Ticker

6/recent/ticker-posts

மாதுளை பழத்தின் நன்மைகள் | ஆரோக்கியம்

மாதுளை
மாதுளை

Benefits of Pomegranate Fruit | Health

நமது உடலுக்கு பழங்கள் ஆரோக்கியத்தை அளிக்கவல்லது. ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு தனி சிறப்புள்ளது.

அந்த வகையில், இந்த பதிவின் மூலமாக மனம் கவரும் மாதுளையின் நன்மைகளை தெரிந்துக்கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • மாதுளை
  • மாதுளையின் வேறு சில தமிழ் பெயர்கள்
  • மாதுளை பழத்தில் உள்ள சத்துக்கள்
  • மாதுளையின் மருத்துவக்குணங்கள்


மாதுளை

மாதுளை ஒரு குறுமரமாகும். இந்த மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பழம், பூ மற்றும் பட்டை என அனைத்திலும், ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

மாதுளையின் தாயகமாக ஈரான் சொல்லப்படுகிறது. மாதுளம் பழத்தை ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஏராளமாக பயிரிட்டு வளர்த்து வருகின்றனர்.

நமது பாரதத்தில் ஆண்டிற்கு சுமார் 28 இலட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் முதன்மை வகிக்கிறது.

பெரும்பாலும் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் பயிரிடப்படும் மாதுளையை தான், தமிழ்நாட்டில் விற்பனை ஆகின்றது.

மாதுளை
மாதுளை 

நமது சித்தர் பாடல்களில் உள்ள மாதுளை பழத்தை பற்றிய தகவல்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

அதன்படி, வெள்ளை நிற மாதுளைகளே உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கவல்லது.

பொதுவாக நாம் வசிக்கக்கூடிய இடங்களில் விளையும் காய்கறிகளை சாப்பிடுவதே சிறந்தது.

காரணம் நாம் வசிக்கக்கூடிய இடத்திற்கு தகுந்த தட்வெப்ப நிலையை பொருத்தே நமது ஆரோக்கியமும் இருக்கும்.


மாதுளையின் வேறு சில தமிழ் பெயர்கள்

நமது தமிழியில் மாதுளைக்கு ஏராளமான பெயர்கள் உள்ளன. அதில் அதிகம் பயன்படுத்துவது மாதுளை தான். மாதுளை தவிர்த்து வேறு பெயர்களை பார்க்கலாம்.

      • தாடிமம்,
      • பீசபுரம்,
      • மாதுளங்கம்,
      • கழுமுள்.

இது பெண்களுக்கு அத்தியாவசியமானது என்பதாலேயே மாதுளம் எனப் பெயர் பெற்றது.

அதாவது மாது உள்ளம் என்பதற்கு, பெண்களின் மனதில் உள்ள இரகசியத்தை போலவே, மாதுளையில் அதனது விதைகள் மறைக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கவே இந்த பெயர்.

மாதுளை
மாதுளை

மாதுளை பழத்தில் உள்ள சத்துக்கள்

மாதுளையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. அதன் காரணமாகவே, நமது ஆரோக்கியமானது மாதுளையை சாப்பிடும்பொழுது மேம்படுகிறது.

      • இரும்பு,
      • சர்க்கரை, 
      • சுண்ணாம்பு, 
      • பாஸ்பரஸ்,
      • அனைத்து வகையான தாது உப்புகள்,
      • உயிர்ச்சத்துக்கள்.


மாதுளையின் மருத்துவக்குணங்கள்

பெரும்பாலும் வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் இரத்தசிவப்பு நிறங்களை கொண்ட மாதுளைப்பழங்களே மருத்துவக்குணம் கொண்டவையாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி

நாம் தினத்தோறும் மாதுளை பழத்தை சாப்பிடும் பொழுது, நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியானது பல மடங்கு அதிகரிக்கிறது.

இதனால் நமக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை, மிக வேகமாகவும், அதிகமாகவும் அழிக்கிறது. அதனால் எவ்விதமான நோய்களும் நம்மை நெருங்குவதில்லை.

மாதுளைப்பழம்
மாதுளைப்பழம்

பெண்களின் நலன்

இந்த மாதுளை பெண்களுக்கு பல்வேறு வழிகளில் நன்மை அளிக்கவல்லது.

இந்த மாதுளையை பெண்கள் தொடர்ந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் அவர்களுக்கு எண்ணற்ற பயன்கள் கிடைக்கின்றன.

பெண்கள் மாதுளை பூக்கள் 15 கிராம் எடுத்து, 25 கிராம் சர்க்கரை சேர்த்து மசிய அரைத்து காலை மற்றும் மாலை என ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர, வெள்ளைப்படுதல் சரியாகும்.

அதுப்போல மாதுளம் பூச்சாறும் , அருகம்புல் சாறும் சமமாக கலந்து 30 மிலி என தினசரி மூன்று வேளை என மூன்று நாட்களுக்கு குடித்துவர உதிரப்போக்கு சரியாகும்.

மாதுளம் பழச்சற்றை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வர மாதவிடாய் பிரச்சனை நீங்கும்.

