Ticker

6/recent/ticker-posts

மன்னனும், தாசிப்பெண்ணும் | விக்ரமாதித்தன் கதைகள்

அழகிய பெண் (Beautiful girl)
அழகிய பெண் (Beautiful girl)

வேதாளம், தனது இருபத்திமூன்றாவது கதையை சொல்லத்தொடங்கியது.

வெந்தையகிரி என்னும் நாட்டை விக்ரமசிங்கன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.

அவன் இயற்கையின் மீது அதீத ஆர்வம் கொண்டவன். அவனுக்கு பசுமையான இடங்களுக்கு தனியாக சென்று அழகை ரசிப்பது மிகவும் பிடிக்கும்.

அவ்வாறு, ஒருநாள் ஒரு அடர்ந்த காட்டின் அழகை ரசித்துக்கொண்டே நீண்ட தூரம் சென்றான்.

அந்த காட்டின் நடுவே அழகான ஒரு மண்டபத்தில், பேரழகு கொண்ட பெண் ஒருத்தி அமைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தான்.

அவளது அழகைக்கொண்டு மயங்கிய மன்னன், அவளை நெருங்கி தான் மன்னன் என்றும், தன்னை மணந்துக்கொள்ள விருப்பம் உண்டா? என்றும், அந்த பெண்ணிடம் கேட்டான்.

மன்னனின் வசீகரத்திற்கு மயங்கிய அவளும், ராஜவாழ்க்கை கிடைக்கும் என்று சம்மதம் தெரிவித்தாள்.

இராஜவாழ்க்கை
இராஜவாழ்க்கை

பின்னர் மன்னன் அவளிடம் பெயரைக்கேட்க அவள் அவந்திகா என்பது தன்னுடைய பெயர் என்றுக்கூறினாள்.

இருவரும் பேசிக்கொண்டே அரண்மனையை நோக்கி காட்டில் நடந்துக்கொண்டு இருக்க, அப்பொழுது திருடர்கள் அவர்களை வழிமறித்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத மன்னன், தான் கற்ற போர்க்கலைகளால் அவர்களை அடித்து விரட்டினான்.

பின்னர் காட்டின் எல்லையில் இருந்த கோவிலில், அவளை தங்கவைத்து விட்டு, சாப்பிட உணவுக்கொண்டு வருவதாக கூறி விட்டு சென்றான்.

மன்னன் நகரை நோக்கி செல்லும் பொழுது வழியில் ஒரு தாசியை கண்டான்.

தாசி மன்னனின் அழகைக்கண்டு, தன்னுடைய பேச்சால் மயக்கி வீட்டிற்கு அழைத்து சென்றாள்.

மன்னனும், அவளது அழகில் மயங்கி கோவிலில் அவந்திகாவை விட்டுவந்ததை மறந்துப்போனான்.

கோவில்
கோவில்

அவந்திகா மன்னன் வருவான் என எண்ணி அங்கேயே காத்திருந்தாள். நீண்டநேரம் ஆகியும் மன்னன் வரத்தைக்கண்டு கவலை அடைந்தாள்.

அப்பொழுது, அங்கு வந்த ஒரு வியாபாரி, அவந்திகாவின் அழகைக்கண்டு மயங்கிப்போனான்.

பின்னர், அவந்திகாவிற்கு உண்ண உணவளித்து, பின்னர் தன்னுடன் வர வேண்டினான்.

அதற்கு அவந்திகா மறுப்பு தெரிவிக்க அவன் எவ்வாறாவது அவந்திகா மனதை மாற்ற வேண்டும் என்று அங்கேயே காத்திருந்தான்.

இரண்டு நாட்கள் கடந்தும் மன்னன் வராததை எண்ணி பெரும் கவலைக்கொண்டாள்.

அப்பொழுது, அந்த வியாபாரி வைத்திருந்த பொருட்களை ஒரு எலியானது கடிக்க, அந்த வியாபாரி அந்த எலியை அடித்துக்கொன்றான்.

பின்னர் அவந்திகாவிடம், எலியை கொன்றதை எண்ணி பெருமையாக பேசினான்.

எலி
எலி

இதைக்கேட்ட அவந்திகா, மன்னன் திருடர்களை அடித்து விரட்டியதை விட இவன் செய்தது சாதனையா என எண்ணி சிரித்தாள்.

பின்னர் மன்னன் வராததை எண்ணி கவலைக்கொண்ட அவள், அருகில் இருந்த கிணற்றில் விழுந்து இறந்துப்போனாள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத வியாபாரி, அவந்திகா இறந்ததை தாங்கிக்கொள்ள இயலாமல், தான் வைத்திருந்த பொருட்களை எல்லாம் தானம் செய்துவிட்டு அதே கிணற்றில் விழுந்து இறந்துப்போனான்.

அவந்திகாவை முற்றும் மறந்த மன்னன், இரு மாதங்களுக்கு பிறகு அவந்திகா பற்றி நினைவிற்கு வர, அவளை தேடியலைந்தான்.

பின்னர் ஒருசிலர், கிணற்றில் விழுந்து ஒரு பெண் இறந்ததைக்கூற, கவலையடைந்த மன்னன். அதே கிணற்றில் விழுந்து இறந்துப்போனான்.

குதித்தல்
குதித்தல்

மன்னன் இறந்ததை கேள்விப்பட்ட தாசிப்பெண், ஓரிரு மாதங்கள் மன்னனுடன் வாழ்ந்ததை எண்ணி, மன்னன் இல்லாமல் உயிர் வாழக்கூடாது என்று தற்கொலை செய்துக்கொண்டாள் என வேதாளம் கதையை முடித்தது.

பின்னர், விக்ரமாதித்யனை பார்த்து, மன்னா! இக்கதையில் யார் போற்றுதலுக்குரியவர்? எனக்கேட்டது.

விக்ரமாதித்யனும் பதில் கூறத்தொடங்கினான்.

மன்னன், அவந்திகா மற்றும் வியாபாரி மூவரும், ஒருவருடன் ஒருவர் தொடர்புடையவர்கள்.

அவர்கள் உயிர் விடுவது என்பது அவர்களது வாழ்க்கையையும், வளர்ந்த விதத்தையும் எண்ணிப்பார்த்தால் பெரியதல்ல.

ஆனால், தன்னுடன் ஓரிரு மாதங்கள் வாழ்ந்த மன்னனை எண்ணி, உயிர்விட்ட தாசிப்பெண்ணே சிறந்தவள்.

அழகிய பெண்
அழகிய பெண்

அவளது வாழ்க்கையில் அவள் செய்ததே போற்றுதலுக்குரியது என்றான்.

விக்ரமாதித்யனும் பதில் கூறத்தொடங்கினான்.

விக்ரமாதித்யன் சொன்ன சரியான பதிலைக்கேட்டு, மீண்டும் கட்டுகளில் இருந்து விடுபட்டு சென்று மயானத்தை அடைந்தது.

பின்னர், முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்க தொடங்கியது.

விக்ரமாதித்யன், தன்னுடைய விட முயற்சியால் வேதாளத்தை மீண்டும் பிடித்து கட்டி தூக்கிக்கொண்டு நடக்க தொடங்கினான்.

Post a Comment

0 Comments