Ticker

6/recent/ticker-posts

ஆண்களை நம்பக்கூடாது | பகுதி 12 | விக்ரமாதித்தன் கதைகள்

vikramathithan kathaikal
விக்ரமாதித்தன் கதைகள்

Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 12

வேதாளம் தனது ஏழாவது கதையை கூறத்தொடங்கியது.

பாடலிபுத்திரம் என்ற அழகான நாட்டை விக்கிரமகேசரி என்னும் மன்னன் சீரும், சிறப்புமாக ஆண்டு வந்தான். அவனுக்கு பராக்கிரமகேசரி என்னும் ஒரு மகன் இருந்தான்.

அவனிடம், முக்காலங்களை பற்றியும் கூறும் அபூர்வ சக்திக்கொண்ட ஒரு ஆண் கிளி ஒன்று இருந்தது. ஒருநாள் அந்த கிளியானது, வேதபுரி என்னும் நாட்டை மகாதரன் என்னும் மன்னன் ஆண்டு வருகிறான்.

அவனுக்கு அழகான ஒரு மகள் இருக்கிறாள். அவளை தான் நீ மணந்துக்கொள்ள போகிறாய். அதே சமயத்தில், அந்த இளவரசியிடமும் முக்காலங்களை பற்றியும் கூறும் அபூர்வ சக்திக்கொண்ட ஒரு பெண் கிளி ஒன்றும் இருக்கிறது என்றது.

இதைக்கேட்ட இளவரசன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அதேச்சமயத்தில் இளவரசியிடம் இருந்த கிளியானது, இளவரசன் உன்னை தேடி வரப்போகிறான்.

கிளி
கிளி

உடனே உனது தந்தையிடம் கூறி மணந்துக்கொள் என்றது. பின்னர் கிளி சொன்னதைப் போல இளவரசனும், இளவரசியும் திருமணம் செய்துக்கொண்டனர். இருவரும் மகிழ்ச்சியாக வாழ தொடங்கினர்.

பின்னர், தங்களை ஒன்று சேர்த்த இந்த கிளிகளையும் ஜோடிகளாக எண்ணி இரண்டையும் ஒன்றாகவிட்டனர். பெண்கிளி பக்கம், ஆண்கிளி சென்றது.

பெண்கிளியானது, ஆண்களை என்றும் நம்பக்கூடாது என்றது. உடனே, ஆண்கிளியானது, பெண்களை தான் நம்பக்கூடாது என்றது. பின்னர் இரண்டும் சண்டைப்போட தொடங்கியது.

இரண்டு கிளிகளும் சண்டைப்போடுவதை கண்ட இளவரசனும், இளவரசியும் உங்களுக்குள் என்ன பிரச்சனை என கேட்டனர். முதலில் பெண்கிளி ஆண்களை ஏன் நம்பக்கூடாது என்பதற்கான கதையை கூறியது. 

வால்மீகன் செட்டி என்பவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெற்றோர் பேச்சைக்கேட்காமல், பெற்றோருக்கு அடங்காமல் வளர்ந்து வந்தான்.

இதனால் வீட்டை விட்டு வெளியே வந்து, வைத்திருந்த பொருளை எல்லாம் வீணடித்தான். பின்னர் அங்கிருந்து வெகுதொலைவில் அழகாபுரம் என்னும் ஊரை அடைந்தான்.

கிராமம்
கிராமம்

அந்த ஊரில் இருந்த ஆடன் செட்டியிடம், வேலைக்கு சேர்ந்து மிகவும் நல்லவனை போல நடித்து வந்தான். ஆடன் செட்டி, தன்னுடைய மகளை அவனுக்கு திருமணம் செய்து வீட்டுடன் வைத்துக்கொள்ள எண்ணினார்.

காரணம், அவருக்கு அவனுடைய தந்தையான வால்மீகன் செட்டியை பற்றி தெரியும். பின்னர், இருவருக்கும் திருமணம் நடந்தது. சிறிது நாட்களிலேயே, தன்னுடைய பழைய குணங்களை காட்ட தொடங்கினான்.

ஒருநாள், தன்னுடைய வீட்டிற்கு மனைவியை அழைத்து சென்று வருவதாக கூறி, மாமனார், மாமியாரிடம் கூறினான். இதைக்கேட்ட அவர்கள் நிறைய நகைகள் போட்டு, நிறைந்த செல்வத்துடன் வழியனுப்பி வைத்தனர்.

அவன் செல்லும் வழியில், திருடர்கள் இருக்கின்றனர். அதனால் நகைகளை கழட்டி கொடு என மனைவியிடம் கேட்டான்.

நகைகள்
நகைகள்

அவளும் அனைத்தையும் கழட்டி கொடுக்க, அவளை ஒரு பாழும் கிணற்றில் தள்ளிவிட்டு சென்று விட்டான். நல்லகாலமாக, அந்த கிணற்றில் அதிக தண்ணீர் இல்லாததால் அங்கு வந்த சிலரால், அவள் அதிலிருந்து தப்பி வீடு திரும்பி சென்றாள்.

உடலில் காயங்களுடன் தனியாக வருவதை கண்டு பதட்டம் அடைந்த அவளது பெற்றோர், அவளிடம் நடந்ததை கேட்டனர். தனது கணவனை பற்றி கூறாமல் திருடர்கள் நகைகளை பிடுங்கிக்கொண்டு கணவனை தூக்கி சென்று விட்டனர் என்றாள்.

இதைக்கேட்ட அவளது பெற்றோர், மகளுக்கு நடந்ததை எண்ணி கவலைக்கொண்டனர். ஆனால் அவளது கணவனோ, அவளிடம் பறித்த நகைகளை அனைத்தையும் விற்று செலவழித்து விட்டு தன்னுடைய வீட்டிற்கு செல்ல, அவர்கள் அவனை விரட்டி அடித்தனர்.

பின்னர், மாமனார் வீட்டிற்கு செல்லலாம். மனைவியை பற்றிக்கேட்டால் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாள் எனக்கூறி ஏதேனும் பணம் பெற்று வரலாம் என்று எண்ணி புறப்பட்டான்.

பெண்
பெண்

வீட்டின் முன்னால், தன்னுடைய மனைவி உயிருடன் இருப்பதை கண்டு திடுக்கிட்டு அங்கிருந்து ஓட முயற்சி தான். ஆனால் அவள், அவனை தடுத்து தான் வீட்டில் மாற்றி கூறிவிட்டேன்.

இனியாவது திருந்தி தன்னுடன் வாழுங்கள் எனக்கூறினாள். அவனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றாள். அவளது பெற்றோர் திருடனிடன் இருந்து தப்பித்து வந்ததை எண்ணி மகிழ்ந்தனர். ஆனால் அவன் திருந்தவில்லை.

சிலதினங்களுக்கு பிறகு மீண்டும் மனைவியை அழைத்துக்கொண்டு சென்று நகைகளுக்காக கொன்று விட்டான். எனவே ஆண்களை நம்பக்கூடாது என்றது பெண்கிளி.

தொடரும்...

Post a Comment

0 Comments