Ticker

6/recent/ticker-posts

உயிர்துறந்த காப்பாளனும், மன்னனும் | பகுதி 14 | விக்ரமாதித்தன் கதைகள்

vikramathithan kathaikal
விக்ரமாதித்தன் கதைகள்

Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 14

வேதாளம் விக்ரமாதித்தனை சிக்க வைக்க, தன்னுடைய எட்டாவது கதையை கூற தொடங்கியது.

அர்த்தமபுரம் என்னும் நாட்டை அர்த்தமன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனது நாடு அவனைப்போலவே மிகவும் அழகாக இருந்தது. எங்குப்பார்த்தாலும் செழுமையாகவும், மக்கள் மகிழ்ச்சியாகவும் இருந்து வந்தனர்.

அவனது நிர்வாக திறமையை கண்டு பூமாதேவி அவனது நாட்டினை நேசித்து வந்தாள். அவனது நாட்டில், தனது குடும்ப சூழ்நிலையால் குணசேகரன் என்னும் ஒருவன் மன்னனிடம் வேலைக்கேட்டு சென்றான்.

குணசேகரன் பார்ப்பதற்கு வசீகரமாகவும், உடல் கட்டுமஸ்தாகவும் இருப்பான். அவன் மன்னனிடம் வேலைக்கேட்க, மன்னன் அவனது வசீகரத்தை கண்டு ஆச்சரியப்பட்டார். பின்னர், அவனுக்கு மெய்க்காப்பாளன் வேலையும் கொடுத்தார்.

மெய்க்காப்பாளன்
மெய்க்காப்பாளன்

நாட்கள் ஓடின. மன்னன் உறங்கிக்கொண்டு இருக்க தொலைவில் பெண்ணொருத்தி அழும் குரல் கேட்டது. குணசேகரனை அழைத்து, யார் அழுகின்றார்? என பார்த்து, அவர்களது பிரச்சனையை தீர்த்து வை என்று கூறினார்.

இரவுப்பொழுது என்பதால் மன்னனின் பாதுகாப்பு கருதி, குணசேகரன் அங்கு சென்று பார்க்கவில்லை. மன்னன் கூறிய அடுத்த கணமே, அங்கிருந்து அழுகுரல் கேட்கும் திசையை நோக்கிப் புறப்பட்டு சென்றான்.

நாட்டின் எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில், தலைவிரிக்கோலமாக பெண்ணொருத்தி அழுத்துக்கொண்டு இருந்தாள். குணசேகரன் அருகில் சென்று, யாரம்மா நீ? ஏனம்மா அழுகிறாய்? என்றுக்கேட்டான்.

அதற்கு அந்த பெண், நான் தான் பூமாதேவி, இந்த நாட்டின் மன்னனின் ஆட்சியால் சிறப்பாக வாழ்ந்து வந்தேன். இந்த நாட்டின் மன்னன், நாளை இறக்கப்போகிறான். அவனை எண்ணியே அழுத்துக்கொண்டு இருக்கிறேன் என்றாள்.

அழுகை
அழுகை

இதைக்கேட்ட குணசேகரன், என்னமா சொல்கிறாய். எமது மன்னன் இறக்கக்கூடாது. இதற்கு ஏதேனும் வழி இருந்தால் கூறு என்றுக்கேட்டான்.

இதைக்கேட்ட பூமாதேவி, யாரேனும் அவர்களுடைய தலைப்பிள்ளையான, ஒரே ஆண்பிள்ளையை துர்க்கை அம்மனுக்கு பலிக்கொடுக்க மன்னன் உயிருடன் வாழ்வான் என்றாள்.

இதைக்கேட்ட குணசேகரன், அவ்வளவு தானே! இனி நான் பார்த்துக்கொள்கிறேன். தாங்கள் இனி கவலைக்கொள்ளாமல் இருங்கள் என்றுக்கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.

மன்னன், குணசேகரனை பின்தொடர்ந்து வந்து, நடந்ததை அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்தார். தான் இறக்கப்போவதை எண்ணி கவலைப்படாமல், இனி நாட்டை யார் நன்றாக பார்த்துக்கொள்ளுவார்கள் என்று எண்ணி கவலைப்பட்டு கொண்டிருந்தார்.

ஆனால், குணசேகரன் மன்னனை காப்பாற்ற யாரும், தனது ஒரே ஆண்பிள்ளையை பலி தர விரும்ப மாட்டார்கள்.

ஆண்பிள்ளை
ஆண்பிள்ளை

ஆக, நாம் தான் செய்யவேண்டும் என எண்ணினான். சற்றும் தாமதிக்காமல், நேராக வீட்டிற்கு சென்று தூங்கிக்கொண்டு இருந்த தனது ஒரே மகனை எழுப்பி துர்க்கை அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றான்.

குணசேகரன் செயலைக்கண்டு, அவனது மனைவி தனது மகளையும் அழைத்துக்கொண்டு சென்றாள். இந்த சமயத்தில் குணசேகரன், தனது மகனை மன்னனுக்காக, துர்க்கை அம்மனுக்கு பலிகொடுத்தான்.

