அம்மா மற்றும் மகள் |
வேதாளம், தனது இருபத்திநான்காவது கதையை சொல்லத்தொடங்கியது.
ராஜசோழப்பட்டினத்தை ஆதித்யவர்மன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு அழகான ஒரு மனைவியும், ஒரு மகளும் இருந்தனர்.
அவனது அரசவையில் இருந்த மன்னர்கள் நயவஞ்சகத்தால் மன்னனை கொன்று நாட்டை பிடித்தனர்.
இராணியையும், இளவரசியையும் கொல்ல முயற்சிக்கும் பொழுது, இருவரும் சுரங்கபாதையின் வழியாக தப்பித்து காட்டில் சரண்புகுந்தனர்.
வீரசேகரப்பட்டினம் என்னும் நாட்டை வீரகேசவன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு விக்ரமன் என்னும் ஒரு மகனும் இருந்தான்.
அவர்களுக்கு வேட்டையாடுவது என்பது மிகவும் பிடித்த ஒன்று. ஒருநாள் மன்னனும், இளவரசனும் வேட்டையாட வெகுதொலைவில் இருந்த காட்டிற்கு சென்றனர்.
அந்த காட்டில் இரு பாதச்சுவடுகளை மன்னனும், இளவரசனும் கண்டனர். பாதத்தை வைத்தே அவர்கள் அரசக்குடும்பத்தை சேர்ந்தவர் என்று முடிவு செய்தனர்.
பாதச்சுவடு |
அந்த இருபாதச்சுவடுகளில் பெரிய பாதச்சுவடைக்கொண்ட பெண்ணை மன்னனும், சிறிய பாதச்சுவடைக்கொண்ட பெண்ணை இளவரசனும் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தனர்.
பின்னர், இருவரையும் சந்தித்தனர். அப்பொழுது அவர்களுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
சிறிய பாதம் கொண்டவள் இராணி என்பதையும், பெரிய பாதம் கொண்டவள் இளவரசி என்பதையும் தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் வாக்கு கொடுத்ததுப்போல, இளவரசியை மன்னனும், இராணியை இளவரசனும் திருமணம் செய்துக்கொண்டனர்.
வருடங்கள் ஓடின. இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன. அப்பொழுது அங்கு பெரும் குழப்பமானது நிலவியது என வேதாளம் கதையை கூறி முடித்தது.
குழந்தைகள் |
பின்னர் விக்ரமாதித்யனை பார்த்து, மன்னா! இக்கதையில் இராணிக்கும் இளவரசனுக்கும் பிறந்த குழந்தையை மன்னனும், இளவரசியும் என்ன உறவுமுறைக்கொண்டு அழைப்பார்கள்?
அதுப்போல, இளவரசிக்கும், மன்னனுக்கும் பிறந்த குழந்தையை இளவரசனும், இராணியும் என்ன உறவுக்கொண்டு அழைப்பார்கள்? எனக்கேட்டது.
இதைக்கேட்ட விக்ரமாதித்யன் திகைத்தான்.
வேதாளம், மீண்டும் பேசத்தொடங்கியது. விக்ரமாதித்ய மன்னா! இதுவரை நான் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும், பதில் அளித்த நீ, இக்கதைக்கு பதில் அளிக்காமல் திகைத்தது சரியே!.
இதுவரை உன்னிடம் நான் இந்த மயானத்தில் பல கதைகள் கேட்டு, அதற்கும் நீ விடாமல் பதில் அளித்து தொடர்ந்து என்னை பிடித்து வந்தாய்.
கதைக்கூறல் |
உனது விடாமுயற்சியை கண்டு, நான் உண்மையான விக்ரமாதித்ய மன்னன் தான் என்னை பிடிக்க வந்துள்ளார் என்று அறிந்துக்கொண்டேன்.
இக்கதைக்கு உன்னால் மட்டுமல்ல எவராலும் பதில் கூற முடியாது என்று தெரியும்.
நான் இதுவரை எதற்காக உன்னிடம் இவ்வளவு கேள்விகள் கேட்டேன் என்று உனக்கு தெரியுமா? என வேதாளம் விக்ரமாதித்யனை பார்த்து கேட்டது.
விக்ரமாதித்யன் தெரியாது என்று கூறினான். பின்னர் வேதாளம், மன்னா! என்னுடைய கதையை கூறுகிறேன் கேளுங்கள் என்றது.
தொடரும்...
0 Comments