Ticker

6/recent/ticker-posts

அபூர்வ நெல்லிக்கனியும், அழகிய இளவரசியும் | பகுதி 15 | விக்ரமாதித்தன் கதைகள்

vikramathithan kathaikal
விக்ரமாதித்தன் கதைகள்

Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 15

வேதாளத்தின் புதிர் நிறைந்த கதைகளுக்கு விக்ரமாதித்தன், தன்னுடைய அறிவால் எளிதாக விடையளித்து வர, வேதாளம் தன்னுடைய ஒன்பதாவது கதையை கூறத்தொடங்கியது.

பிரம்மபுரம் என்னும் நாட்டை ஆதிகேசன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் தனது நாட்டை பெரிதும் நேசித்து வந்தான். அதனால் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

அவனுக்கும், மார்த்தாண்டன் என்னும் ஒரு மெய்க்காப்பாளனும் இருந்தான். மன்னனும், அவனும் சிறந்த நண்பர்களாக விளங்கி வந்தனர்.

இவ்வாறாக இருக்க, ஒரு சமயம் மன்னன், மார்த்தாண்டன் மற்றும் தனது பரிவாளங்கள் உடன் காட்டிற்கு வேட்டையாட சென்றான். நெடுதொலைவு சென்றதும், அனைவரும் சோர்வடைந்து ஆங்காங்கே ஓய்வெடுக்க தொடங்கினர்.

அப்பொழுது மன்னனும், மார்த்தாண்டனும் மட்டுமே தனியாக நெடுந்தொலைவு காட்டிற்குள் சென்றனர். நீண்ட நேர பயணத்திற்கு பிறகு மன்னனும், மார்த்தாண்டனும் மிகவும் சோர்ந்து போயினர். 

காட்டு பாதை
காட்டு பாதை

மார்த்தாண்டன் தான் கேள்விப்பட்ட அபூர்வ நெல்லிக்கனியை தேடி வருவதாக கூறி புறப்பட்டு சென்றான். பின்னர் பல்வேறு இடையூறுகளை கடந்து, ஒருவழியாக நெல்லிக்கனியை அடைந்தான்.

மார்த்தாண்டன் அடைந்த நெல்லிக்கனியை தான் உண்ணாமல், மன்னனுக்கு உண்மையை மறைத்து, அந்த ஆயுளைக்கூட்டும் அபூர்வ நெல்லிக்கனியை அளித்தான். மன்னனும் அதை உண்டான்.

அதை உண்டதும் கிடைத்த புத்துணர்ச்சியைக் கொண்டு, அருகில் உள்ள சுனையில் தண்ணீர் குடித்து களைப்பாறினான். மார்த்தாண்டனுக்கு நன்றி கூறினான்.

ஆனால் மார்த்தாண்டன், இது தன்னுடைய கடமை என்று கூறினான். பின்னர் மன்னனும், மார்த்தாண்டனும் வேட்டையாடி திரும்பி நாட்டிற்கு சென்றனர்.

நாட்கள் ஓடின, மன்னனும், மார்த்தாண்டனை அழைத்து, எவ்வாறாவது சிங்கள நாட்டு இளவரசியை கவர்ந்து வா எனக் கூறினார். மார்த்தாண்டனும் பெரும்படையுடன் கப்பலில் சிங்கள நாட்டை நோக்கி படையெடுத்து புறப்பட்டு சென்றான்.

ஆனால் கடலில் பெரும் சூறாவளி அடிக்க, அனைத்தும் கடலில் மூழ்கியது.  ஒரு பெரிய மீன் மார்த்தாண்டனை விழுங்கியது. ஆனால் மார்த்தாண்டன் அதனுடைய வயிற்றை கிழித்து வெளியில் வந்தான்.

பின்னர் பலநாட்களுக்கு பிறகு, ஒரு வழியாக சிங்கள நாட்டை அடைந்து, ஒரு காளி கோவிலில் இளவரசியை கண்டான்.

கோவில்
கோவில்

இளவரசி பேரழகு கொண்டவள். அவள் அழகில் மயங்காதோர் யாரும் இல்லை என்பதால், மார்த்தாண்டன் அவளது அழகில் மயங்கினான். பின்னர் இளவரசியிடம் சென்று, நான் உன்னை பார்த்த அடுத்த நொடியே, உன்மீது அதீத காதல் கொண்டேன். என்னை மணந்துக்கொள்வாயா? என கேட்டான்.

