மணத்தக்காளி கீரை |
Benefits of Manathakkali | Health
நமது பாரம்பரியத்தில், நமது முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பலவகையான கீரைகளை உணவில் சேர்த்துக்கொண்டனர். இதனால் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வந்தனர்.
இன்று நாம் அதையெல்லாம் மறந்து பிற நாடுகளில் இருந்து இறக்குமதியாகக் கூடிய காய்கறிகளை உண்கிறோம்.
உண்மையில் அவைகள் சுவைமிப்பதாக இருந்தாலும், அவை உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்க கூடியவை.
நமது தட்வெப்ப சூழ்நிலையில், விளையும் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் தான் ஆரோக்கியமானவை.
இதை உணர்ந்து தான் பெரும்பாலும், நமது முன்னோர்கள் தங்கள் தோட்டத்தில் விளைந்தவையே உண்டு வாழ்ந்தனர்.
பொதுவாக வாரம், ஏதாவது ஒரு கீரையை கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். அக்காலத்தில் ஏராளமான கீரைகளை உண்டு வந்தனர்.
ஆனால் தற்பொழுது அதில் சிலவற்றையே நாம் பயன்படுத்தி வருகின்றோம்.
அதில் குறிப்பிட்ட இடத்தை பிடித்து இன்றளவும், பெரும்பாலும் நமது மக்கள் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ளும் ஒரு கீரையான மணத்தக்காளி கீரையை பற்றி பார்க்கலாம்.
பொருளடக்கம்
- மணத்தக்காளி
- மணத்தக்காளியின் கீரையின் வேறு பெயர்கள்
- மணத்தக்காளி கீரையில் சத்துக்கள்
- மணத்தக்காளியின் கீரையின் மருத்துவப்பயன்கள்
மணத்தக்காளி
மணத்தக்காளி தானாகவே தோட்டங்களில் வளரக்கூடிய ஒரு கீரையாகும்.
இந்த மணத்தக்காளியை கீரையாகவும், மூலிகையாகவும் நமது பாரம்பரியத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.
மணத்தக்காளி |
நாம் மணத்தக்காளியை தனியாக பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு தண்ணீர் ஊற்றினால் போதும், தனது வாழ்நாள் முழுவதும் பயளிக்கும்.
மணத்தக்காளியின் வேறு பெயர்கள்
இந்த மணத்தக்காளிக்கு பல்வேறு பெயர்கள் வழக்கத்தில் உள்ளன. பொதுவாக, இது இரு வகைகளாக கிடைக்கின்றது.
ஒருவகையில் பழமானது இளம்சிவப்பு நிறத்திலும், நாம் அதிகம் பயன்படுத்தும் மணத்தக்காளி கருப்பு வண்ணத்திலும் இருக்கின்றது.
மணத்தக்காளியை கருப்பு மணித்தக்காளி, மிளகு தக்காளி மற்றும் மணல் தக்காளி எனவும் அழைக்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் சுக்குட்டி கீரை எனவும் ஒரு சில பகுதிகளில் அழைக்கப்படுகிறது.
மணத்தக்காளி |
மணத்தக்காளியில் உள்ள சத்துக்கள்
இப்பொழுது இந்த கீரையில் உள்ள சத்துக்களை முதலில் பார்க்கலாம்.
இந்த கீரையை உண்பதற்கு, இதிலுள்ள சத்துக்களே காரணம் ஆகும்.
- நீர்ச்சத்து,
- புரதம்,
- சுண்ணாம்பு,
- கொழுப்பு,
- பாஸ்பரஸ்,
- பல்வேறு வகையான தாது உப்புகள்
இந்த கீரையில் உள்ள பல்வேறு வகையான சத்துக்களின் காரணமாக, இதை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை என அனைவரும் சாப்பிடுவதற்கு உகந்தது. குறிப்பாக, கர்ப்பிணி பெண்களும், இந்த கீரையை சாப்பிடலாம்.
மணத்தக்காளி கீரையின் மருத்துவப்பயன்கள்
அடுத்ததாக, மணத்தக்காளியில் உள்ள மருத்துவ பயன்களை பார்க்கலாம்.
மணத்தக்காளி பல்வேறு மருத்துவக்குணங்களை கொண்டது.
அவற்றில் சிலவற்றை கீழே பட்டியலிடுகிறேன். இந்த மணத்தக்காளி கீரையை சமைத்து அல்லது பச்சையாக கூட உண்ணலாம்.
குறிப்பாக மணத்தக்காளி, இதயம், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், கணையம், குடல் மற்றும் வயிறு என அனைத்தையும் பாதுக்காக்கும் தன்மை கொண்டது.
மணத்தக்காளி |
இந்த மணத்தக்காளி காய், கனி, இலை, தண்டு, மற்றும் வேர் என அனைத்தும் பயனளிக்க வல்லது.
வாய், வயிற்றுப்புண்
இன்றளவும் ஏராளமான மக்களுக்கு தெரிந்த ஒன்று மணத்தக்காளி சாப்பிடுவதால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் என உள்ளுக்குள் இருக்கும் அனைத்து வகையான புண்களையும் சரி செய்யும் என்பதுதான்.
