வெண்டை |
Benefits of Vendaikkai | Health
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் காய்கறிகள் இருக்க வேண்டியது மிக முக்கியம்.
இந்த காய்கறிகளில் உள்ள சத்த்துக்களால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும். அதிலும் பச்சை நிற காய்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது வெண்டைக்காய். உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்க கூடிய காய்களில் இதுவும் ஒன்று.
பொருளடக்கம்
- வெண்டைக்காய்
- வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள்
- வெண்டைக்காயில் உள்ள மருத்துவக்குணங்கள்
வெண்டைக்காய்
சிலருக்கு வெண்டைக்காயின் கொழக்கொழுப்பு காரணத்தால் சாப்பிட விரும்ப மாட்டார்கள். அதைவிட அதை சமைக்கவும் சிலர் தயங்குவர்.
காரணம், இன்றைய அதிவேக உலகத்தில் வெண்டைக்காயை கொழக்கொழுப்பு தன்மையை நீக்கி பின்னர் சமைக்க நேரம் எடுக்கும் என்பதால் மட்டும் தான்.
வெண்டைக்காய் உண்மையில் மிகச்சுவையான ஒரு காய். இதை பல்வேறு வகைகளாக எளிமையாக சமைக்கலாம். சமைத்து தான் உண்ண வேண்டுமா? என்றால் தேவையில்லை.
வெண்டைக்காய் |
வெண்டைக்காயை பச்சையாகவும் சாப்பிடலாம். இதனால் வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள் ஆனது நேரடியாக உடலுக்கு கிடைக்கின்றது.
வெண்டைக்காய் பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் நீண்டு காணப்படும். இதில் பல வண்ணங்களும், வகைகளும் உள்ளது.
பச்சை நிற வெண்டைக்காயை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர்.
வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள்
முதலில் வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள் என்னென்ன இருக்கின்றது என பார்க்கலாம். வெண்டைக்காயில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
- நார்ச்சத்து,
- புரதம்,
- கார்ப்போஹைட்ரேட்,
- வைட்டமின் ஏ, சி,
- போலிக் அமிலம்,
- சுண்ணாம்பு சத்து,
- இரும்பு,
- பொட்டாசியம்,
- மெக்னீசியம்.
வெண்டை |
வெண்டைக்காயில் உள்ள மருத்துவக்குணங்கள்
நமது உடலுக்கு வெண்டைக்காய் ஏராளமான சத்துக்களை கொடுத்தது, ஆரோக்கியத்தை மிகவும் மேம்படுத்துகிறது. குறிப்பாக சில முக்கியமான, இப்பொழுது பார்க்கலாம்.
மூளையும், ஞாபகசக்தியும்
நீண்டநெடுங்காலமாக, நமது மக்கள் வெண்டைக்காயை சாப்பிட்டுவர அவர்கள் சொல்லும் காரணம் வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை நன்றாக வளரும் என்பது தான்.
இது நகரங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்கள் வரை, வெண்டைக்காயில் உள்ள இந்த பயனை நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்.
உண்மையில் வெண்டைக்காயை, நாம் சாப்பிடும் பொழுது மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். இதனால் ஞாபகசக்தியானது அதிகரிக்கிறது.
இதன் காரணமாக படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர் அதிகமாக கொடுப்பதும் வெண்டைக்காய் தான்.
இதை சாப்பிடுவதால் மூளை மட்டுமல்லாது, உடலும் சுறுசுறுப்படையும்.
சிலர் வயது முதிர்வின் காரணமாக தங்களது ஞாபகசக்தியை இழந்து வருவார்கள்.
அவர்கள் அடிக்கடி வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் ஞாபகசக்தி மேம்படும்.
வெண்டைக்காய் |
நீரிழிவு நோய்
நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், தங்களது உணவில் அடிக்கடி வெண்டைக்காயை சாப்பிட்டு வர, ஒரு கணிசமான அளவிற்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.
இந்த வெண்டைக்காயை வேகவைத்த நீரை பருகி வந்தால் சர்க்கரை நோயானது எப்பொழுது கட்டுக்குள் இருக்கும்.