அதற்கு இளவரசி, ஒரு கிணற்றை காட்டி, என்னை காதலிப்பது உண்மை எனில், இந்த கிணற்றில் மூழ்கி எழ வேண்டும் என்றான். அடுத்த நொடியே, கிணற்றில் மார்த்தாண்டன் மூழ்கி எழுந்தான்.

மார்த்தாண்டன் எழுந்து பார்த்தால், அவனுடைய நாட்டில் இருந்தான். அதிசயத்தில் வாயடைத்து போனான். இவ்வளவு நாட்களாக இறந்து போனான் என்று எண்ணிய மார்த்தாண்டன் உயிருடன் வருவதைக் கண்டு மன்னன் மகிழ்ந்து அடைந்தான்.

பின்னர் மார்த்தாண்டன், நடந்ததை அனைத்தையும் மன்னனிடம் கூறினான். அமைதியாக கேட்ட மன்னன் சரி வா, இருவரும் சிங்கள தேசத்திற்கு செல்லலாம் என்று புறப்பட்டு சென்றனர்.

சிங்கள தேசம்
சிங்கள தேசம்

மார்த்தாண்டனுக்கு வழி தெரிந்ததால் எளிதாக சென்றனர். தொலைவில் இருந்து காளிக்கோவிலில் உள்ள இளவரசியை கண்டனர். இளவரசி மன்னனை கண்டதும், மன்னன் மீதுக்காதல் கொண்டாள்.

பின்னர் இளவரசி, தோழியின் மூலமாக மன்னனை அழைத்துவர சொன்னாள். அவளும் அழைத்து வந்தாள். மன்னனிடம், தனது விருப்பத்தை தெரிவிக்க, மன்னன் என்னை உண்மையில் காதலிப்பதாக இருந்தால், நான் சொல்வதை செய்வாயா? எனக்கேட்டான்.

அதற்கு இளவரசியும் இணங்க, மார்த்தாண்டனை காட்டி, அவன் என்னை காட்டிலும் சிறந்தவன். உன்மீது அதீத காதல் கொண்டுள்ளான். அவனை நீ மணந்துக்கொள்ள வேண்டும் என்றான்.

இதைக்கேட்ட இளவரசியும் ஒப்புக்கொண்டாள். நான் நேசிப்பவரை விட, என்னை நேசிப்பவர், என்னை நன்றாக பார்த்துக்கொள்வார் என எண்ணினாள். பின்னர், இருவருக்கும் மணமுடித்து வைத்து விட்டு, எப்பொழுதும் என்னுடைய நிழல் போல இருந்த நீ, இனி இவளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனக்கூறினான்.

திருமணம்
திருமணம்

பின்னர், அந்த கிணற்றில் மூழ்கி எழ, அவனது அரண்மனையில் கண்விழித்தான் எனக்கூறி கதையை முடித்தது.

பின்னர் வேதாளம், விக்ரமாதித்யனை பார்த்து, இந்த கதையில் மன்னன் மார்த்தாண்டனுக்கு செய்த உதவி சிறந்ததா? அல்லது மார்த்தாண்டன் மன்னனுக்கு செய்த உதவி சிறந்ததா? எனக் கேட்டது.

விக்ரமாதித்யன் பதில் கூறத்தொடங்கினான்.

மார்த்தாண்டன், தன்னுடைய மன்னனுக்கு அளித்த அந்த மாயக்கனியின் மூலமாக, மன்னன் மீதும், அவன் கொண்ட நட்பின் மீதும் உள்ள கடமை மற்றும் அன்பின் வெளிப்பாடு ஆகும்.

உண்மையை சொல்லப்போனால், மன்னனை காப்பது அவனுடைய கடமை. ஆனால், மன்னன் செய்தது அவ்வாறில்லை. மன்னன் மீது ஆசைக்கொண்ட ஒரு இளவரசியை, மார்த்தாண்டனுக்கு திருமணம் செய்து வைத்தான்.

இது அவன் நட்பின் மீதும், மக்கள் மீதும் கொண்ட அன்பின் வெளிப்பாடு ஆகும். ஆகவே, இதில் மன்னன் செய்த உதவியே சிறந்தது என்றான்.

விக்ரமாதித்யன் கூறிய, சரியான பதிலைக்கேட்ட வேதாளம், கட்டுகளில் இருந்து விலகி மீண்டும் இடுகாட்டை அடைந்து, அங்கிருந்த முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்க தொடங்கியது.

விக்ரமாதித்யனும், மீண்டும் முயற்சித்து வேதாளத்தை பிடித்து கட்டி, தோளில் சுமந்து நடக்க தொடங்கினான்.

Post a Comment

0 Comments