உண்மையை சொல்லப்போனால், அவர்கள் சொல்வது 100 சதவீகிதம் சரியானது தான்.
இந்த மணத்தக்காளியை சாப்பிடுவதால், நமது உடலிலுள்ள புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.
இந்த மணத்தக்காளியை, ஒரு கைப்பிடி எடுத்து நன்றாக மென்று சாப்பிட வாய்ப்புண் சரியாகும்.
மணத்தக்காளியின் காயானது வாந்தியை நிறுத்தும் தன்மை கொண்டது. இந்த மணத்தக்காளி இலையில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு, வயிற்றில் உள்ள கட்டிகளை கரைக்கும் தன்மை கொண்டது.
மலட்டு தன்மை
இன்றைய காலத்தில், தவறான உணவுப்பழக்கத்தால் பல ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுகிறது.
மலட்டு தன்மை என்பது குழந்தை பிறக்காமல் போவதே ஆகும். இதற்கு காரணம் உயிரணுக்களில் வலிமை இல்லாமல் இருப்பதே ஆகும்.
மணத்தக்காளி |
இந்த மணத்தக்காளி மலட்டு தன்மையை குணப்படுத்தும் தன்மையும் கொண்டது.
மணத்தக்காளி கீரையை சாப்பிடுவதால் நரம்பு மண்டலமானது சிறப்பாக செயல்படும்.
இந்த மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிடுவதால், உடலில் உள்ள நரம்புகள் வலுவடைகின்றன. இதனால் உயிரணுக்களும் வலுவடைகிறது.
கருத்தரித்தல்
நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத பெண்கள், இந்த மணத்தக்காளியை தொடர்ந்து உணவில் சேர்த்து வர அவர்களுடைய கருப்பையானது வலுவடைகிறது.
அதுமட்டுமில்லாமல், கருப்பையில் உள்ள நச்சுக்களை நீக்கும்.
இந்த மணத்தக்காளியை தொடர்ந்து சாப்பிட முடியாதவர்கள், குறைந்தது வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது சாப்பிட வேண்டும்.
கல்லீரல்
மனிதன் செழுமையாகவும், ஆரோக்கியமாகவும் வாழ கல்லீரல் மிக முக்கியமானது ஆகும்.
நமது உடலில், இந்த கல்லீரல் 500-க்கும் மேம்பட்ட முக்கியமான பணிகளை செய்கிறது.
இந்த மணத்தக்காளியை கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கல்லீரல் விரைவில் வலுப்பெறும். இதை சாதாரணமாக காய்ச்சியும், சூப் போல வைத்தும் பருகலாம்.
மணத்தக்காளி கீரை |
இருமல், கோழை மற்றும் இளைப்பு
இந்த மணத்தக்காளியின் காய், நமது மார்பில் சேரும் கோழை, இருமல் மற்றும் இளைப்பு என அனைத்தையும் சரி செய்யும் தன்மை கொண்டது.
இந்த மணத்தக்காளியை சுவாச இளைப்பு உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வர, விரைவில் தீரும்.
உடல் சூடு, மூலநோய்
கோடைக்காலங்களில் உடலில் ஏற்படும் அதீத சூட்டால் ஏற்படும் சிறுநீர் தடை போன்றவற்றிற்கு, இது மிகசிறந்த நிவாரணியாகும்.
அதுமட்டுமில்லாமல் உடல் சூட்டையும் குறைக்கும் தன்மை கொண்டதால், உடல்சூடால் உண்டாகும் நோய்களை வராமல் தடுக்கிறது.
இந்த மணத்தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வதால் மூலநோயினால் உண்டாகும் வலியை குறைக்கும் தன்மை கொண்டது.
இரத்தசோகை
இரத்தசோகை காரணமாக, சிலருக்கு உடல், கை, மற்றும் கால்களில் வீக்கம் ஏற்பட்டு மிகவும் அவதிப்படுவார்கள்.
அவர்கள், இந்த மணத்தக்காளியை சமைத்து சாப்பிட இரும்புச்சத்து அதிகரிப்பதால், வீக்கம் குறையும்.
மணத்தக்காளி கீரை |
அக்கி நோய்
அக்கி என்பது தோலில் ஏற்படும் ஒரு நோயாகும். இது பார்ப்பதற்கு சிறிது, பெரிதுமாக நீர் கோத்ததுப்போல கட்டிகள் ஏற்படும்.
சிலர் திடீரென ஏற்படும் அக்கி நோயால் பெரும் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த மணத்தக்காளி இலையை அரைத்து பூச, வலி குறைந்து விரைவில் சரியாகும்.
காசநோய்
மணத்தக்காளி பழத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. காசநோய் பிரச்சனை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட அவர்களுக்கு விரைவில் காசநோய் தீரும்.
அதுமட்டுமில்லாமல்,இந்த மணத்தக்காளி உடலுக்கு பலத்தை அதிகரிக்க வல்லது.
முடிவுரை
இதுபோல எண்ணற்ற பயன்களை தன்னகத்தில் கொண்ட இந்த மணத்தக்காளியை உணவில் சேர்த்து, வாழ்வை வளமாக்குங்கள்.
0 Comments