Ticker

6/recent/ticker-posts

பொறுப்பற்ற மன்னனும், தேவலோகப்பெண்ணும் | பகுதி 18 | விக்ரமாதித்தன் கதைகள்

vedhalam kathaikal
விக்ரமாதித்தன் கதைகள்

Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 18

விக்ரமாதித்தனை பார்த்து வேதாளம் தன்னுடைய பன்னிரண்டாவது கதையை கூறத்தொடங்கியது.

மாயத்தேசம் என்னும் நாட்டை சித்ரன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன், அவனுடைய மனைவி மீது அதீத காதல் கொண்டவனாக இருந்தான்.

இதன் விளைவாக, அவன் நாட்டை மறந்து மனைவியுடன் சந்தோசமாக பொழுதை கழித்து வந்தான். மன்னன், சரியாக இல்லதாக காரணத்தால், அவனது மந்திரி குறை ஏதும் வர வண்ணம் நாட்டை காப்பாற்றிக்கொண்டு இருந்தான்.

அவன் மன்னன் மீதும், நாட்டின் மீதும் பேரன்பு கொண்டிருந்ததால், புதுப்புது திட்டங்கள் தீட்டி, மக்கள் மன்னனை குறைச்சொல்லாவண்ணம் காப்பாற்றினான். ஆனால் மந்திரியை பிடிக்காத சிலர் மந்திரியை பற்றி அவதூறு பரப்பினர்.

இதனால் மனம் நொந்துப்போன மந்திரி, அந்த நாட்டை விட்டு செல்ல முடிவெடுத்தது கப்பலில் செல்ல, கப்பல் புயலில் சிக்கி மூழ்கியது.

கப்பல்
கப்பல்

மந்திரி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அருகில் இருந்த ஒரு தீவை அடைந்தார்.

அந்த தீவில் பழமையான ஒரு காளிக்கோவில் இருப்பதைக் கண்டு, அதன் அருகில் சென்றார்.

அச்சமயம், அந்த கோவிலின் அருகில் ஒரு மேடையில் தேவலோக அழகிப்போல, பேரழகுக்கொண்ட ஒரு பெண் அமர்ந்திருப்பதை கண்டான்.

அருகில் செல்ல நினைத்தவன், எதாவது சாபம் கொடுத்தால் என்ன செய்வது என பயந்து அங்கிருந்து புறப்பட்டான்.

பின்னர் மன்னனையும், நாட்டையும் பற்றிக்கவலை கொண்ட மந்திரி நாடு திரும்பினான்.

மந்திரியை பார்த்த மன்னர், எங்கு சென்றாய் என விசாரிக்க, மந்திரியும் நடந்ததை கூறினான்.

இதைக்கேட்ட மன்னன், அந்த தீவிற்கு உடனடியாக செல்ல வேண்டும், என்னுடன் புறப்படுங்கள் என்றான்.

தீவு
தீவு

மந்திரியும், அந்த பெண் இருந்த தீவிற்கு அழைத்து சென்றான். அந்த பெண்ணை பார்த்த மன்னன், உடனே அவளை நோக்கி சென்றான்.

அவளது பேரழகில் மயங்கிய அவன் வாயடைத்துப்போனான்.

பின்னர், சுயநினைவிற்கு வந்த மன்னன், தன்னை மணந்துக்கொள்ள வேண்டினான்.

அதற்கு அவளும் சம்மதம் தெரிவித்து, அதற்கு நீங்கள் சில தினங்கள் காத்திருக்க வேண்டும் என்றுக்கூறினாள்.

மன்னனும், அதற்கு சரியென சம்மதிக்க, அவள் அருகில் இருந்த கிணற்றைக்காட்டி குளித்துவிட்டு வர சொன்னாள்.

அவன் குளிக்க செல்லும் சமயம், ஏதோ ஆபத்து வருவதாய் உணர்ந்தவன், தனது வாளை எடுத்தான்.

வாள்
வாள்

அப்பொழுது, திடீரென ஒரு அரக்கன் தோன்றி, அந்த பெண்ணை விழுங்கி விட்டான்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத மன்னன், உடனே அந்த அரக்கன் வயிற்றை கிழித்து, அந்த பெண்ணை உயிருடன் மீட்டான்.

வயிறு கிழிந்தததால் அரக்கன் இறந்துபோனான். பின்னர், அந்த பெண் தனது கதையை கூறத்தொடங்கினாள்.

தான் ஒரு தேவலோக பெண் என்றும், ஒரு சமயம் நோன்பிற்கு தாமதமாக வந்தததால், தனது தந்தை அரக்கன் விழுங்கும்படி சாபமிட்டார்.

பின்னர், அவரிடம் நான் மன்றாடிக்கேட்டு கொண்டதால் தங்களுடைய பெயரை கூறி, காப்பாற்றுவீர்கள் என்றுக்கூறினாள்.

பின்னர் இருவரும் நாடு திரும்பி, ஆடம்பரமாக திருமணம் செய்துகொண்டனர்.

ஆனால் மன்னன், இப்பொழுது முன்பைவிட மிகவும் மோசமானார்.

தன்னுடைய முதல் மனைவியையும், நாட்டையும் மறந்து, தற்பொழுது மணந்த பெண்ணுடன் சந்தோசமாக பொழுதை போக்கினான்.

திருமணம்
திருமணம்

இவ்வாறு நடந்துக்கொண்டு இருக்க மந்திரி திடீரென தற்கொலை செய்துக்கொண்டான் எனக்கதையை கூறி முடித்தது.

பின்னர், வேதாளம் விக்ரமாதியனை இக்கதையில் மந்திரி தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்றுக்கேட்டது.

விக்ரமாதித்யனும் பதில் கூறத்தொடங்கினான்.

அந்த பெண்ணை மணந்ததால் ஏற்பட்ட, மன்னனின் பொறுப்பற்ற செயலுக்கு தானும், ஒரு காரணம் என எண்ணி மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டான்.

விக்ரமாதித்யன் கூறிய, சரியான பதிலைக்கேட்ட வேதாளம், கட்டுகளில் இருந்து விலகி மீண்டும் இடுகாட்டை அடைந்து, அங்கிருந்த முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்க தொடங்கியது.

விக்ரமாதித்யனும், மீண்டும் முயற்சித்து வேதாளத்தை பிடித்து கட்டி, தோளில் சுமந்து நடக்க தொடங்கினான்.

Post a Comment

0 Comments