வேதாளம், தனது இருபதாவது கதையை சொல்லத்தொடங்கியது. மீனாட்சிப்புறம் என்னும் ஊரை சுந்தரன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். நீதி தவறாமல் ஆட்சி புரிந்து வந்தான்.
அவனது நாட்டில் ஒரு பெரிய வணிக வியாபாரி ஒருவன் இருந்தான். அவனுக்கு மீனாட்சி என்று ஒரு அழகான பெண்ணும் இருந்தாள். மீனாட்சியை பார்த்த மன்னர், அவளை மணந்து கொள்ள விரும்பினான்.
இதனால் அவளது ஜாதகத்தை வாங்கி வந்து ஜோதிடர்கள் மூலமாக பொருத்தம் பார்த்தான். அதை பார்த்த ஜோதிடர்கள், மன்னா! உங்களுக்கும், மீனாட்சிக்கும் ஜாதகப்பொருத்தம் சரியாக இல்லை.
அவளை நீங்கள் மணந்துக்கொண்டால் உங்களுக்கு பல பிரச்சனைகள் வரும் என்றனர். இதனால் மன்னன் மீனாட்சியை, ஒரு அதிகாரியுடன் திருமணம் செய்து வைத்தான்.
திருமணம் |
அந்த அதிகாரியும், மீனாட்சியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இதைக்கண்ட மன்னன், மீனாட்சியை திருமணம் செய்யாமல் விட்டுவிட்டதை எண்ணி வருந்தினான்.
இதைக்கண்ட மீனாட்சியின் கணவன், மன்னனது மனக்குறையை போக்க வேண்டும் என எண்ணினான்.
அதனால் மீனாட்சியிடம் சென்று, மன்னனின் நிலையைக்கூறி, நீ மன்னனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறினான்.
இதைக்கேட்ட மீனாட்சி அதிர்ந்துபோனாள். கணவனின் பேச்சை மீற முடியாமல், என்ன செய்வது? என அறியாமல் திகைத்தாள்.
பின்னர்! மறுநாள், மன்னனை பார்க்க மிகவும் எளிமையான உடைகளை அணிந்துகொண்டு அரண்மனைக்கு சென்றாள்.
சற்றும் எதிர்பார்க்காத சமயத்தில், மீனாட்சியை அரண்மனையில் கண்ட மன்னன் அதிர்ச்சி அடைந்தான்.
அரண்மனை |
பின்னர், தான் நினைத்தது தவறு என அறிந்துக்கொண்ட மன்னன், மீனாட்சியிடம் மன்னிப்புக்கோரி பரிசுகள் கொடுத்து வழியனுப்பி வைத்தான்.
வீடு திரும்பிய மீனாட்சி நடந்ததை கணவனிடம் கூறினாள். சில நாட்களில் மன்னன் தூங்கிக்கொண்டு இருக்கும் பொழுதே, அவனது உயிரானது பிரிந்தது.
மீனாட்சியின் கணவன், தன் மனைவியை அடைய முடியவில்லை என்ற வருத்தத்தில் தான் மன்னன் இறந்தான் என வருந்தினான். அந்த வருத்தத்தில் அவனும் இறந்துபோனான் என வேதாளம் கதையை கூறி முடித்தது.
பின்னர் விக்ரமாதித்யனை பார்த்து, மன்னா! இக்கதையில் உண்மையில் போற்றுதலுக்குரியவர் யார்? எனக்கேட்டது. விக்ரமாதித்யனும் பதில் கூறத்தொடங்கினான்.
மன்னன் மீனாட்சியை விரும்பியதும், அவளை திருமணம் புரிந்து இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருக்கலாம் என எண்ணியது உண்மை தான்.
ஜோடி |
ஆனால், மீனாட்சியை எளிய உடையில் கண்டதும், தான் எண்ணியது தவறு என்பதை உணர்ந்து, அவளை போற்றி வழியனுப்பி வைத்தான். ஆகையால், மன்னன் தான் போற்றுதலுக்குரியவன், சிறந்தவன் என்றான்.
விக்ரமாதித்யன் சொன்ன சரியான பதிலைக்கேட்டு, மீண்டும் கட்டுகளில் இருந்து விடுபட்டு சென்று மயானத்தை அடைந்தது. பின்னர், முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்க தொடங்கியது.
விக்ரமாதித்யன், தன்னுடைய விட முயற்சியால் வேதாளத்தை மீண்டும் பிடித்து கட்டி தூக்கிக்கொண்டு நடக்க தொடங்கினான்.
0 Comments