திருக்கோவில் |
வேதாளம், விக்ரமாதித்தனிடம் தன்னுடைய பூர்வ ஜென்மக்கதையை கூறத்தொடங்கியது.
மன்னா! நான் ஒரு பிராமண குலத்தை சார்ந்தவன். எனது பெயர் களத்தியையன்.
நான் சோழவள நாட்டில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தேன்.
தினந்தோறும் ஈசனுக்கும், ஈஸ்வரிக்கும் தொண்டு செய்து வாழ்ந்து வந்தேன்.
ஒருநாள் நள்ளிரவில் பூஜைகள் அனைத்தையும் முடித்து விட்டு கோவில் கதவுகளை அடைத்து விட்டு வெளியில் வந்தேன்.
பின்னர் தான் பிரசாதங்களை மறந்து நடையை சாத்திவிட்டோம் என்று, விதிகளை மறந்து பூட்டிய கதவுகளை திறந்தேன்.
பின்னர், கருவறைக்கு அருகில் செல்லும் பொழுது, கருவறையில் இருந்து ஏதோ ஒரு பேச்சுக்குரல் கேட்டது.
பேச்சுக்குரல் |
கருவறையின் சாவித்துவாரத்தின் வழியாக பார்த்தேன். கருவறையில் இருந்த பரமசிவனும், பார்வதியும் தாயும் பேசிக்கொண்டு இருந்தனர்.
நான் உன்னிடம் கேட்ட கதைகளை, பரமசிவன் பார்வதியிடம் கேட்டுக்கொண்டு இருந்தார்.
பார்வதி தாயிடம் பதில்கள் கேட்க, பதில் கூற முடியாமல் தவித்தாள்.
இதைக்கண்ட நான் வெளியில் இருந்து சப்தம் கொடுத்தேன். எனது சப்தத்தை கேட்ட, பார்வதியும் பரமசிவனும் சிலைகளாக மாறிப்போயினர்.
பின்னர் பிரசாதங்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.
நீண்ட நேரமாக என்னை காணாததால், என்னுடைய மனைவி கவலையுடன், என் இவ்வளவு தாமதம் என்று என்னிடம் கேட்டனர்.
நானும் நடந்தது அனைத்தையும், என்னுடைய மனைவியிடம் கூற, அவள் கவலைக்கொள்ளாதீர்கள்.
நான் பதில்களை உங்களிடம் கூறுகிறேன், நீங்கள் பார்வதி தாயிடம் கூறுங்கள் என்றாள்.
என்னுடைய மனைவிக்குரிய அனைத்து பதில்களையும், மறுநாள் பார்வதி தாயிடம் பூஜை செய்யும் பொழுது நான் கூறினேன்.
சிவன்,பார்வதி |
கடைசி கதைக்கான பதில் மட்டும் எங்களால் கூற முடியவில்லை.
நள்ளிரவு பூஜை முடித்த பின்னர், பார்வதி தாய் பதில் கூறுவதை கேட்க காத்திருந்தேன்.
ஆனால், அங்கு நடந்தது வேறு, நான் பார்வதி தாயிடம் கூறியதனைத்தையும் பரமசிவனும் கேட்டுள்ளார்.
இதனால் கோபம் கொண்ட கதவுகளை திறக்க செய்தார். கதவுக்கு பின்னால் இருந்த என்னை பார்த்து, நான் கூறிய கதைகள் உன்னால் உனது மனைவி தெரிந்துக்கொண்டாள்.
ஒரு பெண்ணுக்கு தெரிந்தால், உலகிற்கே தெரிந்ததுப்போல ஆகிவிட்டது. இக்கதைகள் உலகமறிய செய்த நீ வேதாளமாக கடவாய் என்று சாபம் கொடுத்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத நான், ஈசனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன். பார்வதி தாய் எனக்காக ஈசனிடம் பரிந்துரைக்க, ஈசனும் மனம் மாறினார்.
பின்னர் என்னிடம், இந்த மயானத்தில் உள்ள முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்க வேண்டும்.
முருங்கை |
கொடிய குணம் கொண்ட மந்திரவாதி ஒருவன் காளிதேவிக்கு முன்னால் யாகம் செய்வான்.
அந்த மந்திரவாதிக்கு துணையாக விக்ரமாதித்யன் என்னும் மன்னன் ஒருவன், உன்னை பிடிக்க வருவான். அவனிடம் நான் கேட்ட கேள்விகளை கேள்.
நான் சொன்ன இருபத்திநான்கு கேள்விகளையும் அவனிடம் கேள். இருபத்திமூன்று கேள்விகளுக்கு பதிலளிப்பான். இறுதி கதைக்கு பதிலளிக்க முடியாமல் தவிப்பான்.
இதன் மூலமாக விக்ரமாதித்யனை அடையாளம் கண்டுக்கொண்டு, அந்த மந்திரவாதியின் தலையை வெட்டி யாககுண்டத்தில் போட சொல்.
பின்னர், 2000 ஆண்டுகள் அடிமையாக இருந்து, பின்னர் மோட்சம் பெறுவாய் என்று அருள் பாலித்தார்.
எம்பெருமான் எதோ ஒரு நல்ல விஷயத்திற்காக என்னிடம் திருவிளையாடல் புரிந்துள்ளார் என்று உணர்தேன்.
இவ்வாறு வேதாளம் தன்னுடைய கதையை கூறி முடித்தது.
இதைக்கேட்ட விக்ரமாதித்யன், முனிவர் வேடத்தில் வந்துள்ள, அந்த கொடிய மந்திரவாதிக்கு தக்க பாடம் புகட்டலாம் என்று கூறினான்.
மந்திரவாதி |
ஆனால், அதை எவ்வாறு புரிவது என்று வேதாளத்தை கேட்டான்.
வேதாளம், மன்னா! குளத்தில் நீராடி, பின்னர் யாககுண்டத்தை மூன்று முறை வலம் வந்து யாககுண்டத்தின் முன்னால் தலைவணங்கி நிற்க வேண்டும்.
அதன் பின்னரே! மந்திரவாதி உங்களது தலையை வெட்டி யாகத்தை பூர்த்தி செய்வான்.
ஆனால், எவ்வாறாவது நீங்கள் அவனது தலையை வெட்டி யாகத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யாவிடில், நான் அவனுக்கு அடிமையாக மாறிவிடுவேன். அதன் பின்னர், இந்த உலகத்தை அவனது விரும்பம்படி மாற்றிவிடுவான்.
உலகத்திற்கு பெரும் கேடானது நிகழும் என்று வேதாளம் கூறி முடித்தது.
அதற்கு விக்ரமாதித்யன், எவ்வாறாவது நான் நீ கூறியப்படி செய்து முடிப்பேன் என்று கூறினான்.
இவ்வாறாக, விக்ரமாதித்யன் வேதாளத்துடன் யாகம் நடக்கும் இடத்தை நெருங்கினான்.
தொடரும்...
0 Comments