விக்ரமாதித்தன் கதைகள் |
Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 16
பர்வததேசத்தை மாயவர்மன் என்னும் மன்னன் சீரும், சிறப்புமாக ஆண்டு வந்தான். அவனது நாட்டில் இருந்த ஒரு பெரும் வியாபாரிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
இதனால், மனம் நொந்துப்போன அவர்கள் கோவில் கோவிலாக சென்று வந்தனர். அதன் பயனாக, அவர்களுக்கு முதலில் ஒரு ஆண் குழந்தையும், பின்னர் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
ஆண் குழந்தைக்கு தருமன் என்றும், பெண்ணுக்கு தாட்சியாயிணி என்றும்பெயர் சூட்டினர். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல், பிறந்தக் காரணத்தால் இருவரையும் மிகவும் செல்லமாக வளர்த்து வந்தனர்.
தருமனுக்கு, ஆதிகேசவன் என்னும் ஒரு நண்பன் இருந்தான். இருவரும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தனர்.
நண்பர்கள் |
தாட்சியாயிணிக்கு, விசேயசேகரன் என்னும் ஒருவனுடன் திருமணம் பேசி முடித்தார்கள்.
தாட்சியாயிணி, அவளுடைய நண்பர்களுடன் கோவிலுக்கு சென்று வரும் சமயத்தில், அவள் கண்ட ஆதிகேசவன், தன்னை மணந்துக்கொள்ளவாயா? எனக்கேட்டான்.
கள்ளம்கபடமில்லா தாட்சியாயிணி, தன்னுடைய அண்ணனின் நண்பர், இவ்வாறு கேட்பதை பார்த்து அதிர்ந்து போனாள்.
பின்னர், எனக்கு முன்பே விசேயசேகரன் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது.
எங்களுக்கு திருமணம் முடிந்ததும், எனது கணவரிடம் சம்மதம் கேட்டுவிட்டு உங்களிடம் வருகிறேன் என்று கூறினாள்.
ஆதிகேசவன், இவளின் கள்ளம்கபடமில்லா பேச்சைக்கேட்டு திகைத்துப்போனான்.
பின்னர் சில நாட்களில் திருமணம் இனிதே முடிந்தது. அன்றிரவு விசேயசேகரன் அன்புடன் தாட்சியாயிணியை நெருங்கினான்.
இரவு |
ஆனால், அவள் தன்னுடைய அண்ணனின் நண்பருக்கு வாக்கு கொடுத்துள்ளேன் என்று நடந்ததை மறைக்காமல் கூறினாள்.
விசேயசேகரன், தன்னிடம் எதையும் மறைக்காமல் பேசிய, தன்னுடைய மனைவியை எண்ணி ஆச்சரியத்தில் உறைந்துப்போனான்.
பின்னர், அவளிடம் நீ கொடுத்த வாக்கினை காப்பாற்று என வழியனுப்பி வைத்தான்.
இரவுப்பொழுதில் கல்யாணக்கோலத்தில் செல்லும் பொழுது, திருடன் ஒருவன் வழி மறைத்தான்.
திருடனைக்கண்ட தாட்சியாயிணி, சிறிதும் அச்சப்படாமல் அவனிடம் என்னுடைய நகைகள் தானே வேண்டும்.
இதோ தருகிறேன் என்று கழற்ற போனாள். ஆனால், திருடன் எனக்கு உன்னுடைய நகைகள் தேவையில்லை. நீ தான் வேண்டும் எனக்கூறினான்.
இதைக்கேட்ட தாட்சியாயிணி, தனது கணவனிடம் சம்மதம் பெற்று, நான் கொடுத்த வாக்கினை நிறைவேற்ற சென்றுக்கொண்டு இருக்கின்றேன்.
நான் அவரை பார்த்துவிட்டு வரும்வரை காத்திரு என்றுக்கூறி அங்கிருந்து புறப்பட்டு, ஆதிகேசவனின் விட்டு கதவை தட்ட, அவனும் கதவை திறந்தான்.
கதவு |
நள்ளிரவு நேரத்தில் தாட்சியாயிணியை கண்ட அவன் அதிர்ச்சிக்குள்ளானான்.
தாட்சியாயிணி, தனது கணவரிடம் அனுமதி பெற்று வந்துவிட்டேன்.
இனி உங்களது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்றாள்.
இதைக்கேட்ட ஆதிகேசவன் அதிர்ந்துப்போனான். பின்னர், தாட்சியாயிணியை பார்த்து, "இன்னொருவரின் மனைவியான நீ எனக்கு தங்கையம்மா!, நீ உனது கணவரிடம் செல்லம்மா!" என கைக்கூப்பி வழியனுப்பி வைத்தான்.
பின்னர் தாட்சியாயிணி திரும்பி வந்து திருடனை பார்த்து, நடந்ததைக் கூறி, இனி உங்களது விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளுங்கள் என்றாள்.
இதைக்கேட்ட திருடன், தாயே! நீ பெண்ணே அல்ல, நீ தெய்வம் அம்மா, நான் புத்திக்கேட்டு அறியாமல் தவறாக பேசிவிட்டேன் என்னை மன்னித்துவிடு அம்மா எனக்கூறினான்.
பின்னர் தான் வைத்திருந்த நகைகளை அவளிடம் கொடுத்து, வீடு வரை வந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தான்.
நகைகள் |
வீட்டிற்கு வந்த தாட்சியாயிணி, கணவனின் காலில் விழுந்து வணங்கி, நடந்ததைக் கூறினாள்.
மனைவியின் கள்ளமாறிய குணத்தை எண்ணி மகிழ்ச்சிக்கொண்டவனாய், அவளை அனைத்துக் கொண்டான்.
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் எனக்கூறி கதையை முடித்து.
பின்னர், விக்ரமாதித்யனை பார்த்து, மன்னா! இக்கதையில் பாராட்டிற்குரியவர் யார்? எனக்கேட்டது.
இதைக்கேட்ட விக்ரமாதித்யன் பதில் கூறத்தொடங்கினான்.
இக்கதையில் தாட்சியாயினி குணமும், அவளது கணவனின் குணமும் பாராட்டதற்குரியது தான்.
ஆனால் அவர்கள் பிறந்தது முதல் அவ்வாறாகவே வளர்ந்து வந்துள்ளனர்.
ஆனால், ஒரு திருடன் அவ்வாறில்லை. அவன் செய்யும் தொழிலையும் மறந்து, ஒரு பெண்ணை தெய்வமாக கருதி, அவளை வீடு வரை பாதுகாப்பாக அழைத்து வந்து விட்டு சென்றான்.
ஆகையால், அந்த திருடனே பாராட்டிற்குரியவன் என்றான்.
விக்ரமாதித்யன் கூறிய, சரியான பதிலைக்கேட்ட வேதாளம், கட்டுகளில் இருந்து விலகி மீண்டும் இடுகாட்டை அடைந்து, அங்கிருந்த& முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்க தொடங்கியது.
விக்ரமாதித்யனும், மீண்டும் முயற்சித்து& வேதாளத்தை பிடித்து கட்டி, தோளில் சுமந்து நடக்க தொடங்கினான்.
0 Comments