விக்ரமாதித்தன் கதைகள் |
Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 23
வேதாளம், விக்ரமாதித்தனை பார்த்து தன்னுடைய பதினேழாவது கதையை கூறத்தொடங்கியது. மகேந்திரபுரி என்னும் நாட்டை மகேந்திரன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.
மகேந்திரன், மக்களின் நன்மையை கருதி எவ்விதமான முடிவையும் தானே எடுக்கும் வல்லமைக்கொண்டவன். இதனால் அவனது நாட்டு மக்கள் செல்வ, செழிப்புடன் வாழ்ந்து வந்தனர்.
அவனுடைய நாட்டில் செல்வசீலன் என்னும் மிகப்பெரிய செல்வந்தனும் இருந்தான். அவனுக்கு அழகே வடிவான வேதவள்ளி என்னும் பெண்ணும் இருந்தான்.
அவளுக்கு திருமணம் செய்ய விரும்பிய செல்வசீலன் வரன் பார்க்க தொடங்கினான். ஆனால் வேதவள்ளி, திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தாள்.
திருமணம் |
இதனால் செல்வசீலன் கவலையுற்றான். தன்னுடைய மகளின் மனத்துக்கேற்ற மணமகன் எப்பொழுது கிடைப்பான் என்று எண்ணிக்கொண்டு இருந்தான்.
அவனது நாட்டின் செல்வ, செழிப்பை கண்ட கள்வர்கள், அவனது நாட்டில் கொள்ளையடிக்க தொடங்கினார்கள்.
இந்த செய்தியை அறிந்த மன்னன், அவர்களை பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டான்.
ஆனால், அந்த கள்வர்கள் மன்னனிடம் சிக்கவில்லை. இறுதியாக, மன்னன் நேரடியாக கள்வர்களை பிடிக்க காளத்தில் இறங்கினான்.
மன்னன், இரவில் மாறுவேடத்தில் ஊரை சுற்றிவர கள்வர்கள் தலைவன் வழிமறித்தான்.
மன்னன், யார் நீ? எதற்காக வழிமறிக்கின்றாய்? எனக்கேட்டான். அதற்கு அந்த கள்வனின் தலைவன், நான் காளிதேவியின் புதல்வன் உன்னிடம் உள்ளதை என்னிடம் கொடு என்றான்.
மன்னனை சுற்றிலும் திருடர்கள் பதுங்கி இருப்பதை கண்ட மன்னன், திட்டம் ஒன்றை திட்டினான்.
திருடன் |
தனது வேடத்தை கலைந்த மன்னன், திருடனின் தலைவனிடம் நான் இந்நாட்டின் மன்னன், மாறுவேடத்தில் நகர்வலம் வந்தேன்.
உனது திறமையை கண்டு வியக்கிறேன். என்னுடைய அரண்மனையில் பாதுகாப்பு அதிகாரியாக உன்னை நியமிக்க விரும்புகிறேன்.
நீ அவ்வாறு விரும்பினால், நாட்டின் பாதுகாப்பு சிறப்பாக இருக்கும் என்று கூறினான்.
இதை கேட்ட திருடன், கள்வனின் தலைவன் மன்னனின் கஜானாவை கொள்ளையடிக்க, ஒரு திட்டம் ஒன்றை தீட்டினான்.
ஆகையால், திருடனும் மன்னன் கூறியதைக்கேட்டு சம்மதம் தெரிவித்தான். மன்னனும் அரசவையில் பதவியை வழங்கினான்.
மன்னன், கள்வனின் தலைவனுக்கு தெரியாமல் பாதுகாப்பு அதிகாரிகளிடம் நடந்ததைக்கூறினான்.
அவர்களும் திருடனின் தலைவனுக்கு தெரியாமல் கண்காணித்து வந்தனர்.
கண்காணித்தல் |
திருடனின் தலைவனும், தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்தான்.
ஒருநாள் திட்டம் ஒன்றை தீட்டி கஜானனவை கொள்ளையடிக்க முடிவும் செய்தான்.
திருடனின் தலைவனை கண்காணித்த வீரர்கள் மன்னனிடம் விஷயத்தை கூறினார்கள்.
காத்திருந்த மன்னன், திருடனின் தலைவனையும், அவனது கூட்டத்தையும் பிடித்தான்.
மக்களிடம் திருடனையும், அவனது கூட்டத்தையும் பிடித்துவிட்டேன் என்றும், அனைவருக்கும் மரணதண்டனை விதிப்பதாகவும் கட்டளையிட்டான்.
