விக்ரமாதித்தன் கதைகள் |
Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 24
விக்ரமாதித்தனை பார்த்து வேதாளம், தனது பதினெட்டாவது கதையை சொல்லத்தொடங்கியது. மகேந்திரப்பட்டினம் என்ற நாட்டை மகேந்திரவர்மன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.
அவனுக்கு அழகான ஒரு மகள் இருந்தாள். அவளை கரிகாலன் என்னும் வாலிபன் காதலித்து வந்தான். கரிகாலனின் காதலைக்கண்ட இளவரசியும் அவனை காதலிக்க தொடங்கினாள்.
ஆனால் மன்னன் மகள் என்பதால் எவ்வாறு மணப்பது என்று அவனுக்கு தெரியவில்லை. இதனால் ஒரு முனிவரை சந்தித்த கரிகாலன் தன்னுடைய விருப்பத்தைக்கூறி உதவிக்கேட்டான்.
அவனுக்கு உதவுதாக முனிவரும் சம்மதம் தெரிவித்தார். முனிவர், கரிகாலனை பெண்ணாக மாற்றி அரசவைக்கு அழைத்து சென்றார்.
அழகிய பெண் |
பின்னர் மன்னனிடம், தான் தீர்த்த யாத்திரை செல்லப்போவதால், தன்னுடன் வந்த பெண்ணை தங்களிடம் ஒப்படைத்து செல்ல விரும்புவதாகவும் கூறினார்.
இதைக்கேட்ட மன்னனும் சம்மதித்து, பெண்ணுருவில் இருந்த கரிகாலனை, இளவரசியின் தோழியாக இருக்க அனுப்பிவைத்தான்.
பெண்ணுரிவில் இருந்தது கரிகாலன் என்று தெரிந்துக்கொண்ட இளவரசியும், கரிகாலனும் ஒன்றாக பொழுதை கழித்து வந்தனர். இதனால், இளவரசி கர்ப்பமுற்றாள்.
இதையறியாத மன்னன், பெண்ணுருவில் இருந்த கரிகாலனை பக்கத்து நாட்டு மந்திரியின் மகன் திருணம் செய்துக்கொள்ள விரும்புவதாக விரும்பம் தெரிவித்தான்.
முனிவர் பாதுக்காக்க கோரிய பெண் என்பதை மறந்து மன்னனும், பெண்ணுருவில் இருந்த கரிகாலனை, பக்கத்து நாட்டு மந்திரியின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தான்.
அன்றிரவு மந்திரின் மகன், பெண்ணுருவில் இருந்த கரிகாலனை ஆசையுடன் நெருங்கினான்.
பெண் |
ஆனால் கரிகாலனோ தன்னை நெருங்கும் ஆண் மகனது தலை வெடித்துவிடும் என்று ஒரு அரக்கன் சாபம் கொடுத்துள்ளதாக கூறினான்.
இதைக்கேட்ட மந்திரியின் மகன், சாபம் நீங்க என்ன செய்யவேண்டும் எனக்கேட்டான்.
அதற்கு பெண்ணுருவில் இருந்த கரிகாலன் தீர்த்த யாத்திரை சென்று வந்தால், சாபம் நீங்கும் என்று கூறினான்.
இதனால் மந்திரியின் மகன் தீர்த்த யாத்திரைக்கு புறப்பட்டு சென்றான்.
இந்த நேரத்தில் தீர்த்த யாத்திரை சென்ற முனிவர், தன்னுடன் ஒரு சீடனை அழைத்துக்கொண்டு மகேந்திரவர்மன் அரண்மனைக்கு வந்தார்.
மன்னன் மகேந்திரவர்மனை பார்த்து, தான் விட்டு சென்ற பெண்ணுருவில் இருந்த கரிகாலனை, தன்னுடைய சீடனுக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும்.
ஆகையால் நான் விட்டு சென்ற பெண்ணை அழையுங்கள் என்று கேட்டார்.
பெண் |
இதைக்கேட்ட மன்னன் திகைத்துப்போனான். பின்னர் நடந்ததைக்கூறி முனிவரிடம் மன்னிப்புக்கேட்டான்.
பின்னர் தங்களுடைய சீடனுக்கு, தன்னுடைய மகளை திருமணம் செய்து வைப்பதாகவும் கூறினான்.
இதையறிந்த இளவரசி, தன்னுடைய தோழிகள் மூலமாக நடந்ததை, பெண்ணுருவில் இருந்த கரிகாலனுக்கு தெரியப்படுத்தி அரண்மனைக்கு வரவைத்தாள்.
பெண்ணுருவில் இருந்த கரிகாலனும், அரசவைக்கு வந்து முனிவரிடம் சண்டைப்போட்டான் என வேதாளம் கதையை முடித்தது.
பின்னர் விக்ரமாதித்யனை பார்த்து, இக்கதையில் இளவரசி யாரை மணந்துக்கொள்ள வேண்டும்? எனக்கேட்டது.
விக்ரமாதித்யனும் பதில் கூறத்தொடங்கினான்.
இளவரசியும், பெண்ணுருவில் இருந்த கரிகாலனும் பழகியது களவு முறையில் தான்.
அழகிய பெண் |
ஆகையால் பெரியோர்கள் வாக்கு கொடுத்ததுப்போல இளவரசியும், முனிவருடைய சீடனும் தான் மணந்துக்கொள்ள வேண்டும் எனக்கூறினான்.
விக்ரமாதித்யன் சொன்ன சரியான பதிலைக்கேட்டு, கட்டுகளில் இருந்து விடுபட்டு சென்று மயானத்தை அடைந்தது.
பின்னர், முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்க தொடங்கியது.
விக்ரமாதித்யன், தன்னுடைய விட முயற்சியால் வேதாளத்தை மீண்டும் பிடித்து கட்டி தூக்கிக்கொண்டு நடக்க தொடங்கினான்.
0 Comments