Ticker

6/recent/ticker-posts

பாலின் நன்மைகள் | ஆரோக்கியம்

பால்
பால்

Benefits of Milk | Health

இந்த உலகில் பிறந்த பெரும்பாலான விலங்கினங்கள் முதலில் அருந்துவது, மனித உயிர்களுக்கு இன்றியமையாத ஒன்று என்றால் அது பால் தான்.

பிறப்பு முதல் இறப்பு வரை அருந்தும் பாலை பற்றிய சில தகவல்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.

பொருளடக்கம்

  • பால்
  • பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு
  • பாலில் உள்ள சத்துக்கள்
  • பால் உற்பத்தி பொருட்கள்
  • பாலின் நன்மைகள்
  • எந்த நேரத்தில் பால் பருகலாம்?


பால்

இந்த உலகில் பிறந்த உயிரினங்களில் பாதிக்கு மேற்பட்ட உயிரினங்கள் பிறந்த உடன் முதலில் எடுத்துக்கொள்ளும் ஒரு உணவு என்றால் அது பால் தான்.

தனது குட்டிகளுக்கு பால் கொடுக்கும் உயிரினங்களை பாலூட்டிகள் என்கிறோம்.

இந்த பாலை மனிதனாக பிறந்த அனைவருமே கட்டாயமாக, தனது தாயிடம் குடித்து இருப்பார்கள்.

பால்
பால்

குழந்தை பிறந்ததுடன் தாயானவள், தனது குழந்தைக்கு மற்ற உணவுப்பொருள் செரிக்கும் தன்மை வரும் வரை தனது பாலை தந்து காக்கின்றாள்.

மனிதனாகப்பட்டவன் பல்வேறு விலங்குகளிடம் இருந்து பெறக்கூடிய பாலையும் அருந்துகிறான். உதாரணமாக, பசு, எருமை, ஆடு, ஒட்டகம் மற்றும் குதிரை.

பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு

நமது பாரதம் உலகளவில் 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தரவரிசையின் படி, பசும்பால் உற்பத்தியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி, எருமைப்பால் உற்பத்தியில் முதலிடத்தையும், செம்மறி ஆட்டுப்பால் உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ளது.

பாலில் உள்ள சத்துக்கள்

பாலானது ஊட்டச்சத்து நிறைந்த, உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய ஒரு உணவு பொருளாகும். இந்த பாலில் பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதில் இயற்கையான கால்சியம், பொட்டாசியம், லாக்டின் (புரதம்), மற்றும் லாக்டோஸ் (இரட்டைச்சர்க்கரை) ஆகியவை நிறைந்துள்ளன.

      • கோலின், 
      • இரும்பு, 
      • பாஸ்பரஸ், 
      • மக்னீசியம், 
      • சோடியம், 
      • துத்தநாகம், 
      • செம்பு, 
      • மாங்கனீசு,
      • செலீனியம்,
      • வைட்டமின் பி6, பி12, ஏ, சி, டி, மற்றும் கே.

அத்துடன் பலவகையான அமினோ அமிலங்களும் கலந்துள்ளன. இதுபோல பாலில் அதிகப்படியான பலவகைப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துதுள்ளன.

பால்
பால்

இந்த காரணத்தால் பாலானது இயற்கையாகவே இனிப்பு சுவையுடையதாக உள்ளது.

பாலில் இயற்கையான கொழுப்புடன், அந்த கொழுப்பை கரைக்கக்கூடிய உயிர்ச்சத்துக்களும், இயற்கையாகவே அமைந்துள்ளன.

இந்த பாலில் உள்ள புரதமானது கேசின் என அழைக்கப்படும் ஒரு புரதவகையை சேர்ந்தது.

மேற்குறியவை மட்டுமல்லாது, கறக்கப்பட்ட பாலில் இரத்தவெள்ளையணுக்கள், பால்மடிச்சுரப்பி செல்கள், பல்வேறு பாக்டீரியாக்கள் மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளன.

இவையனைத்தும் நமது உடலுக்கு எண்ணற்ற சக்தியினை அளித்து, ஆரோக்கியமாக வாழ துணைப்புரிகிறது.

பால் உற்பத்தி பொருட்கள்

பெரும்பாலும் பாலிலிருந்து பெறப்படும் பொருட்களை பால் பொருட்கள் என அழைக்கிறோம்.

இந்த பொருட்கள் பெரும்பாலும் பாலை பதப்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன.

உதாரணமாக தயிர், வெண்ணெய், மோர், நெய், பால்கோவா, பனீர் மற்றும் யோக்கட் கிடைக்கின்றன.

வெண்ணெய்
வெண்ணெய்

பாலின் நன்மைகள்

பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிடுவதால் நமக்கு இயற்கையாகவே ஆரோக்கியமான உடலை பெறமுடியும் என அனைவருக்கும் தெரியும்.

பால் தொடர்ந்து பருகி வருவதால், நமது சருமம் மிகுந்த பலப்பலப்புடன் இருக்கும்.

பால் பருகுவதால் இருதயம் சார்ந்த நோய்கள் நம்மை நெருங்குவதில்லை. பாலானது இதயநோய்கள் இடமிருந்து நம்மை காக்கிறது.

பாலில் உள்ள அதிகப்படியான கால்சியம் நமது எலும்பை வலுப்பெற செய்வதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உடல் எடையை குறைப்பதற்கும் பால் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

பால் தர நிர்ணயம்

பொதுவாக பாலை அதிலுள்ள கொழுப்பு, தூய்மை, நுண்ணுயிர் நீக்கம், திரியும் காலம் மற்றும் நீரின் அளவை வைத்து வகைப்படுத்தப்படுகிறது. மற்ற நாடுகளில் பல்வேறு வகைகளில் வகைப்படுத்தப்படுகிறது.

எந்த நேரத்தில் பால் பருகலாம்?

பால் பருகுவதால் நமக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால், அது எந்த நேரத்தில் பருக வேண்டும் என்பது முக்கியம் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தினந்தோறும் காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் பால் பருகுவது நல்லது.

பால்
பால்

ஆனால் நமது ஆயுர்வேதத்தில் இரவு நேரத்தில் பால் அருந்துவது மிக நல்லது என கூறப்பட்டுள்ளது.

நாம் காலையில் பால் அருந்தும் பொழுது அன்றைக்கு தேவையான புரதமானது, நமக்கு முழுவதும் கிடைத்துவிடுகின்றது.

உடல் தசைகளை பலப்படுத்த நினைப்பவர்கள், அதிகாலையில் பால் அருந்தி விட்டு, பின்னர் இரவு உணவுக்கு பின்னர் பாலை அருந்த வேண்டும். அப்படி அருந்துவதே சிறந்தது என்கின்றனர் வல்லுநர்கள்.

இரவு தூங்க செல்லும் முன்பு, மிதமான சூட்டில் பால் அருந்தி விட்டு படுப்பது நல்லது.

அப்படி அருந்துவதால் நமது மனமானது நல்ல அமைதியை பெறுகிறது, இதனால் நல்ல உறக்கமும் கிடைக்கிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள், இரவு நேரங்களில் அதிகமான அளவு பால் அருந்துவது கூடாது.

அப்படி அருந்தினால் அவர்களின் உடலில் அதிகப்படியான கொழுப்பை அதிகரிக்க செய்யும். அதுமட்டுமில்லாமல் சிலருக்கு செரிமான பிரச்சனையும் வரலாம்.

முடிவுரை

பாலின் பல்வேறு நன்மைகளை தெரிந்துக்கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன்.

Post a Comment

0 Comments