காளி தேவி |
கதையின் தொடர்ச்சி,
விக்ரமாதித்யன் வேதாளத்துடன் யாகம் நடக்கும் இடத்தை நெருங்கினான்.
விக்ரமாதித்யன் வேதாளத்துடன் வருவதைக்கண்ட மந்திரவாதி ஆனந்தத்தில் குதித்தான்.
விக்ரமாதித்யன், யாககுண்டத்தின் முன்னால் வேதாளத்தை கிடத்தினான்.
பின்னர், முனிவரின் உருவில் இருந்த மந்திரவாதியை பார்த்து, முனிவரே! நான் யாகத்திற்கு வேறு ஏதேனும் உதவி புரிய வேண்டுமா? என்று பணிவுடன் கேட்டான்.
அதைக்கேட்ட மந்திரவாதி, மன்னா! முதலில் பக்கத்தில் உள்ள கோவில் குளத்தில் நீராடி வாருங்கள். மீதத்தை பின்னர் கூறுகிறேன் என்றான்.
அதன்படியே, விக்ரமாதித்யன் கோவில் குளத்தில் நீராடி வந்தான்.
விக்ரமாதித்யனை பார்த்த மந்திரவாதி, மன்னா! யாககுண்டத்தை மூன்று முறை வலம் வந்து, தலைகுனிந்து வணங்குங்கள் என்றான்.
இதைக்கேட்ட விக்ரமாதித்யன், முனிவரே! நான் மன்னன் என்பதால் பல ஆண்டுகளாக தலைவணங்கி யாரையும் வணங்கியதில்லை.
அதுமட்டுமல்லாமல், இதுபோல் ஒரு யாகத்தில் பங்குக்கொண்டதும் இல்லை.
யாக தீ |
நான் ஏதேனும் தவறு இழைத்துவிடுவேன் என்ற அச்சமானது என்னுடைய மனதில் தோன்றுகிறது.
ஆகையால், நீங்கள் ஒருமுறை எவ்வாறு செய்ய வேண்டும் என்று செய்துக்காட்டுங்கள் என்றான்.
இதைக்கேட்ட முனிவரின் உருவில் இருந்த மந்திரவாதி, யாகத்தை மூன்று முறை வலம்வந்து, தலைகுனிந்து வணங்கினான்.
தக்கசமயத்திற்காக காத்திருந்த விக்ரமாதித்யனும், தனது உடைவாளை எடுத்து மந்திரவாதியின் தலையை வெட்டி, யாககுண்டத்தில் போட்டான்.
மந்திரவாதியின் தலையானது, யாககுண்டத்தில் விழுந்த மறுகணம், காளிதேவி தோன்றினாள்.
மகனே விக்ரமாதித்யா! உனது திறமையை கண்டு மகிழ்ந்தேன். இந்த கொடிய மந்திரவாதியை எனக்கு நீ பலிகொடுத்த காரணத்தால், இதுவரை இவன் எனக்கு பலிகொடுத்த 999 மன்னர்களால் வேதாளம் இன்று முதல் உனக்கு அடிமை.
கவசம் |
உனக்கு வேண்டிய வரத்தினை கேள் என்றாள். விக்ரமாதித்யன், தாயே! உனது அருளே! எனக்கு பெரும் வரம்.
இந்த கொடிய மந்திரவாதியால், இறந்த 999 மன்னர்களின் உயிர் பெற்று எழவேண்டும்.
பின்னர், நீ குடிகொண்டுள்ள இந்த நாட்டில் மும்மாரி பொழிய வேண்டும். எப்பொழுதும் வல்லமையுடன் இருக்க வேண்டும் என வேண்டினான்.
விக்ரமாதித்யா! நீ கேட்ட வரத்தை கொடுத்தருளினோம். இன்றுபோல் என்றும் வாழ்வாய் எனக்கூறி மறைந்தாள்.
பின்னர் விக்ரமாதித்யன் வேதாளத்திடம், வேதாளமே! எனக்கு ஒரு சந்தேகம், நீ இந்த உருவத்தில் இருக்கும் பட்சத்தில், உன்னை காணும் மக்கள் பயம் கொள்வார்கள்.
ஆகையால் மனித உருவத்திற்கு உன்னால் மாற இயலுமா? என்று கேட்டான்.
இதைக்கேட்ட வேதாளம், மன்னா! நான் உங்களை தவிர்த்து எவருக்கும் தெரியமாட்டேன் என்றது.
இருந்தாலும், இனிமேல் என்னுடைய சுய உருவத்திற்கு, அதாவது மனித உருவத்திற்கு மாறுகிறேன் என்று மாறியது.
மனிதன் |
இதை பார்த்து வியந்த விக்ரமாதித்யன், வேதாளமே! பெரும் மகிழ்ச்சிக்கொண்டேன்.
நீ எனக்கு மட்டுமல்லாமல், என்னுடைய தம்பியன பாட்டிக்கும் தெரியவேண்டும் என்றான்.
வேதாளமும், அப்படியே ஆகட்டும் என்றது. பின்னர், விக்ரமாதித்யனும், வேதாளமும் அரண்மனைக்கு புறப்பட்டு சென்றனர்.
விக்ரமாதித்யனை கண்ட பட்டி, மகிழ்ச்சியில் திளைத்தான். விக்ரமாதித்யன், அதுவரை நடந்த அனைத்தையும் பட்டியிடம் கூறினான்.
பின்னர், பட்டிக்கு வேதாளத்தை அறிமுகப்படுத்தினான் என்று ஐந்தாவது புதுமையானது வேதாளம் கூறிய கதைகளை போஜராஜனிடம் கூறி முடித்தது.
இதைக்கேட்ட போஜராஜன், விக்ரமாதித்யனின் அறிவை கண்டு வியந்துப்போனான்.
பின்னர் பதுமையை பார்த்து, பதுமையே! விக்ரமாதித்ய மாமன்னர், மிகசிறந்த புத்திமான் மட்டுமல்ல, நீதிமானும் கூட. அவர் கூறிய பதில்களே அதற்கு சாட்சி என்றான்.
0 Comments