திருடர்களை மரணதண்டனை விதிக்கும் இடத்திற்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.
அப்பொழுது கள்வனின் தலைவனை பார்த்த வேதவள்ளி, அவன் மீது காதல் கொண்டாள்.
காதல் |
திருமணம் செய்தால் அவனை தான் திருமணம் செய்வேன் என்று தன்னுடைய பெற்றோர்களிடம் கூறினாள்.
இதைக்கேட்ட அவளது பெற்றோர் மன்னனிடம் சென்று எவ்வளவு பொற்காசுகள் வேண்டுமானாலும், தருகிறேன்.
கள்வனின் திருடனை மட்டும் விடுதலை செய்யுங்கள் என முறையிட்டான்.
மன்னனும் தண்டனையை நிறுத்திவைக்க ஆணையிட்டு தண்டனை நிறைவேறும் இடத்திற்கு புறப்பட்டு சென்றான்.
பின்னர் ஊர் மக்களுக்கு வேதவள்ளி பற்றிய செய்தியானது காட்டு தீப்போல பரவியது. இதையறிந்த கள்வனின் தலைவன் சிரித்தான்.
மன்னன் மரணதண்டனை விதிக்கும் இடத்திற்கு வந்து சேர்த்தான்.
தண்டனை நிறைவேறாது என்ற எண்ணத்தில் வேதவள்ளியும் அங்கு வந்து நின்றாள்.
ஆனால், மன்னன் தண்டனையை நிறைவேற்ற கட்டளையிட்டான்.
வேதவள்ளி கள்வனின் தலைவனுக்கு மரணதண்டனை அளிக்கப்படுவதை எண்ணி பெரும் கவலையுற்றாள்.
மரணதண்டனை |
கள்வனின் தலைவன், வேதவள்ளியை பார்த்து முதலில் சிரித்தான். பின்னர் அழுதான். மரணதண்டனையும் நிறைவேற்றப்பட்டது.
கள்வனின் தலைவன் இறந்ததை எண்ணி, வேதவள்ளி இறப்பதற்கு முடிவு எடுத்து பெரும் தீ ஒன்றை மூட்டினாள். இதையறிந்த ஊர் மக்கள் ஒன்றுகூடினார்கள்.
அவள் இறைவன், இறைவியை வேண்டி தீயில் இறங்க முற்பட்டாள். அப்பொழுது பரமசிவனும், பார்வதியும் தோன்றி அவளை தடுத்தனர்.
பின்னர் , அவளுக்காக மறுபடியும் கள்வனின் தலைவனுக்கு உயிர்கொடுத்து வேதவள்ளிக்கு திருமணம் செய்துவைத்து மறைந்து போயினர்.
இதையறிந்த மன்னன், கள்வனின் தலைவனுக்கு அரசவையில் பதவி ஒன்றை அளித்தான்.
கள்வனின் தலைவனும் மனதிருந்தி வேதவள்ளியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தான் எனக்கூறி வேதாளம் கதையை முடித்தது.
பின்னர் விக்ரமாதித்யனை பார்த்து, இக்கதையில் கள்வனின் தலைவன் மரணதண்டனையின் பொழுது, வேதவள்ளியை பார்த்து முதலில் சிரிக்கவும், பின்னர் அழவும் காரணம் என்ன? எனக்கேட்டது.
மனிதன் |
விக்ரமாதித்யனும் பதில் கூறத்தொடங்கினான்.
தான் ஒரு திருடன் எனத்தெரிந்தும், இறக்கப்போகிறேன் எனத்தெரிந்தும் வேதவள்ளி தன்னை மணக்க நினைப்பதை எண்ணி முதலில் சிரித்தான்.
பின்னர், தன்மீது இவ்வளவு காதல் கொண்ட பெண்ணை மணக்க முடியவில்லை என்றும், என்னால் அவளும், அவளால் அவளுடைய பெற்றோர்களும் கவலையடைந்ததை எண்ணி அழுதான் என்றான்.
விக்ரமாதித்யன் சொன்ன சரியான பதிலைக்கேட்டு, கட்டுகளில் இருந்து விடுபட்டு சென்று மயானத்தை அடைந்தது.
பின்னர், முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்க தொடங்கியது.
விக்ரமாதித்யன், தன்னுடைய விட முயற்சியால் வேதாளத்தை மீண்டும் பிடித்து கட்டி தூக்கிக்கொண்டு நடக்க தொடங்கினான்.
0 Comments