மூலநோய், உடல் சூடு, வாந்தி மற்றும் மயக்கம்

இந்த மாதுளம் பூக்களை மசித்து, அதிலிருந்து 14 மில்லியளவு சாறு எடுத்து, அதனுடன் சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தமூலம் மற்றும் மூலக்கடுப்பும் நீங்கும்.

அதுமட்டுமில்லாமல், இதை குடிப்பதால் உடல் சூடு தணியும், வாந்தி மற்றும் மயக்கமும் நீங்கும்.

மாதுளை
மாதுளை

தலைவலி

மாதுளம் பூக்கள் பல்வேறு நன்மைகள் அளிக்கக்கூடியது. பலருக்கு தீராத தலைவலியால் எண்ணற்ற வைத்தியங்கள் பார்த்தும், சரியாகாமல் கவலைப்பட்டு கொண்டு இருப்பார்கள்.

அவர்கள் இந்த மாதுளம் பூக்களை தலைவலியானது மறைந்து போகும்.

அதுமட்டுமல்லால் வெப்பநோய் நம்மை நெருங்காமல், அதிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

வறட்டு இருமல்

சிலர் வறட்டு இருமலால், சரியாக சாப்பிட முடியாமல், தூங்கமுடியாமல் என அவதிப்பட்டு கொண்டு இருப்பார்கள்.

அவர்கள் இந்த மாதுளம் பூக்களை உலர்த்தி, வேளைக்கு ஒரு சிட்டிகை என சாப்பிட்டு வந்தால், இருமல் நிற்கும்.

அதுப்போல, மாதுளம் பழச்சாறும், இஞ்சி சாறும் சம அளவு கலந்து, அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க நாள்பட்ட வறட்டு இருமல் ஆக இருந்தாலும் சரி, அது முற்றிலும் நீங்கும்.

மாதுளை
மாதுளை

கண்

நமது உடலில் மிக முக்கியமான ஐம்புலன்களில் இன்றியமையாத ஒன்று கண்ணாகும். இந்த கண்ணை காக்க வல்லது மாதுளை.

இந்த மாதுளையின் இலைகளை அரைத்து, நன்றாக பசையாக்கி கண்கள் மீது தடவ கண் நோயானது நீங்கும்.

வயிறு, தசை மற்றும் பித்தம்

மாதுளையின் இலைகளை அரைத்து சாறு எடுத்துக் குடிக்க வயிற்றுப்போக்கு நீங்கும்.

மாதுளையின் தண்டும், வேர்பட்டையும் வயிற்றுப்புழுக்களுக்கு எதிரானது.

இவற்றலிருந்து சாறு எடுத்துக்குடிக்க வயிற்றுப்புழுக்கள் நீங்கும்.

அதுப்போல பழம் சாப்பிட்டு வர மலசிக்கல் நீங்கும். உடலும், மனதும் ஆரோக்கியமாகும்.

இந்த மாதுளம் பழத்தை சாப்பிடுவதால், நமது தசைகளை வலுவாக்கி, அதை இறுக்கும் தன்மை கொண்டது.

அதுபோல பித்தம் தொடர்புடைய நோய்களை நீங்கும் தன்மையும் கொண்டது. மாதுளம் பழம் சாப்பிடுவதால் பித்தம் ஆனது குறைகிறது.

மாதுளைப்பழம்
மாதுளைப்பழம்

எலும்பு மற்றும் பற்கள்

இந்த மாதுளம் பழத்தை சாப்பிடுவதால், நமது எலும்பு வலுவாகின்றது. அதுபோல பற்களும் உறுதியாகின்றது.

ஆகையால் பற்கள் மற்றும் எலும்புகளில் பிரச்சனை உடையவர்கள் மாதுளை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவது மிக்க நல்லது.

இரத்தம்

நமது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க, இந்த மாதுளம் பழமானது இன்றியமையாதது ஆகும். இந்த பழத்தை சாப்பிட்டு வருவதால் இரத்தமானது அதிகரிக்கிறது.

இதனால் உடலானது ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் மாறுகிறது.

தோல்

இந்த மாதுளம் பழச்சாற்றுடன் கற்கண்டு, பன்னீர், மற்றும் தேன் என நான்கையும் ஒரு டம்ளர் அளவிற்கு எடுத்து, அதை நன்றாக காய்ச்சி எடுக்க வேண்டும்.

பின்னர் அதை ஒரு நெல்லிக்காய் அளவு, தினசரி இரு வேளை எடுத்துக்கொள்ள படை, தேமல் போன்ற தோல் பிரச்சனைகள் முற்றிலும் அகலும்.

மாதுளைப்பழம்
மாதுளைப்பழம்

தாம்பத்தியம் சிறக்க

தம்பதிகள், இந்த மாதுளம் பழச்சாறை தினசரி குடித்துவர தாம்பத்தியத்திற்கு தேவையான ஹார்மோன்களை சுரக்க செய்யும். இதனால் இல்லறம் மேம்படும்.

முடிவுரை

இதுபோல எண்ணற்ற நன்மைகளை கொண்ட மாதுளை, இனி தவறாது சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வையுங்கள்.

Post a Comment

0 Comments