வயிறு
தினமும் குறைந்தது 5 பச்சை வெண்டைக்காயை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், வயிற்று பொருமல் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து, நமது ஜீரண மண்டலத்தை மேம்படுத்துகிறது.
இதனால் மலசிக்கல் ஆனது சரியாகிறது. மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் வெண்டைக்காய் எடுத்துக்கொள்வது மிக்க நல்லது.
எப்பொழுதும் எதையாவது சாப்பிடும் பழக்கம் உடையவர்கள், தங்களது உடல் எடையை எண்ணி மிகவும் கவலைக் கொள்வார்கள். அவர்களால் சாப்பிடுவதை நிறுத்த இயலாது.
இந்த பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் சாப்பிடும் பொழுது, தேவையில்லாத பசியை தூண்டும் உணர்வை கட்டுப்படுத்தும். இதனால் உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
வெண்டைக்காய் |
புற்றுநோய்
உடலில் தீங்கு விளைவிக்கும் செல்களை அழிக்கும் ஆற்றல் வெண்டைக்காய்க்கு உண்டு.
இந்த வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால், நாம் நம்மை புற்றுநோயிலிருந்து தற்காத்து கொள்ளலாம்.
இந்த வெண்டைக்காய் புற்றுநோய் செல்களை உற்பத்தி ஆகாமல் தடுக்கும் தன்மை வாய்ந்தது.
கல்லீரல்
வெண்டைக்காய் சாப்பிடுவதால், கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதனால் கல்லீரல் ஆனது மேம்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் வெண்டைக்காய் கொழுப்பை குறைத்து, பித்த அமிலத்தை கட்டுப்படுத்தி நச்சுக்களை கட்டுப்படுத்தும் தன்மையும் கொண்டது.
எலும்பு
வெண்டைக்காய் சாப்பிடுவதால், நமது உடலில் உள்ள எலும்புகளின் அடர்த்தி மேம்படுகிறது. இதனால் எலும்பானது வலுவடைகிறது.
இந்த வெண்டைக்காயை பெண்கள் அதிகம் சாப்பிடுவதால், அவர்களுக்கு வரும் எலும்பு தேய்மான பிரச்சனைகள் முற்றிலும் தீரும்.
வெண்டை |
சளி மற்றும் காய்ச்சல்
இந்த வெண்டைக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள், நமது உடலுக்கு காய்ச்சல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
சருமப்பொலிவு மற்றும் பார்வைத்திறன்
இந்த வெண்டைக்காயை சாப்பிடுவதால், நமது தோலானது பொலிவு பெறுகிறது.
குறிப்பாக, முகப்பருக்கள் வருவதை குறைத்து, முகத்தை பொலிவுடன் வைக்க உதவுகிறது.
அதுமட்டுமில்லாமல் வெண்டைக்காய் சாப்பிடுவதால், நமது பார்வை திறனும் அதிகரிக்கிறது.
பார்வை குறைபாடு திறன் கொண்டவர்கள், இந்த வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லது.
உடல்சூடு மற்றும் சிறுநீர்
உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள், இந்த வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள உடல்சூடானது மெல்லமெல்ல குறைய தொடங்கும்.
அதுமட்டுமில்லாமல் சிறுநீர் சார்ந்த பிரச்சனைகளுக்கும், இந்த வெண்டைக்காய் தீர்வாக அமையும்.
வெண்டை மலர் |
ஆஸ்துமா
ஆஸ்துமா போன்ற சுவாசப்பிரச்சனைகள் உள்ளவர்கள், இந்த வெண்டைக்காயை வேகவைத்த நீரை பருகிவர நல்ல பலன் கிடைக்கும். விரைவில் சுவாசப்பிரச்சனையில் இருந்தும் மீள்வார்கள்.
நோய்யெதிர்ப்பு சக்தி
உடலில் நோய்யெதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டவர்கள், குழந்தைகள், மற்றும் முதியவர்கள் என தவறாது, இந்த வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள அவர்களது நோய்யெதிர்ப்பு சக்தியானது மேம்படுகிறது.
முடிவுரை
இந்த பதிவின் மூலமாக வெண்டை தரும் நன்மைகளை தெரிந்துக்கொண்டு பயன்பெறுவீர்கள் என நம்புகிறேன்.
0 Comments