அவனது செயலைக்கண்டு அவனுடைய மனைவி மகனை பிரிந்து இருக்க இயலாது என்று எண்ணி, தற்கொலை செய்துக்கொண்டாள். அண்ணனும், தாயும் இறந்ததை எண்ணி அவளும் இறந்துப்போனாள். இதைக்கண்ட குணசேகரனும், தனது உயிரை விட்டான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத மன்னன், தனக்காக இவர்கள் உயிர்விட்டதை தாங்கிக்கொள்ளாமல் தானும் உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்தான். அந்த நேரத்தில், துர்க்கை அம்மன் அவனது முன்னால் தோன்றி தடுத்தாள்.

துர்க்கை அம்மன்
துர்க்கை அம்மன்

இவர்கள் எதோ ஒருவிதத்தில், நீ உயிருடன் இருக்கவே உயிரை விட்டனர். ஆனால், நீயோ! தற்பொழுது உன்னுடைய உயிரை விட துணிகிறாயே!. நீ இறந்தால், இந்த நாட்டு மக்களின் கதி என்னாவது? இந்த குணசேகரனைப் போல, அநேக நபர்கள் உனது நாட்டில் உள்ளார்கள்.

அவர்களுக்காக நீ வாழ்ந்து தான் ஆக வேண்டும். இவர்கள் இறந்தார்கள் என கவலைக்கொள்ளாதே!. இப்பொழுதே, உயிர்பெற வைக்கின்றேன். நீ புறப்பட்டு செல் என்றாள்.

இதைக்கேட்ட மன்னன், துர்க்கை அம்மனை வணங்கி, அங்கிருந்து புறப்பட்டு செல்லாமல், மீண்டும் மறைந்துக்கொண்டான். துர்க்கை அம்மன், இறந்த அனைவரையும் உயிர்பெற செய்தாள். அனைவரும் அம்மனை வணங்கி நின்றனர்.

குணசேகரன், அம்மனை பார்த்து, எங்களுடைய மன்னனுக்கு ஆபத்து வராதே? எனக் கேட்டான். அதற்கு துர்க்கை அம்மன், உங்களுக்கும், உங்களுடைய மன்னனுக்கும் ஏதும் இனியாகாது. கவலைக்கொள்ளாமல் செல்லுங்கள் என்றாள்.

அவர்கள் வணங்கி நிற்க, துர்க்கை அம்மனும் மறைந்துப்போனாள்.

குடும்பம்
குடும்பம்

பின்னர் குணசேகரன், அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு ஏதும் நடக்காததுப்போல அரண்மனைக்கு சென்று காவலில் ஈடுபட்டான்.

பின்னர் மன்னன், அரண்மனைக்கு சென்று குணசேகரனை அழைத்து, நேற்று ஒரு அழுகுரல் கேட்டதல்லவா? அதை விசாரிக்க கூறினேன். விசாரணை செய்தாயா? எனக்கேட்டான்.

அதற்கு குணசேகரன், அந்த பெண் என்னை பார்த்ததும், அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டாள் மன்னா. ஆகையால், என்னால் காரணத்தை தெரிந்துக்கொள்ள இயலவில்லை என்றான்.

இதைக்கேட்ட மன்னன், குணசேகரனின் குணத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு, ஏதும் பேசாமல் புறப்பட்டு சென்றான். பின்னர், அரசவையை கூட்டினான்.

மக்கள் அனைவரையும் அழைத்து, நடந்தது அனைத்தையும் கூறி, குணசேகரனை அழைத்து ஏராளமான பொன்னும், பொருளும் அளித்தான். அரசவையில் உயர் பதவியும் அளித்தான் எனக்கதையை முடித்தது.

பின்னர் வேதாளம், மன்னனை பார்த்து, இக்கதையில் யாருடைய தியாகமானது போற்றுதலுக்குரியது? எனக்கேட்டது. விக்ரமாதித்யன் பதில் கூறத்தொடங்கினான்.

மெய்க்காப்பாளன்
மெய்க்காப்பாளன்

குணசேகரன் செய்த செயலானது, ஒரு மெய்க்காப்பாளன் தன்னுடைய மன்னன் மீது வைத்திருக்கும் மரியாதையும், கடமையும் குறிக்கும்.

அவனுடைய மகனுக்காக தாயும், அண்ணன் மற்றும் தாய்க்காக மகளும், இவர்கள் மூவருக்காக குணசேகரனும் உயிர் விட்டான். இது அவர்களுடைய இரத்த பாசத்தினால் நடந்தது.

ஆனால், மன்னன் உயிரை விட துணிந்தது தான் தியாகம். அதுவே, போற்றுதலுக்குரியது. மக்களுக்காக, ஒரு மன்னன் உயிரை தியாகம் செய்த எண்ணமே சிறப்பை தரும் என்றான்.

விக்ரமாதித்யன் கூறிய, சரியான பதிலைக்கேட்ட வேதாளம், கட்டுகளில் இருந்து விலகி மீண்டும் இடுகாட்டை அடைந்து, அங்கிருந்த முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்க தொடங்கியது.

விக்ரமாதித்யனும், மீண்டும் முயற்சித்து வேதாளத்தை பிடித்து கட்டி, தோளில் சுமந்து நடக்க தொடங்கினான்.

Post a Comment

0 Comments