அரைஞாண் கயிறு |
நமது தமிழ் பாரம்பரியத்தில் தொன்றுதொட்டு மக்கள் கடைப்பிடிக்கும் பழக்கத்தில் ஒன்று அரைஞாண் கயிறு கட்டுவது ஆகும்.
நமது முன்னோர்கள், எதற்காக இந்த பழக்கத்தை கடைபிடித்தனர் என்பது பலருக்கு இன்றும் தெரியாது.
சிலர் நாகரீகமாக வாழ்வதாக எண்ணி, இதை கடைபிடிக்க மறுக்கின்றனர். அவர்களுக்கு, இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
பொருளடக்கம்
- அரைஞாண் கயிறு
- முன்னோரும், அரைஞாண் கயிறும்
- அரைஞாண் கயிற்றின் நன்மைகள்
அரைஞாண் கயிறு
நமது முன்னோர்கள் கடைபிடித்த பழக்கம், இன்று நாம் கடைபிடிக்கும் பழக்கம் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம்.
இன்று பெரும்பாலான படித்த மக்கள் வாழும் சமுதாயத்தில் கூட அறிவியல் உண்மையை கூறி, ஒரு பழக்கத்தை கடைபிடிக்க வைப்பது என்பது மிக கடினமாக செயலாக உள்ளது.
அந்த காலத்தில் படித்தவர்கள் மிக குறைவு. அந்த சமயத்தில் அறிவியல் உண்மைகளை கூறி கடைபிடிக்க சொன்னால் பைத்தியம் என நினைப்பார்கள்.
அவர்களை கடைபிடிக்க அறிவில் சிறந்த மனிதர்கள் கடைபிடித்த ஒன்று தான் மூடநம்பிக்கையாக இன்று நாம் கூறும் பல செயல்கள்.
மூடநம்பிக்கையாக கருதாமல் கடைபிடித்தால் அவற்றில் பல நன்மைகள் ஒளிந்திருப்பதை நாம் உணரலாம்.
நமது பெரியோர்கள் குழந்தை பிறந்த சில நாட்களில் இடுப்பை சுற்றிலும், சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் கயிறு ஒன்றை கட்டிவிடுவார்கள்.
குழந்தை |
அந்த கயிற்றை தான் அரைஞாண் கயிறு என்று அழைக்கின்றோம்.
உண்மையில், நமது முன்னோர்களை காட்டிலும் எந்தவொரு நாட்டினரும் அறிவாளி இல்லை என்பதே உண்மை.
வெளிநாட்டவர் சொல்லுவது தான் உண்மை எனவும், நம் முன்னோர்கள் சொன்னது எல்லாமே மூட நம்பிக்கை எனவும் கூறி பலவிதமான நோய்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
நமது முன்னோர்களை காட்டிலும், இன்று வாழும் எந்த நாட்டு ஆராச்சியாளர்களும் அறிவாளிகள் அல்ல.
சரி, நாம் நம் முன்னோர்கள் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கத்தை கடைபிடிக்க காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
முன்னோரும், அரைஞாண் கயிறும்
தமிழர்களாகிய நாம் ஆண் மற்றும் பெண் பேதமின்றி கடைப்பிடிக்கும் ஒரு வழக்கம் தான் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம்.
குழந்தை பிறந்த சில நாட்களிலேயே சிவப்பு அல்லது கருப்பு வண்ண கயிற்றை இடுப்பில் காட்டிவிடுவார்கள்.
உண்மையில், இந்த அரைஞாண் கயிற்றின் முக்கியத்துவத்தை தெரிந்தால் வியந்து போவீர்கள்!.
அந்த காலத்தில் நமது முன்னோர்கள் தங்களுடைய மானத்தை காக்கும் கோவணத்தை இடுப்பில் கட்ட இந்த அரைஞாண் கயிறே பெரிதும் பயன்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
நமது பண்டைய இலக்கியத்தில் ஆடையே இல்லாத ஒரு மனிதன் தனது இடுப்பில் இந்த அரைஞாண் கயிற்றை கட்டியிருக்க, அவன் ஆடையற்றவனாக கருதப்பட மாட்டான் என்கிறது.
அரைஞாண் கயிறு |
அரைஞாண் கயிற்றின் நன்மைகள்
அதிக பளு தூக்கும் வேலையை செய்யும் ஆண்களும், கடினமாக உழைப்பவர்களுக்கும் இந்த அரைஞாண் கயிற்றை கட்டாயமாக கட்டியிருக்க வேண்டும்.
காரணம், இந்த அரைஞாண் கயிற்றால் ஆண்களுக்கு அடிக்கடி ஏற்படும் குடலிறக்க நோய் முற்றிலும் வராமல் தடுக்கும்.
குழந்தைகள் தாய்ப்பாலை குடிக்கும் சமயம், அதன் வயிறு நிறைந்துவிட்டதா? என்பது அந்த தாய்க்கு தெரியாது.
