விக்ரமாதித்தன் கதைகள் |
Vikramathithan Kathaikal | Pojarajan Kathaikal | Part 21
வேதாளம், தன்னுடைய பதினைந்தாவது கதையை விக்ரமாதித்தனிடம் கூறத்தொடங்கியது. பரமர்த்தகிரி என்னும் ஊரில் ஆதித்யநேசன் என்னும் பிராமணன் இருந்தான். அவனுக்கு நான்கு ஆண் பிள்ளைகள் இருந்தனர்.
பிராமணனாக இருந்தாலும், கல்வியில் நாட்டமில்லாத அவன் என்பதால் குறைந்த அளவே படித்து இருந்தான். அவனுக்கு சொந்தமாக சிறிது நிலம் இருந்ததால், அவற்றைக்கொண்டு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்தான்.
அவனது பிள்ளைகளுக்கும், நிலத்தை வைத்து பிழைக்க கூறினான். ஆனால், அவர்கள் மந்திரங்களை படிக்கவே எண்ணினார். அவர்கள், தந்தையிடம் பலமுறை அனுமதிக்கேட்டும் அவன் அனுமதி தரவில்லை.
ஆனால், அவனது மகன்களும் கேட்டுக்கொண்டே இருந்தனர். இதனால் ஒருவழியாக மந்திரங்கள் கற்க அனுமதியும் கொடுத்தான்.
காடு |
அதனால், அந்த நால்வரும் காட்டிற்கு புறப்பட்டுச் சென்று, ஒரு முனிவரியின் அறிவுரையைக்கேட்டு மந்திரங்களை கற்று வந்தான்.
ஒருவழியாக முனிவரும் மந்திரங்களை கற்றுக்கொடுத்தார். மந்திரங்களை, கற்ற நால்வரும் வீடு திரும்ப முடிவு எடுத்தனர்.
நால்வரும் செல்லும் வழியில் ஒரு புலியின் எலும்புக்கூடு ஆனது சிதறிக்கிடப்பதை பார்த்தனர். நால்வருக்கும் ஒரு யோசனை தோன்றியது. தாங்கள் கற்ற மந்திரங்களை, இறந்த அந்த புலியின் எலும்புக்கூட்டின் மீது உபயோகித்து பார்க்க கருதினர்.
நால்வரில் முதல் வாலிபன், சிதறிக்கிடந்த புலியின் எலும்புகளை ஒன்றாக மந்திரத்தை கூறினான். அவன் மந்திரங்களை கூறிய, சில வினாடிகளில் சிதறிய எலும்புகள் ஆனது ஒன்று சேர்ந்தது.
நால்வரில் இரண்டாவது வாலிபன், மந்திரங்களைக் கூற புலியின் உடலில் நரம்புகளும், சதைகளும் உருவாகின.
புலி |
நால்வரில் மூன்றாவது வாலிபன், மந்திரங்களைக் கூற புலியின் உடலில் தோலானது உருவாகி, பின்னர் தோலில் முடிகள் முளைக்க தொடங்கியது.
நால்வரில் கடைசி வாலிபன், அந்த புலிக்கு இரத்தமும், உயிரும் அளிக்க வேண்டியது தான் மீதமிருந்தது.
ஆனால், அவன் சற்று பயந்தான். உயிர் கொடுத்தால் புலி தங்களை கொன்றுவிடும் என கருதினான்.
ஆனால், மற்றவர்கள் இறந்த புலியானது செயல்பட கட்டாயமாக சிறிது நேரம் தேவைப்படும். அந்த நேரத்தை, நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றனர்.
அந்த இறுதியானவனும் சம்மதம் தெரிவித்து, அந்த புலிக்கு இரத்தத்தையும், செயல்பட உயிரையும் அளித்தான்.
உயிர்பெற்ற அந்த புலி, அந்த நால்வரையும் அடித்துக்கொன்றது எனக்கதையை முடித்தது வேதாளம்.
பின்னர், மன்னனை பார்த்து, மன்னா! இக்கதையில் நால்வரும் இறப்பதற்கு யார் காரணம்? எனக்கேட்டது.
நால்வர் |
விக்ரமாதித்யனும் பதில் கூறத்தொடங்கினான்.
நால்வரும் ஏதோவொரு விதத்தில் காரணமாக இருந்தாலும், நால்வரும் இறக்க முக்கிய காரணம் இரத்தமும், உயிரும் அளித்த கடைசி வாலிபனே ஆகும்.
ஆபத்து வரும் என்று உணர்ந்த அவன், மற்றவர்களின் பேச்சைக்கேட்டு உயிர் அளித்திருக்க கூடாது.
ஆகையால், புலிக்கு உயிர் அளித்த கடைசி வாலிபன், அனைவரும் இறப்பதற்கு காரணம் என்றான்.
விக்ரமாதித்யன் சொன்ன சரியான பதிலைக்கேட்டு, கட்டுகளில் இருந்து விடுபட்டு சென்று மயானத்தை அடைந்தது. பின்னர், முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்க தொடங்கியது.
விக்ரமாதித்யன், தன்னுடைய விட முயற்சியால் வேதாளத்தை மீண்டும் பிடித்து கட்டி தூக்கிக்கொண்டு நடக்க தொடங்கினான்.
0 Comments