Ticker

6/recent/ticker-posts

அழகிய வாலிபனும், முனிவரும் | விக்ரமாதித்தன் கதைகள்

இளைஞன்
இளைஞன்

வேதாளம், தனது இருபத்திரண்டாவது கதையை சொல்லத்தொடங்கியது.

ஒரு மாபெரும் நகரில், பிராமணர்கள் வசிக்கும் ஒரு பகுதியில் அருட்சீலன் என்னும் ஒரு பிராமணன் இருந்தான்.

அவனுக்கு அழகும், அறிவும் ஒருங்கேப்பெற்ற ஒரு மகன் இருந்தான்.

அவனுக்கு கலைகள் மீது இருந்த அன்பால், அனைத்துக் கலைகளையும் கற்று கைத்தேர்ந்தான்.

அவன் அனைத்துக் கலைகளையும் கற்று இருந்தாலும் கூட, ஆணவம் என்பது சிறிதும் இல்லாமல் இருந்தான்.

பெரியோர்களையும், பெற்றோர்களையும் மதிக்கும் தன்மைக்கொண்டவன்.

அனைவரும் அவனது நல்லக்குணத்தை கண்டு, அவனை பெரிதும் பாராட்டி வந்தனர்.

குணமிக்கவன்
குணமிக்கவன்

அவ்வாறு இருக்க, காரணம் ஏதுமின்றி திடீரென இறந்துப்போனான். அவன் இறந்ததை எண்ணி அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

மிகுந்த கவலையில் இருந்த அவர்கள் மயானத்திற்கு கொண்டு சென்று, கட்டைகளை அடுக்கி வைத்து அவனை அதில் படுக்க வைத்து, தீ மூட்ட தயார் செய்தனர்.

அப்பொழுது, அங்கிருந்து சிறிது தொலைவில் ஒரு முனிவர், சிதையில் படுக்க வைத்த, அவனது கள்ளமற்ற முகத்தை பார்த்து, கவலைக்கொண்டார்.

பின்னர், தன்னுடைய கூடு விட்டு கூடு பாயும் சக்தியைக்கொண்டு, முனிவரின் உடல் விட்டு, அந்த வாலிபனின் உடலில் புகுந்தார்.

இறந்த வாலிபன், தூங்கி எழுவதைப்போல எழுந்தான். இதை பார்த்து ஆச்சரியப்பட்டவர்கள், வாலிபனின் உடலில் இருந்த முனிவரை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

வீடு
வீடு

அப்பொழுது அவனை பார்த்த அவனது பெற்றோர் கட்டியணைத்து அழுதனர்.

அப்பொழுது, வாலிபனின் உடலில் இருந்த முனிவர் முதலில் அழுதார். பின்னர் சிரிக்க தொடங்கினர்.

பின்னர் வாலிபனின் பெற்றோர் மகன் வந்த சந்தோஷத்தில், உணவுகள் தயாரிக்க சென்றனர் என வேதாளம் கதையை முடித்தது.

பின்னர் விக்ரமாதித்யனை பார்த்து, மன்னா! இக்கதையில் வாலிபனின் உடலில் இருந்த முனிவர் முதலில் ஏன் அழுதார்? பின் எதற்காக சிரித்தார்? எனக்கூறு என்றது.

விக்ரமாதித்யன் பதில் கூறத்தொடங்கினான்.

வாலிபனின் உடலில் இருந்த முனிவர், தன்னுடைய தேகத்தை விடுத்து, தற்பொழுது பந்தபாசம் நிறைந்த உடலில் வந்ததை எண்ணி முதலில் அழுதார்.

அழுகை
அழுகை

பின்னர், தன்னுடைய முதுமையான உடலைவிட்டு இளவயதை கொண்ட உடலில் புகுந்ததை எண்ணி சிரித்தார் என்றான்.

விக்ரமாதித்யன் சொன்ன சரியான பதிலைக்கேட்டு, மீண்டும் கட்டுகளில் இருந்து விடுபட்டு சென்று மயானத்தை அடைந்தது.

பின்னர், முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்க தொடங்கியது.

விக்ரமாதித்யன், தன்னுடைய விட முயற்சியால் வேதாளத்தை மீண்டும் பிடித்து கட்டி தூக்கிக்கொண்டு நடக்க தொடங்கினான்.

Post a Comment

0 Comments