Ticker

6/recent/ticker-posts

மாய கம்பளமும், மந்திர வாளும் | விக்ரமாதித்தன் கதைகள்

மந்திர கம்பளம் (Magical carpet)
மந்திர கம்பளம் (Magical carpet)

போஜராஜன், பேராவலுடன் சிம்மாசனத்தில் அமர முயற்சிக்கும் பொழுது ஆறாவது பதுமையானது, போஜராஜனை தடுத்து விக்ரமாதித்யனை பற்றி கூறத்தொடங்கியது.

மன்னா! எமது மன்னனின் துணிகரமான செயலை தெரிந்துக்கொள் என்று கதையை கூறத்தொடங்கியது.

மன்னர் விக்ரமாதித்யன், பட்டி மற்றும் வேதாளத்தின் உதவியுடன் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தான்.

அவனது நாட்டில் வாழ்ந்த பிராமணன் ஒருவன், தன்னுடைய மகனுக்கு அனைத்துக்கலைகளையும் கற்று தர விரும்பினான்.

நீண்ட காலங்கள் குழந்தை இல்லாமல் பிறந்த குழந்தை என அவன் மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருந்தான்.

ஒருநாள் கடலுக்கு அழைத்து சென்று, கலைகள் கற்று தர தொடங்கினான். அப்பொழுது மிகப்பெரிய சுறாமீன், அவனது மகனை விழுங்கியது.

சுறாமீன்
சுறாமீன்

இதைக்கண்ட பிராமணன், அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்தான்.

பின்னர், அரண்மனைக்கு சென்று ஆராய்ச்சி மணியை அடிக்க தொடங்கினான்.

மணி அடிக்கும் சப்தம் கேட்ட விக்ரமாதித்யன், பட்டியிடம் அவ்விடம் சென்று விசாரிக்க கூறினான்.

பட்டியும், பிராமணனை அழைத்து விசாரிக்க நடந்தது அனைத்தையும் கூறினான்.

பின்னர், விக்ரமாதித்யன் ஆட்சியில் தவறு உள்ளது. அதனால் தான் இவ்வாறு நடந்தது எனக்குறை கூறினான்.

பட்டி அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டு, விக்ரமாதித்யனிடம் சென்று கூறினான்.

கவலைக்கொண்ட விக்ரமாதித்யன், அன்றுடன் நாடாறு மாதங்கள் முடிவடைந்ததால், பட்டியிடம் ஆட்சிப்பொறுப்பை கொடுத்துவிட்டு காளி கோவிலுக்கு சென்றான்.

காளிதேவியை வணங்கி, கடலுக்கு சென்றான். பின்னர் வேதாளத்தை மந்திர கம்பளமாக மாற செய்து, அதன் மீது ஏறி கடலை வேதாளத்தின் உதவியால் கலங்க செய்தான்.

கடல்
கடல்

அப்பொழுது, அந்த சிறுவனை விழுங்கிய சுறா மீனானது வெளிவந்தது.

விக்ரமாதித்யன், வேதாளத்தை மந்திரவாளாக மாற்றி சுறாவை கொல்ல முயலும் நேரத்தில் சுறா விக்ரமாதித்யனை விழுங்கியது.

அப்பொழுது சுறாவின் வயிற்றில், அந்த சிறுவன் உயிருடன் இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்தான்.

பின்னர், மந்திரவாளால் சுறாவின் வயிற்றை கிழித்துக்கொண்டு வெளியில் வந்தான்.

பின்னர், மீண்டும் வேதாளத்தை மந்திர கம்பளமாக மாற்றி, அந்த சிறுவனும், விக்ரமாதித்யனும் அருகில் இருந்த தீவை அடைந்தனர்.

அந்த சிறுவனை, ஒரு ஆசிரமத்தில் விட்டு அனைத்து கலைகளையும் கற்று தர வேண்டினான்.

வந்திருப்பது விக்ரமாதித்யன் என்று உணர்ந்த முனிவரும், அந்த சீறுவனை சீடனாக ஏற்றார்.

அந்த தீவை ஆண்டு வந்த மன்னனுக்கு நீண்ட காலம் குழந்தை இல்லாமல், பின்னர் பேரழகு கொண்ட பெண் ஒருத்தி பிறந்தாள்.

பெண்குழந்தை
பெண்குழந்தை

அவளுக்கு இன்று 56 தேசங்களில் இருந்தும் பெண் கேட்டு வந்துள்ளனர் என்பதை அறிந்துக்கொண்டு சுயம்வரத்தில் கலந்துக்கொள்ள விரும்பினான்.

நேரடியாக மன்னன் ஆக செல்லாமல், வேதாளத்தின் உதவியால் இரத்தின வியாபாரியாக வேடம் தரித்து நகரை அடைந்தான்.

பின்னர், வேதாளத்தின் உதவியால், அரிய பல இரத்தினங்களை வரவைத்தான்.

விக்ரமாதித்யன் வைத்திருந்த இரத்தினங்களை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் வியந்துப்போயினர்.

பின்னர், 56 தேசங்களில் இருந்து வந்த இளவரசர்களும், விக்ரமாதித்யன் வைத்திருந்த இரத்தினங்களை வாங்க முயற்சித்தனர்.

இதையறிந்த அந்நாட்டு மன்னன், விக்ரமாதித்யன் என அறியாமல், இரத்தின வியாபாரி என நினைத்து அரண்மனைக்கு அழைத்தான்.

இரத்தினம்
இரத்தினம்

விக்ரமாதித்யனும் மன்னனுக்கு பல அரிய இரத்தினங்களை பரிசாக கொடுத்தான்.

மகிழ்ச்சிக்கொண்ட மன்னன், விக்ரமாதித்யனை சுயம்வரம் நடக்கும் இடத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைத்து சென்றான்.

சுயம்வரமும் நடைபெற்றது. இளவரசி கையில் மாலைக்கொடுத்து, விரும்பிய கணவரை தேர்ந்தெடுக்க மன்னன் கூறினான்.

இளவரசி அங்கிருந்த அனைவரையும் பார்த்தாள். பின்னர், இரத்தின வியாபாரி உருவில் இருந்த விக்ரமாதித்யனை பார்த்து மயங்கி அவனது கழுத்தில் மாலை சூட்டினாள்.

இதைக்கண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

தொடரும்...

Post a Comment

0 Comments