அந்த குழந்தைக்கு பசியாறிவிட்டதா? என்பதும் தெரியாது. அதனால் அந்த குழந்தை பாலை குடித்துக்கொண்டே இருக்கும்.
அந்த குழந்தையின் வயிறு நிறைந்ததும், இடுப்பில் கட்டியுள்ள கயிறானது குழந்தையின் வயிற்றை இறுக்கும்.
இதனால் ஏற்படும் வலியால் குழந்தை பால் குடிப்பதை நிறுத்திவிடும்.
குழந்தை |
அதுபோல, குழந்தையின் உடல் எடை அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? என்பதை அறியவும், அவர்களுடைய ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் இந்த அரைஞாண் கயிறு பெரிதும் பயன்படுகிறது.
இந்த அரைஞாண் கயிறு குழந்தை வயிற்றை இறுக்கினால், அந்த குழந்தையின் உடல் எடை அதிகரித்துள்ளதாக அர்த்தம்.
அதுவே இடுப்பில் இருந்து, அந்த கயிறு இறங்கினால் குழந்தை எடை குறைந்துள்ளது என அர்த்தம்.
அந்த காலத்தில் அனைவராலும் பெரிதும் செய்யப்பட்ட தொழில் என்றால் அது விவசாயம் தான்.
அந்த விவசாயத்தை மேற்கொள்ளும் பொழுது, பாம்போ அல்லது வேறு ஏதேனும் விஷத்தன்மை கொண்ட உயிரினங்களோ தீண்டினால், அந்த சமயம் கயிறை தேட இயலாது.
அந்த சமயம் இடுப்பில் இருக்கும் அரைஞாண் கயிற்றினை அறுத்து கடிவாயின் அருகில் கட்டி விஷத்தை உடலில் மேலும் பரவாமல் தடுத்து, பின்னர் சிகிச்சை மேற்கொண்டனர். அதற்கு இந்த அரைஞாண் கயிறு பெரிதும் பயன்பட்டது.
பாம்பு |
இன்று உலகத்தில் உள்ள அனைவராலும் வியந்து பார்க்கக்கூடிய ஒரு உண்மை ஸ்டெம்செல்.
ஸ்டெம்செல் என்பது குழந்தை பிறக்கும் பொழுது குழந்தையின் தொப்புள் கொடியில் உள்ள செல்களே ஆகும்.
குழந்தை பிறக்கும் பொழுது தாயையும், குழந்தையையும் இணைந்திருப்பது தொப்புள் கொடி தான்.
அந்த தொப்புள் கொடியில் உள்ள செல்கள் தான் ஸ்டெம்செல் என அழைக்கப்படுகிறது.
இந்த செல்கள் எதிர்காலத்தில் குழந்தையின் உயிருக்கு ஏதேனும் நோய்கள் மூலமாக ஆபத்து வரும் பட்சத்தில், அதன் மூலமாக எளிதில் காப்பாற்ற இயலும்.
இதனை இப்பொழுது சேமிக்க பல்வேறு மருத்துவமனைகள் பல இலட்சங்கள் கேட்கின்றன.
நம் முன்னோர்கள், இந்த செல்களை அன்றே சேமித்து பயன்படுத்தியும் வந்தனர்.
அந்த காலத்தில், இதனை தாயத்தில் சேமித்து அரைஞாண் கயிற்றில் கட்டிவிடுவார்கள்.
காரணம், அதனை வீட்டில் எங்கேயேனும் வைத்து, அது தொலைந்து போகாமல் இருக்கவே அப்படி செய்தனர்.
அந்த குழந்தைக்கு எதிர்காலத்தில் ஏதேனும் பாதிப்பு வரும் சமயத்தில் உடனே எடுத்து பயன்படுத்தியும் வந்தனர்.
இது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு கிராமப்புறங்களில் நீச்சல் கற்று தர, இந்த அரைஞாண் கயிற்றில் தனது சேலையின் ஒரு முனையை கட்டிவிட்டு கற்றுத்தருவார்கள்.
நீச்சல் |
குழந்தை மூழ்காமல் இருக்கவும், மூழ்கினால் காப்பாற்றவும், இது உதவியாக இருந்தது.
நமது முன்னோர்கள், ஒரு சிறிய அரைஞாண் கயிற்றில் கூட இவ்வளவு விசயங்களை செய்து வந்துள்ளனர் என்றால் நினைத்து பாருங்கள்.
முடிவுரை
நமது முன்னோர்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்தனர் என புரியும்.
நம் முன்னோர்கள் செய்த எந்தவொரு செயலும் நமது நன்மைக்கு என்று நினைத்து பின்பற்றினால் போதும், நமக்கு ஆயிரம் நன்மைகள் வரும்.
0 Comments