Ticker

6/recent/ticker-posts

மந்திரமும், முனிவரும் | பகுதி 19 | விக்ரமாதித்தன் கதைகள்

vedhalam kathaikal
விக்ரமாதித்தன் கதைகள்

Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 19

விக்ரமாதித்தனை பார்த்து, வேதாளம் தன்னுடைய பதிமூன்றாவது கதையை கூறத்தொடங்கியது. மச்சபுரம் என்னும் காட்டை ஒட்டி, ஒரு பாழடைந்த கோவில் ஒன்று இருந்தது.

அந்த ஊரை விட்டு அனைவரும் சென்றதால், அந்த கோவில் பராமரிப்பு இல்லாமல் போனது. எப்போதாவது வரும் வழிப்போக்கர்கள் மட்டும், அந்த கோவிலை சுத்தம் செய்து, இரவில் உறங்கி செல்வது என இருந்தனர்.

அந்த வழியே வந்த ஒரு வாலிபன், பசியால் துடிக்க, உணவு ஏதுமின்றி பசியுடன், அந்த கோவிலில் படுத்து இருந்தான்.

அச்சமயம், அவ்வழியாக வந்த ஒரு முனிவர், அந்த வாலிபனின் நிலையை கண்டு, அவனுக்காக அந்த கோவிலையொட்டி ஒரு ஊரையும், அவனுக்காக ஒரு பெண்ணையும் படைத்தான்.

நகரம்
நகரம்

அவனும், அந்த பெண் சமைத்து தரும் உணவை தினமும் உண்பதும், பின்னர் கோவிலில் தங்குவதுமாக இருந்து வந்தான். முனிவர், அந்த கோவிலில் தங்கி தியானத்தில் ஈடுபட்டு வந்தார்.

அந்த வாலிபன், முனிவரை அணுகி மந்திரங்களை கற்று தர வேண்டினான். முனிவரும், அவனுக்கு கற்று தர சம்மதம் தெரிவித்தார்.

அந்த வாலிபனுக்கு, முனிவர் மந்திரங்களை கூறி, மனதை ஒருநிலைப்படுத்தி ஆழ்மனதில் பதிய செய்யுமாறு அறிவுரை வழங்கினார்.

அவ்வாறு செய்தால் மட்டுமே, எப்பொழுதும் நினைவில் இருக்கும் என்றும் கூறினார். அந்த வாலிபனும் அவ்வாறு செய்ய பலமுயற்சிகள் செய்து வந்தான்.

முனிவர் கூறிய மந்திரங்களால், தனக்கு அழகிய மனைவி மற்றும் மகன் கிடைப்பான் என்றும், அவர்களுடன் அவன் வாழ்வதாகவும் நினைக்க தொடங்கினான்.

அவன் பல்வேறு வழிகளை மேற்கொண்டும், அவனால் மந்திரங்களை மனப்பாடம் செய்ய இயலவில்லை. இதனால் மனமுடைந்து, முனிவரிடம் சென்று முறையிட்டான்.

முனிவர், அந்த வாலிபனை பார்த்து, மகனே! நாம் செய்யும் தானங்களின் பயன் நமக்கு கிடைக்க வேண்டுமெனில், அதை முழுமனதுடன் தர வேண்டும்.

தானம்
தானம்

அவ்வாறு தரும் பட்சத்தில் மட்டுமே, அந்த தானத்தின் பயனானது, கொடுப்பவருக்கு கிடைக்கும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் கொடுத்தும் பயனில்லை.

அதுபோலவே, உனக்கு இவ்வாறு ஆக என்ன காரணம் என யோசி என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றார் எனக்கதையை முடித்தது.

வேதாளம் மன்னனை பார்த்து, இக்கதையில் அந்த வாலிபனுக்கு, மந்திரங்கள் மனதில் பதியதற்க்கு காரணம் என்ன? எனக்கேட்டது.

விக்ரமாதித்யனும் பதில் கூறத்தொடங்கினான்.

நம் மனதில் மந்திரங்களோ, அல்லது வேதசாஸ்திரங்களோ மனதில் பதிய வேண்டுமெனில், நமது மனம், நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

அந்த வாலிபன், மந்திரங்களை கற்க தொடங்கும் பொழுதே, அதன் பயன்களை பெற்றுவிட்டதாக எண்ணி, மனதை அலைப்பாயவிட்டான்.

மந்திரம்
மந்திரம்

அதன் காரணமாகவே, அவனால் அந்த மந்திரங்களை கற்றுக்கொள்ள இயலவில்லை என்றான்.

விக்ரமாதித்யன் கூறிய, சரியான பதிலைக்கேட்ட வேதாளம், கட்டுகளில் இருந்து விலகி மீண்டும் இடுகாட்டை அடைந்து, அங்கிருந்த முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்க தொடங்கியது.

விக்ரமாதித்யனும், மீண்டும் முயற்சித்து வேதாளத்தை பிடித்து கட்டி, தோளில் சுமந்து நடக்க தொடங்கினான்.

Post a Comment

0 Comments