![]() |
விக்ரமாதித்தன் கதைகள் |
Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 13
பெண் கிளி தனக்கு தெரிந்த கதையை கூறி முடிக்க, ஆண் கிளி தனக்கு தெரிந்த கதையை கூற தொடங்கியது.
அரிமாபுரம் என்னும் ஒரு அழகிய ஊரில் தர்மசேனன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அதே ஊரில் கணவர்த்தமன் என்னும் செட்டிக்கு ஒரு அழகான மகள் இருந்தாள்.
அவளுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம் சென்ற பிறகு, அவளது கணவனுக்கு வெளியூரில் ஒரு வேலை கிடைத்தது. இதனால், அவளை அவளுடைய பெற்றோர் வீட்டில் விட்டு சென்றான். ஆனால் அவளுக்கு ஒரு வாலிபனுடன் தவறான பழக்கம் இருந்து வந்தது.
இது அந்த வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணுக்கு மட்டும் தான் தெரியும். வெளியூரில் இருந்து அவளது கணவன் வர, அவனை சிறப்பாக வரவேற்று, சுவையான உணவு தயாரித்து கொடுத்து, சோர்வு களைய நன்றாக உறங்கவைத்து விட்டாள்.
![]() |
உணவு |
பின்னர், பணிப்பெண் மூலமாக, தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு பின்புறமாக உள்ள ஒரு சிறிய சுவற்றின் வழியாக வரக்கூறினாள். அவனும் அந்த வழியாக மறைத்துக்கொண்டு வர, நகர்வலத்தில் இருந்த காவலர்கள் திருடன் என எண்ணி அவன் மீது அம்பினை எய்தனர்.
அவன் வலியில் துடித்துக்கொண்டு இருக்க, அங்கு வந்த அவள் அவனது முகத்தை பார்த்தால், வலியில் துடித்த அவன், அவளது மூக்கை கடித்து விட்டான். அந்த நேரத்தில், அங்கு வந்த காவலர்களை கண்டு, அங்கிருந்து அவள் கடிபட்ட மூக்குடன் ஓடிவிட்டாள்.
இதை கண்ட காவலர்கள் "எல்லாம் கள்ளக்காதல் செய்யும் வேலை" எனக்கூறி அங்கிருந்து சென்று விட்டனர். வீட்டிற்குள்ளே ஓடிய அவள், ஒரு பாக்குவெட்டியில் இரத்தத்தை தெளித்துவிட்டு, தூங்கிக்கொண்டிருந்த கணவன் தான், தனது மூக்கை வெட்டிவிட்டான் என அலறினாள்.
![]() |
மூக்கு |
இதை பார்த்த அவளது பெற்றோரும், அவளுடன் சேர்ந்து விட்டனர். ஆனால் அவனது கணவனுக்கு, அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை. அவளது பெற்றோர், தன்னுடைய மகளுக்கு நீதி வேண்டும் எனக்கூறி மன்னரிடம் முறையிட்டனர்.
அவளது கணவன் எவ்வளவு முறை கூறியும், யாரும் நம்பவில்லை. இறுதியாக, நகர்வலம் சென்ற காவலர்கள் நடந்ததை கூற, அவள் தலைகுனிந்து நின்றாள். மன்னன், பொய்க்குரிய அவளை சிறையில் தள்ளினான் என ஆண் கிளி கதையை கூறி முடித்தது.
இதைக்கேட்ட இளவரசனும், இளவரசியும் இரண்டு கிளிகளையும் சமாதானம் செய்து வைத்தனர் என்று கூறி கதையை முடித்தது. பின்னர் வேதாளம், விக்ரமாதித்யனை பார்த்து, மன்னா! இந்த இரண்டு கிளிகள் கூறிய கதைகளில், எது நியாயமானது? எனக் கூறு என்றது.
பின்னர், பதிலை சொல்லாவிடில் உனது தலையை கடித்து தின்றுவிடுவேன் என்றது வேதாளம். விக்ரமாதித்தன் பதில் கூற தொடங்கினான்.
ஒரு ஆண்மகனை மணத்ததும், அந்த பெண் அவனுக்கு உரியவள் ஆவாள். பெண்கிளி கூறிய கதையில், பெண்ணுக்கு அவளது கணவன் செய்த செயல் தண்டனை குரியது.
![]() |
கிளி |
ஆனால், ஒரு ஆணுக்கு, அவனது மனைவி மேல் முழு அதிகாரமுண்டு. ஆனால் பெண்ணுக்கு அவ்வாறில்லை. ஆண்கிளி கூறிய கதையில் பெண் செய்தது துரோகம். ஆகையில் ஆண்கிளி பக்கம் தான் நியாயமுள்ளது என்றான்.
விக்ரமாதித்யன் கூறிய சரியான பதிலை கேட்டு, வேதாளம் கட்டுகளில் இருந்து விடுபட்டு மீண்டும், இடுகாட்டை அடைந்து, முருங்கை மரத்தில் தொங்க தொடங்கியது.
விக்ரமாதித்யன், மீண்டும் திரும்பி சென்று. வேதாளத்தை, கட்டி தூக்கி தோளில் சுமந்து யாகம் செய்யும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
0 Comments