Ticker

6/recent/ticker-posts

பேரழகு கொண்ட பெண்ணை கவர்ந்த அரக்கன் | பகுதி 22 | விக்ரமாதித்தன் கதைகள்

vikramathiyan kadhaikal
விக்ரமாதித்தன் கதைகள்

Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 22

விக்ரமாதித்தனிடம் வேதாளம், தன்னுடைய பதினாறாவது கதையை கூறத்தொடங்கியது. மாடப்புரம் என்னும் அழகிய ஊரில் ஒரு பெரும் வணிகன் இருந்தான். அவனுக்கு அழகான ஒரு மகன் இருந்தான்.

அவனுக்கு திருமணம் செய்துவைக்க எண்ணிய, அவனது தந்தை பல இடங்களில் பெண் தேடி அழகே வடிவான ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தான்.

அவளது அழகை கண்டு மயங்காதவர் யாருமில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், தேவலோக பெண்களை காட்டிலும் பேரழகு கொண்டவள். திருமணம் ஆன பிறகு இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு வைத்திருந்தனர்.

தம்பதி
தம்பதி

இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாது அன்புடன் வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறு இருக்க, ஒரு சமயம் இருவரும் தங்களுடைய வீட்டு மாடியில் நிலவொளியை ரசித்துக்கொண்டிருக்க அங்கேயே உறங்கிப்போயினர்.

அந்த நேரம் வானில் பறந்து சென்றுக்கொண்டிருந்த அரக்கன் ஒருவன் அவளது அழகை கண்டு மயங்கிப்போனான்.

அவளை அடைய விரும்பிய அந்த அரக்கன், தூங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் தூக்கிக்கொண்டு சென்று விட்டான்.

இதை தெரியாத அவளது கணவனோ, காலையில் தன்னருகே இல்லாததைக்கண்டு அதிர்ச்சியுற்றான்.

பின்னர் வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தேட அவள் கிடைக்கவில்லை.

இதனால் மனம் நொந்துப்போனவன், ஊர் ஊராக அவளை தேடத்தொடங்கினான். அவ்வாறு தேடிக்கொண்டிருக்க பசியின் காரணமாக, ஒருவரது வீட்டில் உணவுக்கேட்டான்.

உணவு
உணவு

அவர்கள் இலையில் வைத்து சாப்பிடக்கூற, அவன் போகும் வழியில் சாப்பிடுவதாகக்கூறி, இலையில் கட்டிக்கொண்டு நடந்துச்சென்றான்.

நீண்ட தொலைவிற்கு தேடிய அவனால் ஒருகட்டத்தில் பசியை அடக்க முடியாமல், அருகில் இருந்த மரத்தின் அடியில் உட்காந்து சாப்பாட்டை பிரித்தான்.

அவனது கெட்ட நேரம், அந்த மரத்தில் இருந்த கழுகு, ஒரு நல்லபாம்பை கொத்திக்கொண்டு இருக்க, அதிலிருந்து பாம்பின் விஷமானது உணவில் விழுந்தது.

இதையறியாமல் அந்த உணவை உண்ட அவன் இறந்துபோனான் எனக்கூறி கதையை முடித்தது வேதாளம்.

பின்னர் விக்ரமாதித்யனை பார்த்து, மன்னா! இக்கதையில் அந்த வாலிபனை கொன்ற பாவம் யாரை சேரும்? எனக்கேட்டது.

விக்ரமாதித்யன், ஆழ்ந்து யோசித்து பதில் கூறத்தொடங்கினான்.

அந்த வாலிபனின் நிலை உண்மையில் கவலைக்குரியது தான். ஆனால், அவன் இறந்ததால், வரும் பாவமானது யாரையும் சேராது.

மனிதன்
மனிதன்

காரணம், யார் மீதும் குற்றமும் இல்லை, குற்றமும் சொல்ல இயலாது என்றான்.

விக்ரமாதித்யன் சொன்ன சரியான பதிலைக்கேட்டு, கட்டுகளில் இருந்து விடுபட்டு சென்று மயானத்தை அடைந்தது.

பின்னர், முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்க தொடங்கியது.

விக்ரமாதித்யன், தன்னுடைய விட முயற்சியால் வேதாளத்தை மீண்டும் பிடித்து கட்டி தூக்கிக்கொண்டு நடக்க தொடங்கினான்.

Post a Comment

0 Comments