கதையின் தொடர்ச்சி,
சரவிளக்கு பேசுவதை கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
கணவனை காணாமல் கவலையில் இருந்த இளவரசி மிகவும் துயரத்துடன் இருந்தாள்.
ஆனால் இளவரசனை தூக்கி சென்ற ஏழு கன்னியர்களும், இளவரசனுடன் தினம் ஒருவர் என இன்பமாக பொழுதை போக்கிக்கொண்டு இருந்தனர்.
அப்பொழுது, அந்த ஏழு கன்னியர்களும், இளவரசனை மணந்த இளவரசி துயரத்தில் இருப்பாள். நாம் செய்தது தவறு என்று எண்ணினார்கள்.
அதனால் எட்டாவது நாளில் இளவரசனை, இளவரசியிடம் இருக்க செய்து பின்னர் அழைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தனர்.
ஆனால் இளவரசன் இளவரசியை பிரிந்த கணத்தில் இளவரசன் உடன் இருந்த நியாபகங்கள் மறக்க செய்தனர்.
பிரிவு |
இதுபோல, ஏழு நாட்கள் கன்னியர்களுடனும், எட்டாவது நாளில் இளவரசியுடனும் இளவரன் இருந்து வந்தான்.
இதன் விளைவாக, இளவரசி கருவுற்றாள். தான் எவ்வாறு கருவுற்றோம் என அறியாமல் இளவரசி குழம்பினாள்.
கணவன் இல்லாமல் கருவுற்றாள், என இளவரசனுடைய தாயும், தந்தையும் இளவரசியை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்தனர்.
இதுபோல தவறுகள் செய்பவர்களை, அந்த நாட்டின் எல்லையுள்ள, அடர்ந்த கொடிய காட்டில் இளவரசியை விட்டு வந்தனர்.
அந்த அடர்ந்த காட்டில் இளவரசி நடந்து செல்ல, கொடிய மிருகங்கள் அவளை நெருங்கியது.
அந்த இளவரசியை நெருங்கிய பொழுது, அவளது தூய்மையான பத்தினி தன்மை தெரிந்து விலகி சென்றன.
அப்பொழுது காட்டின் எல்லையில் உள்ள ஒரு மயானத்தில் தாசிப்பெண் ஒருத்தி தன்னுடைய மகளது சடலத்திற்கு தீ வைத்துக்கொண்டு இருந்தாள்.
அப்பொழுது இளவரசி, இனி வாழ்வது வீண் என முடிவு எடுத்து, உயிரை விட துணிந்தாள்.
பெண் |
இதை பார்த்த தாசிப்பெண், இளவரசியை தடுத்து, தன்னுடைய மகள் இறந்துவிட்டாள்.
எனக்கென்று யாருமில்லை. ஆகையால், எனக்கு மகளாக வா! என்று அழைத்தாள்.
அவள் பேசியதை உண்மையென நம்பி, இளவரசியும் தாசியுடன் சென்றாள்.
ஆனால், அந்த தாசிப்பெண் தான் ஒரு தாசி என்பதை மறைத்து இளவரசியை தன்னுடன் அழைத்து சென்றாள்.
இளவரசி பெண் குழந்தை பெற்று எடுத்தால், அந்த குழந்தையை தாசியாக்கவும், ஆண் குழந்தை எனில் கொல்லவும் முடிவு செய்தாள்.
மாதங்கள் ஓடின. இளவரசி அழகான ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள்.
இதைக்கண்ட தாசி, அக்குழந்தையை மருத்துவம் பார்க்கும் பெண்ணிடம் கொடுத்து கொல்ல சொன்னாள்.
பின்னர், எவ்வாறாவது இளவரசியை தாசியாக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.
அந்த குழந்தையை மருத்துவம் பார்க்கும் பெண் கொல்லாமல், ஊர் எல்லையில் குழந்தையை வைத்து விட்டு, யாரவது, அந்த குழந்தையை எடுத்துக்கொள்வார்கள் என எண்ணினாள்.
ஊர் எல்லை |
ஆனால், அந்த குழந்தை வைத்துள்ள இடத்தின் அருகில் பாம்பு புற்று ஒன்று இருப்பதை, அவள் கவனிக்கவில்லை.
இளவரசி கண் விழித்து பார்க்கும் பொழுது, குழந்தை இல்லாததை கண்டு மனவேதனை அடைந்தாள்.
தாசிப்பெண் அவளிடம் குழந்தை இறந்து பிறந்ததாக பொய் கூறினாள்.
இதனை கேட்டு இளவரசி, தான் ஒரு அதிஷ்டம் இல்லாதவள் என்று நொந்துப்போனாள்.
பாம்புப்புற்றிற்கு அருகில் இருந்த குழந்தை அழுத்தொடங்கியது. அந்த அழுகுரலை கேட்டு, அந்த புற்றில் வசித்து வந்த ஐந்து தலை பாம்பு ஒன்று வெளியில் வந்தது என கதையை சரவிளக்கு முடித்தது.
விக்ரமாதித்யனும், அங்கிருந்த அனைவரும் ஏன் கதையை முடித்து விட்டாய்.
மேலும் கூறு எனக் கேட்க, சரவிளக்கு தனக்கு மீதியுள்ள கதை தெரியாது என்றது.
இளவரசியும், அங்கிருந்தவர்களும் விடாமல் கேட்க, விக்ரமாதித்யன் மீண்டும் சரவிளக்கிடம் மீதமுள்ள கதை தெரியும் என கேட்டான்.
தலையணை |
அதற்கு சரவிளக்கு இளவரசி வைத்துள்ள தலையணைக்கு தான் மீத கதை தெரியும் என்றது.
விக்ரமாதித்யன் தலையணையிடம் கதையை கேட்க, வேதாளம் சரவிளக்கிடம் இருந்து தலையணையில் நுழைந்து பேச தொடங்கியது.
தலையணை, நான் எவ்வாறு கதையை கூறுவது இளவரசி என் மீது சாய்ந்துள்ளார் என்றது.
இதைக்கேட்ட இளவரசி, நாணத்துடன் தலையணையை விக்ரமாதித்யனிடம் தூக்கி எறிந்தாள்.
தலையணையும், கதை சொல்ல தொடங்கியது.
தொடரும்...
0 Comments