Ticker

6/recent/ticker-posts

நயவஞ்சக மன்னனும், அரக்கனும் | விக்ரமாதித்தன் கதைகள்

வாலிபன்
வாலிபன்

வேதாளம், தனது இருபத்தொன்றாவது கதையை சொல்லத்தொடங்கியது.

வசந்தப்பட்டினம் என்று ஒரு பழமையும், அழகும் நிறைந்த ஓர் ஊர் இருந்தது. அந்த ஊரை ஆண்ட மன்னன் வேட்டையாடுவதில் அதீத ஆர்வம் கொண்டவன்.

தினந்தோறும் வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். அவ்வாறு ஒருநாள் வேட்டையாட காட்டிற்கு சென்றான்.

நீண்ட தூரம் காட்டிற்குள் சென்றும், அவனுக்கு எந்த விலங்கும் கண்ணிற்கு படவில்லை.

ஆகையால் அருகில் இருந்த நதியில் தண்ணீர் குடித்துவிட்டு, ஒரு மரத்திற்கு அடியில் ஒய்வு எடுத்தான்.

அப்பொழுது, அந்த நதியில் பேரழகு கொண்ட பெண் ஒருத்தி தண்ணீர் எடுப்பதை கண்டான்.

அவளது அழகில் மயங்கிய மன்னன், இந்த காட்டியில் இவ்வளவு அழகான பெண்ணா? என திகைத்துப்போனான்.

பின்னர், அவளிடம் சென்று பேசத்தொடங்கினான். அவளை எவ்வாறாவது மயக்கி, மணந்துக்கொள்ள வேண்டும் என எண்ணினான்.

அவளிடம், யார் நீ? இந்த அடர்ந்த வனத்தில் என்ன செய்கிறாய்? எனக்கேட்டான்.

வனம்
வனம்

அதற்கு அவள், தான் இந்த காட்டில் வாழும் முனிவருடைய மகள் என்றும், தண்ணீர் எடுப்பதற்காக வந்ததாகவும் கூறினாள்.

இதைக்கேட்ட மன்னன், சந்தோஷத்தில் எவ்வாறு இவளை மணந்துக்கொள்வது? என யோசித்துக்கொண்டு இருந்தான்.

அந்த நேரத்தில் வானத்தில் பறந்து சென்றுக்கொண்டிருந்த அரக்கன், அந்த அழகிய பெண்ணை கண்டு அங்கு இறங்கினான்.

அரக்கனிடம் போரிட்டு வெல்வது கடினம் என எண்ணிய மன்னன்.

தாம் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் மணந்துக்கொள்ள இருப்பதாகவும் கூறி, தங்களை விட்டுவிடும் படி கோரினான்.

இதைக்கேட்ட அரக்கனும், ஒரு நிபந்தனையுடன் சம்மதம் தெரிவித்தான்.

அந்த நிபந்தனையானது, பெற்றோர் உயிருடன் இருக்கும் ஒரே பிள்ளை தனக்கு உணவாக அளிக்க வேண்டும் என்பதாகும்.

அதற்கு சம்மதம் தெரிவித்து நாடு திரும்பிய மன்னன். அரக்கனுக்கு உணவளிக்க, பெற்றோர் உயிருடன் இருக்கும் ஒரே ஆண்மகன் தனக்கு வேண்டும்.

மகன்
மகன்

அதற்கு எவ்வளவு பொருள் வேண்டுமென்றாலும் தருவதாக அறிவித்தான்.

இதைக்கேட்ட ஒரு பிராமணன், தன்னுடைய ஒரே மகனை தருவதாக கூறி மன்னனிடம் அழைத்து வந்தான்.

மன்னன், அந்த பிராமணனுக்கு ஏராளமான பொன்னை அளித்து, அரக்கனிடம் ஒப்படைக்க கோரினான்.

அந்த பிராமணனும், அரக்கன் இருக்கும் இடத்தை அடைந்து, தன்னுடைய ஒரே மகனை ஒப்படைத்தான்.

அரக்கன், அந்த பிராமணன் மகனை உணவாக்க துணியும் பொழுது, அந்த வாலிபன் அரக்கனை பார்த்து சிரித்தான்.

அவனது வஞ்சகமில்லாத சிரிப்பைக்கண்ட அரக்கன், அவனை இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து பறந்து சென்றான் எனக்கூறி வேதாளம் கதையை முடித்தது.

பின்னர் விக்ரமாதித்யனை பார்த்து, இக்கதையில் அந்த பிராமணனின் மகன் அரக்கனை பார்த்து சிரிக்க காரணம் என்ன? எனக்கேட்டது.

சிரிப்பு
சிரிப்பு

விக்ரமாதித்யனும் பதில் கூறத்தொடங்கினான்.

ஒருவன் தனக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் பெற்றோரிடம் கூறுவான், பெற்றோர்களால் பிரச்சனை நேர்ந்தால் மன்னனிடம் கூறுவான்.

மன்னனால், ஏதேனும் பிரச்சனை என்றால் கடவுளிடம் கூறுவான். ஆனால், இப்பொழுது பெற்றோர் என்னுடைய உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும், பணத்திற்காக தன்னை விற்க நினைக்கின்றனர்.

மன்னனும் நயவஞ்சகனாக இருக்கின்றான். கடவுளும், இதைக்கண்டும் காணாமல் இருப்பதை நினைத்தான் சிரித்தான் என்றான்.

விக்ரமாதித்யன் சொன்ன சரியான பதிலைக்கேட்டு, மீண்டும் கட்டுகளில் இருந்து விடுபட்டு சென்று மயானத்தை அடைந்தது.

பின்னர், முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்க தொடங்கியது.

விக்ரமாதித்யன், தன்னுடைய விட முயற்சியால் வேதாளத்தை மீண்டும் பிடித்து கட்டி தூக்கிக்கொண்டு நடக்க தொடங்கினான்.

Post a Comment

0 Comments