயமாக பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறன்.

கருவேப்பிலை
கருவேப்பிலை

கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள்

கறிவேப்பிலையில் 63% நீரும், 18.8% மாவுச்சத்து, 6.4% நார்ச்சத்து, 6.1% புரதச்சத்து மற்றும் 4% தாது உப்புக்களும், ஒரு சதவீதம் கொழுப்பு சத்தும் உள்ளது.

      • வைட்டமின் ஏ, பி, பி2, சி,
      • சுண்ணாம்பு (கால்சியம்),
      • பாஸ்பரஸ்,
      • இரும்பு சத்து,
      • கார்ப்போஹைட்ரேட்,
      • புரதம்,
      • தாது உப்புகள்,
      • அமினோ அமிலங்கள் (கிளைகோஸைட்ஸ்),
      • சேரின்,
      • புரோலைன்,
      • அலனைன்.

அதுமற்றுமின்றி, அஸ்பார்டிக் அமிலம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இதனால் தான் கறிவேப்பிலை சேர்த்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கிறது.

கருவேப்பிலை
கருவேப்பிலை

கறிவேப்பிலையின் மருத்துவக்குணங்கள்

கறிவேப்பிலை சாப்பிடுவதால், நமது உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களையும், மருத்துவக்குணங்களையும் இனி பார்க்கலாம்.

கொழுப்புகளை குறைக்க

பொதுவாக, நாம் சாப்பிடும் உணவுப்பொருட்கள் சரியாக செரிமானம் ஆகாமல் இருப்பதால் கொழுப்பு படிந்து தொப்பை ஏற்படுகிறது.

தினமும் காலையில் சிறிதளவு கறிவேப்பிலை சாப்பிட்டுவர உடலில் உள்ள கெட்டக்கொழுப்புகளை கரைத்து, உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பினை உண்டாக்குகிறது.

அதுமட்டுமல்லாது உடலில் செயலியல் மாற்றத்தையும் அதிகரிக்க செய்கிறது மற்றும் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால், உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.

கெட்டக்கொழுப்புகளை எரிக்கும் பொருள், இந்த கறிவேப்பிலையில் உள்ளதால், கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், தினமும் அதிகாலையில் இந்த கறிவேப்பிலையை உட்கொண்டு வரலாம்.

முடியை வலுப்படுத்த

ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய ஒரு தொல்லை என்றால், அது முடி உதிர்தல் தான்.

பொதுவாக முடியின் அடர்த்தி குறைவது, மெலிவடைவது, உடைவது என ஏராளமான பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.

இந்த கறிவேப்பிலை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளுவதனால் முடி உதிர்தல் குறைகிறது.

கருவேப்பிலை
கருவேப்பிலை


கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள், முடியை நன்கு வளர செய்வதனால் முடியானது, நன்கு கருகருவெனவும் அடர்த்தியாகவும் வளருகிறது.

கறிவேப்பிலையை அரைத்து, அந்த சாற்றை தலையில் தேய்த்து குளித்து வர, முடியானது வலிமையடைகிறது. அதுமட்டுமல்லாமல் அடத்தியாகவும், கருமையாகவும் வளருகின்றது.

முடியின் மீது ஆர்வம் கொண்டவர்கள் கறிவேப்பிலையை அதிகமாக உணவில் எடுத்துக்கொள்ளலாம். இதனால் முடி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

கண்களை பாதுகாக்க

இந்த கறிவேப்பிலையில் ஏராளமான வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதை நாம் உணவில் எடுத்துக்கொள்ளும் பொழுது பல நன்மைகள் கிடைக்கின்றன.

கண் சம்மந்தப்பட்ட நோய்களான மாலைக்கண், பார்வை திறன் குறைபாடு, பார்வை இழப்பு என எதுவும், நம்மை நெருங்காமல் கருவிழியின் செயல்பாட்டை அதிகரித்தது கண்ணை பலப்படுத்துகிறது.

கண்ணில் குறைபாடு இருந்தாலும், அதை சரி செய்யும் ஆற்றல் இந்த கறிவேப்பிலைக்கு உள்ளது. கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், இந்த கறிவேப்பிலையை கட்டாயமாக எடுத்துக்கொள்ளுவது நல்லது.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் காரணமாக அவதிப்படுபவர்கள், அந்த நோய் பரம்பரையாக வந்தாலும் சரி, அல்லது இடையில் வந்திருந்தாலும் சரி, பச்சையாக தினமும், ஒரு மூன்று மாதங்கள் சாப்பிட்டு வர அந்த நோய் முற்றிலும் சரியாகும்.

எதிர்காலத்தில் வராமல் இருக்கவும், இந்த கறிவேப்பிலையை சாப்பிட்டு வரலாம். இதனால் நமது உடலுக்கு ஆரோக்கியமே.

கருவேப்பிலை
கருவேப்பிலை

இரத்தசோகையை போக்க

நமது உடலில் உள்ள இரத்தத்தில் ஏற்படும் ஒருவகை குறைபாடானது இரத்தசோகை என அழைக்கப்படுகிறது.

பொதுவாக இரத்தசோகை உடையவர்கள் சோர்வாகவும், சத்து குறைபாடு உள்ளவர்களாகவும் காட்சியப்பர்கள்.

அவர்கள் இந்த கறிவேப்பிலையை சாப்பிட்டு வர, இரத்தசோகையானது விரைவில் சரியாகி, சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

செரிமான மண்டலம், வயிற்றுப்போக்கு மற்றும் மூலநோய்

பொதுவாக தலைவலி, பல்வலிக்கு அடுத்தாக எண்ணற்ற பலரை பாடாய்படுத்தும் ஒரு தொல்லை என்றால் அது வயிற்றுப்போக்கு தான்.

இந்த வயிற்றுப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் கறிவேப்பிலையை சாப்பிட்டு வர, நமது செரிமான மண்டலம் பலமாகி, வயிற்றுப்போக்கு பிரச்சனை விரைவில் தீரும்.

அதுமட்டுமில்லாமல், நமது கல்லீரலையும் பலப்படுத்தவும், இந்த கறிவேப்பிலை உதவுகிறது.

குமட்டல் மற்றும் தலைசுற்றல்

சிலருக்கு ஏதேனும் பிடிக்காத ஒன்றை பார்க்கும் பொழுது, தலைசுற்றல் மற்றும் குமட்டல் உண்டாகும். சிலருக்கு சரியாக செரிமானம் ஆகாமல் இந்த பிரச்சனை உண்டாகும்.

அவர்கள் தங்களுடைய உணவில், தொடர்ந்து கறிவேப்பிலையை சேர்த்து வர சரியாகும்.

கருவேப்பிலை
கருவேப்பிலை

சீரான இரத்தவோட்டம்

அனேக பல நபர்களுக்கு, சீரான இரத்தவோட்டம் இல்லாததால், அடிக்கடி கோபம், இரத்தழுத்தம் என எதாவது ஒரு தொல்லை தரக்கூடிய நோய்களை பெற்றுக்கொண்டு இருப்பார்கள்

அவர்கள் இந்த கறிவேப்பிலையை சாப்பிட இரத்தவோட்டம் சீராகும்.

முடிவுரை

நாம் வீணாக தூக்கியெறியும் சாதாரணமான கறிவேப்பிலையில், இவ்வளவு சத்துக்கள் உள்ளனவா? என யோசிக்கிறீர்களா!. ஆம் உண்மை தான். இவைகள் எல்லாம் உதாரணம் தான்.

இதுபோல நமது நாட்டு பாரம்பரிய வைத்தியங்களுக்கு பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.

இனியாவது கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

Post a Comment

0 Comments